பூமியின் மீது அரை மைல் அகலமான விண்கல் மோதுவதால் குறுகிய பனியுகம் தோன்றும் அபாயம்...
அரை மைல் அகலமான விண்கல்லொன்று பூமி மீது மோதும் பட்சத்தில் அதன் விளைவாக சிறிய பனியுகமொன்று தோன்றும் அபாயமுள்ளதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
0.6 மைல் அகலமுடைய விண்கல் பூமியின் மீது மோதும் பட்சத்தில் அதனால் பூமியின் வெப்பநிலை 8 பாகை செல்சியஸ் வரை வீழ்ச்சியடையும் என அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள நாசா நியோ ஆய்வுகள் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு விண்கல் மோதும் பட்சத்தில் மேலெழும் பெரும் தூசுப் படலம் காரணமாக பூமியை வந்தடையும் சூரிய ஒளி 20 சதவீதத்தால் குறையும் என அவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் பூமிக்கு மேலாகவுள்ள ஓசோன் படலத்தின் அளவு 55 சதவீதத்தால் குறைவடையும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
விண்கல் மோதுவதால் எழும் தூசுப் படலம் தணிய குறைந்தது 6 வருடங்கள் செல்லலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிறிய விண்கல்லொன்று பூமி மீது மோதி இந்த விளைவை ஏற்படுத்துவதற்கு 250மில்லியனில் ஒரு வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமியின் மீது அரை மைல் அகலமான விண்கல் மோதுவதால் குறுகிய பனியுகம் தோன்றும் அபாயம்...
Reviewed by Author
on
February 13, 2016
Rating:
Reviewed by Author
on
February 13, 2016
Rating:


No comments:
Post a Comment