பசில் ராஜபக்ஷவினால் முருங்கன் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அபிவிருத்திக்கென பல பில்லியன் ஒதுக்கீடு!! அந்தப்பணத்திற்கு என்ன நடந்தது?
2013,2014ல் பசில் ராஜபக்ஷவினால் முருங்கன் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அபிவிருத்திக்கென பல பில்லியன் ஒதுக்கீடு!! அந்தப்பணத்திற்கு என்ன நடந்தது?நாடளுமன்றில் கேள்ளி எழுப்பிய இ.சாள்ஸ் நிமலநாதன்
கடந்த 7ம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் பசில் ராஜபக்ஷவினால் முருங்கன் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அபிவிருத்திக்கென பல பில்லியன் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது அந்தப்பணத்திற்கு என்ன நடந்தது?நாடளுமன்றில் கேள்ளி எழுப்பியுள்ளார்
அவர் நாடாளுமன்றில் உரையாற்றுகையில்
2013, 2014 காலப்பகுதியில் பசில் ராஜபக்ஷ தலைமையில் முருங்கன் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு குளங்கள், வாய்க்கால்கள் புனரமைப்பதற்கு பல பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்தக்குளங்களும் புனரமைப்பு செய்யப்படவில்லை. அந்தப்பணத்திற்கு என்ன நடந்தது? என்பதை இந்த அரசு கண்டறிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முருங்கன் நீர்ப்பாசனத் திணைக்களத்திலும், மாந்தை கமநல கேந்திர நிலையத்திலுமுள்ள அதிகாரிகள் தொடர்பாக விவசாயிகள் மனவேதனை அடைகிறார்கள். அதிகளவு அதிகாரிகள் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள். அவர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்றும் சில நாட்கள் கையொப்பமிட்டுவிட்டு மீண்டும் சென்று விடுகின்றார்கள் என பல குற்றசாட்டுகளை முன்வைக்கின்றனர் இதனால் விவசாயிகள் வேதனையடைகின்றார்கள். இந்த நடவடிக்கைகளை அரசு கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
குளங்களில் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்குகின்ற போது பல முறையற்ற செயற்பாடுகள் நடக்கிறது. இதை தவிர்ப்பதற்காக விவசாய அமைப்புக்களுடன் கலந்தாலோசித்து அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். (இவ் விடையம் மாந்தை மேற்கு பிரதேசத்திலேயே அதிகமாக நடைபெறுகிறது).
முருங்கன் கட்டுக்கரை குளத்திலுள்ள நீரிற்கேற்ப சிறுபோக பயிர்ச்செய்கைக்குரிய நிலங்களின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் மேலதிகமாக நிலங்கனை கமநலசேவை அதிகாரியும், நீர்ப்பாசன பொறியியலாளரும் இணைந்து வழங்கி அதனால் வரும் பணத்தை அவர்கள் சொந்த தேவைக்கு பிரித்து எடுக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு விசாரித்து அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கூறிய விடையங்கள் யாவும் விவசாயிகள் மனதில் உள்ள ஏக்கங்கள. இதனை போக்கி இந்த அரசு நல்லாட்சி அரசு என்று உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
விவசாயிகளின் மொத்த நெல் உற்பத்தியில் 50மூ நெல்லை அரசு கொள்வனவு செய்வதாக உறுதியளித்தும் உற்பத்தியில் 20மூ நெல்லை மாத்திரம் அரசு கொள்வனவு செய்கிறது. மிகுதி நெல்லை விலை குறைவாக விற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகின்றது. விவசாயிகளின் முழு உற்பத்தி நெல்லையும் அரசு கொள்வனவு நிலையங்கள், களஞ்சிய சாலைகளை அதிகரித்து விவசாயிகள் சிரமத்தைப் போக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
யுத்தத்தில் வன்னி மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். வறிய மக்கள் அதிகளவு வன்னியிலேயே வாழ்கின்றனர் என்று புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றது. இவர்கள் விவசாயம் செய்வதற்காக வங்கியில் பெற்ற கடனை வறட்சி காரணமாக கடனை செலுத்த முடியாமல் மிகவும் மனவேதனைக்கு உள்ளாகியுள்ளார்கள். இவர்களின் விவசாயக்கடனை தள்ளுபடி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
மன்னாரில் கடந்த காலங்களில் குளங்கள், வாய்க்கால்கள் புனரமைப்பு செய்யப்படவில்லை. முழை நீரை நம்பியே விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுகின்றார்கள். மழை காலங்களில் மழை நீரைச்சேகரிக்கும் அளவுக்கு குளங்கள் போதாததாகவுள்ளது. முல்வத்து ஓயா பெருக்கெடுக்கும்போது மன்னாரில் மக்கள் இடம்பெயர வேண்டி உள்ளது. ஆகவே குளங்கள், வாய்க்கால்களை புனரமைப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன என்றார்.
யுயெனெ
பசில் ராஜபக்ஷவினால் முருங்கன் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அபிவிருத்திக்கென பல பில்லியன் ஒதுக்கீடு!! அந்தப்பணத்திற்கு என்ன நடந்தது?
Reviewed by NEWMANNAR
on
October 13, 2015
Rating:

No comments:
Post a Comment