தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு-Photos
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரினால் இன்று (13) செவ்வாய்க்கிழமை அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்துகைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 4 இலுவைப்படகுகளில் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடல் றோர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
-மீனவர்கள் வருகை தந்த 4 இலுவைப்படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
-குறித்த இந்திய மீனவர்கள் 24 பேரூம் தலைமன்னார் கடற்படையினரினால் விசாரனைக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் இன்று(13) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
-கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின் குறித்த 24 இந்திய மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 21 மீனவர்களை எதிர்வரும் 28 ஆம் தகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் வயது குறைந்த ஏனைய மூவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சிறுவர் இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு-Photos
Reviewed by NEWMANNAR
on
October 13, 2015
Rating:
No comments:
Post a Comment