அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழரசுக் கட்சி எவ்வாறான முடிவுகளை அமுல் படுத்த உள்ளது-மன்னாரில் எம்.ஏ.சுமந்திரன் கருத்து.

 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில்   அடம்பன் பகுதியில் பொதுமக்கள் சந்திப்பு இன்றைய தினம் சனிக்கிழமை(28) மதியம் இடம் பெற்றது.


இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில்  தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார்.


 இதன் போது  முன்னாள் போராளிகள், பொது மக்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இக்கலந்துரையாடலில்  தமிழரசு கட்சியின்  பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


இக் கலந்துரையாடலில்  இலங்கை தமிழரசுக் கட்சி செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து   விளக்கம் அளிக்கப்பட்டது.


 மேலும் எதிர்வரும் காலங்களில்   இலங்கை தமிழரசுக் கட்சி எவ்வாறான முடிவுகளை செயல்படுத்த உள்ளமை என்பது தொடர்பாகவும் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவு படுத்தினார்.






இலங்கை தமிழரசுக் கட்சி எவ்வாறான முடிவுகளை அமுல் படுத்த உள்ளது-மன்னாரில் எம்.ஏ.சுமந்திரன் கருத்து. Reviewed by Vijithan on February 28, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.