அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேச உதைபந்தாட்ட கிண்ணத்தை விடத்தல்தீவு சுவீகரித்தது .!!-Photos



மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேசத்தின் கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டியில் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டு கழகமும் ,அந்தோனியார் புரம், புனித அந்தோனியார் விளையாட்டு கழகமும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இருந்தது.

இன்றையதினம் 27 - 07 - 2015 திங்கட்கிழமை மாலை அடம்பன் பிரதேசசபை மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் 1 ; 00 என்ற கோலின் அடிப்படையில் அந்தோனியார் புரம் புனித அந்தோனியார் விளையாட்டு கழகத்தை வெற்றியீட்டி இவ் நடப்பாண்டுக்கான முதலாவது சிறந்த அணியாக தெரிவாகியுள்ளது . 

இவ் இறுதியாட்டத்தில் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் சார்பாக செல்வன் ஸ் .லிதர்சன் கோலினை பதிவாக்கியுள்ளார் .

வெற்றியீட்டிய வீரர்களுக்கும் ,கழக நிர்வாகத்தினருக்கும் ,பங்குத்தந்தை அருட்பணி செல்வநாதன் பீரிஸ் அடிகளாருக்கும் பாராட்டுக்கள் 



மாந்தை மேற்கு பிரதேச உதைபந்தாட்ட கிண்ணத்தை விடத்தல்தீவு சுவீகரித்தது .!!-Photos Reviewed by NEWMANNAR on July 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.