உலகின் இராட்சத பூ ஐந்து ஆண்டுகளின் பின் பூத்தது....
உலகின் பழையதும் பெரியதும் என நம்பப்படும் இராட்சதப் பூ ஜப்பானில் ஐந்து ஆண்டுகளின் பின் பூத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
டைட்டன் அரூம் என்ற இந்த அரிதான பூ 2 மீற் றர் (6.5 அடி) உயரத்திற்கு பூத்திருப்பதால் அதனை பார்க்க மக்கள் முண்டிய டித்து வருகின்றனர். சொபு நகரில் ஜpன்டாய் தாவரவி யல் பூங்காவில் இருக்கும் இந்த பூ பு+த்து இரண்டு தினங்களுக்குள் நூற்றுக் கணக்கானோர் வரிசை யில் நின்று அதனை பார்த்து வருகின்றனர்.
இந்தோனே'pயாவின் சுமாத்திரா தீவை பூர்வீகமாக கொண்ட இந்த பூ தனது 40 ஆண்டு வாழ் நாளில் மூன்று அல்லது நான்கு தடவைகளே பூப்பதாக கருதப்படுகிறது. அத்துடன் அது இரண்டு அல்லது மூன்று நாட்களே பூத்திருப்பதாகவும் கருதப்படுகிறது. குறித்த பூங்காவில் இந்த பூ கடைசியாக 2010 ஜ{லையிலேயே பூத்திருந்தது.
உலகின் இராட்சத பூ ஐந்து ஆண்டுகளின் பின் பூத்தது....
Reviewed by Author
on
July 28, 2015
Rating:

No comments:
Post a Comment