தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை,,,

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்ற தனியார் துறை ஊழியர்களுக்கு 4 மணித்தியாலங்களுக்கு குறையாத விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணையாளர் தனியார் துறைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இவ்விடுமுறை காலத்திற்காக சம்பளத்தை குறைக்காது, விசேட விடுமுறையாக வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். வாக்களிப்பு நிலையத்திலிருந்து கடமையாற்றும் இடத்தின் தூரத்தைப் பொறுத்து இந்த விடுமுறையை பின்வருமாறு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
40 கி.மீற்றரை விட குறைவாயின் – ½ நாள்
40 - 100 கி.மீற்றராயின் – 1 நாள்
100 - 150 கி.மீற்றராயின் – 1 ½ நாள்
150 கி.மீற்றருக்கு அதிகமாயின் – 2 நாட்கள் விடுமுறை
தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிக்க விடுமுறை,,,
Reviewed by Author
on
July 28, 2015
Rating:

No comments:
Post a Comment