முஸ்லிம்கள் த.தே.கூ. வுக்கு வாக்களிக்க முஸ்தீபு,,,
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூதூர் முஸ்லிம்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மூதூரிலிருந்து வேட்பாளர் ஒருவரை நியமிக்காமையே இதற்கான காரணம் என கூறப்படுகின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான கே.எம். தௌபீக் என்பவரை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை புறக்கணித்ததுடன் இறுதிவரை ஏமாற்றியதுமே இதற்கான காரணமாகும்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை ஒன்றையும் கடந்தவாரம் மூதூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் போனஸ் ஆசனம் ஒன்றை தருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்தே கே.எம். தௌபீக் ஆதரவாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.

Reviewed by Author
on
July 27, 2015
Rating:
Reviewed by Author
on
July 27, 2015
Rating:

No comments:
Post a Comment