மன்னார் வட்டக்கண்டலில் டெலோ வின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு.-Photos
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று திங்கட்கிழமை(27) மாலை 8 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டகண்டலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தின் தலைவரும்,வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் குறித்த அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் ஞானசீலன் குணசீலன், மன்னார் நகரசபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானபிரகாசம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஊர் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதன் போது பல நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் வட்டக்கண்டலில் டெலோ வின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
July 28, 2015
Rating:
No comments:
Post a Comment