அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவிற்கு கடத்திச்செல்லப்படவிருந்த தங்க கட்டிகள் தலைமன்னாரில் மடக்கி பிடிப்பு -Photo

தலைமன்னார் கடற்பகுதியிலிருந்து தமிழகத்திற்கு பெருமளவு தங்கத்தை கடத்திச் செல்ல முயன்றவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்.சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் இன்று மாலை யாழ்.சுங்க திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 5 கிலோ நிறையுடைய 24 மில்லியன் பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டுள்ளதாகவும் எதற்காக? யாருக்கு? கொண்டு செல்லப்பட்டது? என்பது தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இந்தியாவிற்கு கடத்திச்செல்லப்படவிருந்த தங்க கட்டிகள் தலைமன்னாரில் மடக்கி பிடிப்பு -Photo Reviewed by NEWMANNAR on December 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.