சிம்பாப்வே கிரிக்கெட் சபை தலைவருக்கு எதிராக உத்செயா புகார்

சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உத்செயா அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் சேர்மன் வில்சன் மனசேவுக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் உத்செயா தெரிவித்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிம்பாப்வே கிரிக்கெட் சபையின் நிர்வாக இயக்குனர் அலிஸ்டைர் கேம்பல் என்னிடம் இனவெறியுடனும் உள்நோக்கத்துடனும் நடந்து கொண்டார்.
உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்று விளையாடிய லெவன் அணியில் என்னை தேர்வு செய்யவிடாமல் செய்தார்.
2010- 2012 ஆம் ஆண்டில் கிரிக்கெட் குழுவின் தலைவராக கேம்பெல் இருக்கையில் சிம்பாப்வே கிரிக்கெட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் வெள்ளை இனத்தவர்களுக்கு பயிற்சியாளர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பில் முக்கியத்துவம் அளித்தார்.
சுயநலத்துடன் சிம்பாப்வே கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தலை கவனிக்கும் வகையில் விளையாட்டு நிறுவனம் தொடங்கினார்.
அத்துடன் சிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் நிதி நிலையை சீர்குலைத்தார். எனக்கு நடந்த இனவெறி கொடுமை சிம்பாப்வே கிரிக்கெட்டில் நீண்ட காலமாக இருந்து வருகிறது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
சிம்பாப்வே கிரிக்கெட் சபை தலைவருக்கு எதிராக உத்செயா புகார்
Reviewed by Author
on
July 22, 2015
Rating:
Reviewed by Author
on
July 22, 2015
Rating:

No comments:
Post a Comment