பாடசாலைகளை 12 மணியுடன் மூடுமாறு கோரிக்கை
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடுமாறு இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாணச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கோரிக்கை முன்வைத்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக பல பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளை கல்வியமைச்சு எதிர்வரும் மே மாதம்வரை ஒத்திவைத்துள்ளது. இதனை எமது சங்கம் வரவேற்கிறது.
இந்த வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அத்துடன், நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பாடசாலை நேரங்களில் குடிநீருக்காக மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு அனைத்துப் பாடசாலைகளையும் நண்பகல் 12 மணியுடன் மூடும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
March 28, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 28, 2016
Rating:

No comments:
Post a Comment