முதன்முதலாக பாகிஸ்தான் செல்கிறார் போப் பிரான்சிஸ்!
இஸ்லமபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்று, போப் பிரான்சிஸ் இந்த ஆண்டு இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுக்கு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானுக்கு வருமாறு போப் பிரான்சிஸ்-க்கு, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தை, கடந்த மாதம் வாட்டிகனுக்கு சென்ற அப்போதைய பாகிஸ்தானின் ஒரேயொரு அமைச்சர் கம்ரான் மைக்கேல், போப் பிரான்சிஸிடம் வழங்கினார்.
இந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட போப் பிரான்சிஸ், நவாஸ் ஷெரீப்பின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சக வட்டாரங்கள், ''போப் பிரான்ஸிஸ் பாகிஸ்தான் வருவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டார். அவரது பயணத்திற்கான தேதியை பரஸ்பர ஆலோசனைகளின்படி இறுதி செய்து வருகிறோம்'' என தெரிவித்துள்ளன.
போப் பிரான்சிஸ் தனது பாகிஸ்தான் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் நவாஸ் ஷெரீப் மற்றும் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் ஆகியோரை சந்தித்து பேசுவார் எனவும், பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவ மக்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசுவார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய மத அவமதிப்பு சட்டத்தை திருத்தக்கோரி போராட்டம் நடத்தியதால், கடந்த 2011-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஷாபஸ் பாட்தியை புனிதராக அறிவிப்பது குறித்தும், போப் பிரான்சிஸ் பயணத்தின் போது சில நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதன்முதலாக பாகிஸ்தான் செல்கிறார் போப் பிரான்சிஸ்!
Reviewed by Author
on
March 03, 2016
Rating:

No comments:
Post a Comment