அண்மைய செய்திகள்

recent
-

பத்து மாவட்டங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் விநியோகம்


பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பத்து மாவட்டங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது.

ஏனைய மாவட்டங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை இன்று விநியோகிக்கவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிடுகின்றார்.

இந்த வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 1151 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் மூலம் 196 மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
பத்து மாவட்டங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் விநியோகம் Reviewed by NEWMANNAR on July 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.