அண்மைய செய்திகள்

recent
-

போக்குவரத்து நியதிச் சட்டம் சபையில் சமர்ப்பிப்பு...-Photos

கடந்த வாரம் 25.02.2016 வட மாகாண சபையின் 46 வது அமர்வு நடைபெற்ற போது வட மாகாணத்திற்குள் போக்குவரத்து சேவைகளையும், பொருட்கள் கொண்டு செல்லும் சேவைகளையும் ஒழுங்கு படுத்தவும், நிர்வகிக்கவும், மேற்பார்வை செய்யவும் மற்றும் கட்டுப்படுத்துவதற்குமான நியதிச் சட்டத்தினை வட மாகாண சபையில் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

மேற்படி நியதிச் சட்டத்தினை சமர்ப்பித்த அமைச்சர் பின்வரும் கருத்துக்களையும் முன்வைத்திருக்கின்றார். குறிப்பாக கடந்த காலங்களில் இயற்க்கை மரணத்தைவிட விபத்துக்களினால் ஏற்பட்ட மரணமே அதிகம் எனவும், இதற்கு பல்வேறு கரணங்கள் காணப்படுவதாகவும் குறிப்பாக போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சாரதிகளின் அசமந்தப்போக்கு, கண்மூடித்தனமான போட்டித்தன்மை, வீதி ஒழுங்குகளை முறையாக பின்பற்றாமை, பொது மக்களின் கவனயீனமும், வீதி ஒழுங்குகளை பின்பற்றாமையுமே முக்கிய காரணங்களாகும் என தெரிவித்தார்.
மேலும் மேற்படி நியதிச் சட்டத்தின் ஊடக பிரயாணிகளின் அதிக உச்ச நலன் மற்றும் பாதுகாப்பானதும் செளகரியமனதுமான சேவை உறுதிப்படுத்தப்பட இருக்கின்றது எனவும் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்ததோடு இன் நியதிச்சட்டத்தினூடக வட மாகாண வீதிப்பயண போக்குவரத்து அதிகாரசபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு வட மாகாணம் முழுவதும் ஏறக்குறைய 150 பேரிற்கு மேல் வேலை வாய்ப்பு வழங்க முடியும் எனவும் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
அத்தோடு கீழே இணைக்கப்பட்டுள்ள நியதிச் சட்டம் தொடர்பாக, தனது நண்பர்கள், புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறுமதியான கருத்துக்களையும், திருத்தங்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துநிற்கின்றார், மேலும் தங்களது ஆலோசனைகளை எதிர்வரும் 2016-03-08 ஆம் திகதிக்கு முன்னர் முகநூல் ஊடாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், தங்களது ஆலோசனைகள் பொதுமக்களது உயிர் மற்றும் அவர்களது நலன் போன்றவற்றை பாதுகாக்க உதவும் என்ற நம்பிக்கையினையும் தெரிவித்துநிற்கின்றார்.
-----------------------------------------------------------------------------------------
PART - 01...
வீதிப்பயணப் போக்குவரத்து அதிகார சபையின் நியதிச்சட்டம்
(வடக்கு மாகாணம்)
வடக்கு மாகாணத்தின் இந்த நியதி சட்டமானது, இந்த மாகாணத்தில் வீதிப்பயண போக்குவரத்தை ஒழுங்கு படுத்தலுக்கான ஒரு அதிகார தாபனத்தை அமைக்கும் மேற்கூறிய நோக்கத்துக்காக வடமாகாணத்தில் உள்வரும் அல்லது வெளிச்செல்லும் பயணிகள் வாகனத்தின் போக்குவரத்து சேவையை ஒழுங்குபடுத்தி கண்காணிப்பு செய்தலுக்கான கடமைகளையும் உரிமைகளையும் குறித்துரைப்பதற்கான ஒரு அதிகார சபையை தாபிப்பதற்கும் அதனோடு தொடர்புடைய அல்லது அதனால் நேரிடுகின்ற சகல விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கான நியதிகளையும் கொண்டது.
இந்த நியதிச் சட்டம் 1983 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க தனியார் ஒம்னி பஸ் சட்டத்துக்குக்கும் மோட்டார் போக்குவரத்து திருத்த சட்டத் (44 ஆம் அதிகாரம்) துக்கும் ஒத்திசைவு அற்றதாகும்.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வடக்குமாகாண சபையினால் கீழ்க்காட்டப்பட்டவாறு நியதிச் சட்டம் ஆக்கப்படுகின்றது:
சுருக்கப்பெயர்
செயற்படும் திகதி இந்நியதிச்சட்டம் வடக்கு மாகாணசபையின் 2016 ஆம் ஆண்டின் ..…. ஆம், இலக்க “வடக்கு மாகாண வீதிப்பயணப் போக்குவரத்து நியதிச்சட்டம்” எனக் குறிப்பிடப்படுவதுடன் இது ஆளுநர் இசைவு பெறப்படும் தினத்திலிருந்து அமுலுக்கு வருதல் வேண்டும்.
முகவுரை : வடக்கு மாகாண சபையின் கொள்கையானது
(அ) வடக்கு மாகாணசபை நியாயாதிக்க எல்லைக்குள் பொதுமக்களினது போக்குவரத்து தேவைப்பாடுகளையும் பொருட்களைக் கொண்டு செல்லும் தேவைப்பாடுகளையும் பூர்த்தி செய்வதற்கு போதுமானதும் தரம் வாய்ந்ததுமான சேவைகளை திறம்பட மேம்படுத்தலும் அச்சேவையை பயனுறுதியுள்ள சேவையாக வடக்கு மாகாணம் முழுவதும் நியாயமான முறையில் விரிவுபடுத்தல், தொடர்புடைய விடயங்களை ஒழுங்குபடுத்தல், கட்டுப்படுத்தல், மற்றும் நிர்வகித்தல் என்பவற்றுக்கு பொறுப்புள்ள அதிகார தாபனமாயிருத்தல்
(ஆ)மேற்கூறிய சேவைகளை வழங்குவதைத் தவிர அரச தனியார் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு இடையில் பொறுப்புள்ள போட்டித்தன்மை வாய்ந்த சூழலை ஏற்படுத்தி பயணிகள் போக்குவரத்தில் பாதுகாப்பானதும், ஏற்றதும், வசதியையும் சௌகரியத்தையும் மேம்படுத்தக்கூடிய திறமை வாய்ந்த சேவையை வழங்குதல்
(இ) வீதி பயண சேவைக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளையும் வேறு சேவைகளையும் ஒழுங்கு விதிகளுக்கு அமைய வழங்குதல்.
(ஈ) வெளி மாகாணங்களில் இருந்து வட மாகாணத்தினுள் பிரவேசிக்கும் வாகனங்கள் வடமாகாண வீதிப்பயண போக்குவரத்து அதிகார சபையின் நியதிச்சட்ட பிரமாணங்களுக்கு அமைய ஒழுகுதல்.
பகுதி ஐ
வடக்கு மாகாண வீதிப்பயண போக்குவரத்து அதிகாரசபையைத்
தாபித்தல்
அதிகாரசபை
துணை நிறுவனங்கள்
(1) (1) இவ்வதிகார சபை வடக்கு மாகாண அதிகாரசபை “வடக்கு மாகாண வீதிப்பயண போக்குவரத்து அதிகாரசபை எனக் குறிப்பிடப்படும். (இதனகத்து இச்சபையானது அதிகாரசபை என்றே குறிப்பிடப்படும்)
(2) அதிகாரசபையானது 1.1 ஆம் பிரிவின்படி அதன்மீது அளிக்கப்படும் பெயர் நாமத்தில் ஒரு கூட்டிணைக்கப்பட்ட தாபனமாகுதல் வேண்டும். அத்துடன் இடையறாத வழியுரிமை கொண்டதாகவும் பொது இலச்சினை ஒன்றை வைத்திருக்கவும் அதிகாரம் கொண்டதாக இருத்தல் வேண்டும். அதிகாரசபையினால் அதன் பெயரில்; வழக்குதாக்கல் செய்வதற்கும் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதற்கும் இயலுமாதல் வேண்டும்.
(3) அமைச்சரின் முன் அங்கீகாரத்துடன் மாகாண அதிகார சபையால் காலத்துக்குக் காலம் தேவைப்படுகின்ற கிளை அலுவலகங்களை நிறுவி அவற்றை செயற்படுத்தலாம்.
அதிகாரசபையின் யாப்பு அ) அதிகாரசபையானது கீழ்க்காட்டப்படும் பதவிவழி உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும்:
i. வடக்கு மாகாணசபை நிதி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் பரிந்துரைக்கப்படுகின்ற மாகாண அமைச்சின் பிரதிச் செயலாளர், சிரேஸ்ட உதவிச் செயலாளர் பதவிக்குக் குறையாத அலுவலர் ஒருவர்,
ii. மாகாணப் போக்குவரத்து விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் வினவி அமைச்சரினால் பரிந்துரைக்கப்படுகின்ற பொறியியலாளர் ஒருவர்.
iii. வீதிப்பயணப் போக்குவரத்து விடயத்திற்கு பொறுப்பான மாகாண அமைச்சின் செயலாளர் அல்லது அவருக்குப் பதிலாக அமைச்சின் சிரேஸ்ட உத்தியோகத்தர்.
iv. மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும்
v. மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்
நியமிக்கப்படும் உறுப்பினர்கள (ஆ) பதவிவழியற்ற நியமன உறுப்பினர்கள்
i. அமைச்சரினால் நியமனம் செய்யப்படுகின்ற, மாகாண சபை நியாயாதிக்க பிரதேசத்தின் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் தனியார் பஸ்வண்டி முதலீட்டு கம்பனிகள் தமது ஒன்றியத்தின் ஊடாக பெயரிடுகின்ற வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அங்கத்தவர்கள் ஐவர்:
ii. வீதிப்போக்குவரத்து, வர்த்தகம், நிதியியல் மற்றும் நிர்வாகம் என்னும் துறைகளில் அனுபவம், தகைமை உள்ள அல்லது நல்ல ஆற்றல்களை கொண்டுள்ள அமைச்சரினால் நியமிக்கப்படுகின்ற இன்னும் ஐந்து உறுப்பினர்கள்.
iii. வடக்கு மாகாணத்தின் வீதிப்பயண ஒழுங்கையும் போக்குவரத்தையும் பிரதிநிதிப்படுத்துதல் தொடர்பாக அமைச்சரினால் நியமனம் செய்யப்படுகின்ற ஒருவர்.
iv. 1991ம் ஆண்டின் 37 இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படுகின்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவியதன் பின்னர் அமைச்சரால் நியமிக்கப்படுகின்ற போக்குவரத்து சபையின் முகாமையாளர் பதவிக்கு குறையாத பதவியை வகிக்கும் உத்தியோகத்தர்.
v. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரிடம் வினவியதன் பின்னர் அமைச்சரால் நியமிக்கப்படுகின்ற போக்குவரத்து சபையின் முகாமையாளர் பதவிக்கு குறையாத பதவியை வகிக்கும் ஒருவர்.
அதிகாரசபையின் தவிசாளர்
அதிகாரசபையிடம் காணப்படும் நிறைவேற்று அதிகாரங்கள்
(2)அ)அங்கத்தவர்களுள் பெரும்பான்மயினருடைய நம்பிக்கையினை வென்றெடுக்கக்கூடியவரும் மற்றும் அப்பதவியின் செயற்பாடுகளை நிறைவேற்றக் கூடியவருமான திறமைவாய்ந்த ஒருவரை அதிகாரசபையின் தலைவராக அமைச்சர் நியமிப்பார்.
(ஆ) சபை தனது நிறைவேற்று அதிகாரத்தை அதன் தலைவருக்கு கையளிப்பு செய்வதுடன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தலைவர் அதிகார சபையின் ஒத்திசைவோடு தனது அதிகாரத்தை பொது முகாமையாளருக்கும் அவர் ஊடாக ஏனைய பதவியினருக்கும் கையளிப்புச் செய்வார்
(இ) ஏதேனும் அவசரகால நிலை ஏற்படும் போது தலைவரால் கையளிக்கப்பட்ட கடமைகளை அவர் நிறைவேற்றுவதை தடுக்கமுடியாது
உறுப்பினர்கள் தகுதி இழத்தல் (3) எவரேனும் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக, மாகாண சபை உறுப்பினராக அல்லது உள்ளுராட்சிமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுமிடத்து அல்லது அவ்வாறான ஒருவர் நியமிக்கப்படுமிடத்து அவர் அதிகாரசபையின் உறுப்பினரொருவராக தொடர்ந்தும் செயற்படுவதற்கு தகுதியற்றவர் ஆவார்.
அமைச்சருக்கு சமர்பிக்க வேண்டிய தகவல்கள்
(4) எவரேனும் ஒருவரை அதிகாரசபையின் உறுப்பினரொருவராக நியமிப்பதற்கு முன் அந்நபர் அதிகாரசபையின் உறுப்பினராக அவரது பணிகளில் ஈடுபடும் போது நிதி தொடர்பிலான அல்லது அவ்வாறான வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்கு ஆளாகியவரல்ல என அமைச்சர் திருப்தி அடைதல் வேண்டும். இவ்வுபபிரிவின் கீழுள்ள பணிகளுக்காக அமைச்சர் அவர்களால் தேவையெனக் கருதும் சகல தகவல்களையும் வழங்குமாறு அவரினால் கோரப்படும் எச்சந்தர்ப்பத்திலாயினும் அத்தகவல்களை அதிகாரசபையின் உறுப்பினரொருவராக அமைச்சரினால் நியமிக்கப்பட்ட அல்லது அமைச்சரினால் நியமிக்கக் கருதும் எவராயினும் சரி அமைச்சருக்கு வழங்குதல் வேண்டும்.
அதிகாரசபையுடனான ஒப்பந்தங்கள்
(5) அதிகாரசபைக்கு எந்த அடிப்படையிலேனும் உறுப்பினரொருவர் நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அமைச்சரினால் தீர்மானிக்கப்படும் நியமிக்கப்படும் திகதியிருந்து அதிலிருந்து மூன்றுவருட காலத்திக்கு மேற்படாத ஏழாவது ஆவது உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய பதவி வகிக்கலாம். மேலும் அவர் ஏழாவது உப பிரிவின் கீழ் பதவியிலிருந்து விலக்கப்பட்டாலன்றி மீண்டும் நியமிப்பதற்கான தகுதியைக் கொண்டவராவர் எவ்வாறாயினும் அதிகாரசபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் வெற்றிடத்திற்கு அமைச்சரினால் நியமிக்கப்படும் உறுப்பினரொருவர்இ குறித்த காலத்திற்கு முன்னரே தான் பதவியை விட்டு விலகினால் அன்றி முடிவுறாமல் மீதமாகவுள்ள காலத்திற்கு மாத்திரம் பதவி வகித்தல் வேண்டும்.
பதவிக்காலம்
(6) நியமிக்கப்பட்ட ஒருவரின் பதவிக்காலம் ஏழாவது உபபிரிவின் ஏற்பாடுகளின் கீழ் அவரது அதிகாரசபையின் உறுப்புரிமைக்கால எல்லையாக இருத்தல் வேண்டும்.
அமைச்சரால் உறுப்பினர் அகற்றப்படுதல்
(7) ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களின் நிமித்தம் அமைச்சரினால் வர்த்தமான பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட பணிப்புரையின் மூலம் எவரேனும் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரை பதவியிலிருந்து விலக்கலாம்.
(8) அமைச்சரினால் ஏழாவது உப பிரிவின் கீழ் வழங்கும் பணிப்புரை அதிகாரசபையின் எவரேனும் உறுப்பினர் ஒருவர் தொடர்பிலாயின் குறித்த பணிப்புரை வர்த்தமான பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட தினத்தன்று அவ்வுறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும்.
உறுப்பினரொருவர் பதவியினை இராஜினாமாச் செய்தல்
(9) அதிகார சபையின் எந்தவொரு உறுப்பினராவது அமைச்சருக்குக் கடிதம் மூலம் அறிவிக்குமிடத்து எச்சந்தர்ப்பத்திலாவது அவர் வகிக்கும் பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாம்.
உறுப்பினர் சமூகம் கொடுக்காமை
தலைவர் சமூகம் கொடுக்காமை
(10) அதிகார சபையின் எந்தவொரு உறுப்பினராவது நோய் வாய்ப்படுமிடத்து அல்லது வேறேதேனும் பாதிப்புக்கு உள்ளாகுமிடத்து அல்லது இலங்கைக்கு வெளியே இருக்குமிடத்து அல்லது வேறேதேனும் காரணமாகுமிடத்து அவரது பணிகளை செய்வதற்கு தற்காலிகமாக தவறுமிடத்து அவருக்கான பணிகளில் ஈடுபடுவதற்கு (3)(அ) உபபிரிவின் ஏற்பாடுகளைக் கவனத்திற்கொண்டு வேறொரு நபரை சம்பந்தப்பட்ட அமைச்சர் நியமிக்கலாம்
(11). அதிகார சபையின் தலைவர் நோய் வாய்ப்படுமிடத்து அல்லது வேறு பாதிப்புக்குள்ளாகுமிடத்து அல்லது இலங்கைக்கு வெளியே இருக்குமிடத்து அல்லது ஏதேனும் காரணமாகுமிடத்து அதிகாரசபைத் தலைவர் அவர் பதவி சார்ந்த பணிப்பில் ஈடுபடுவதற்கு தற்காலிகமாக தவறுமிடத்து தலைவராக பதில் கடமையிலீடுபடுவதற்காக வேறு எவரேனும் ஒர் உறுப்பினரை அமைச்சர் நியமிக்கலாம்
உறுப்பினர்களுக்குரிய கொடுப்பனவுகள்
(12) அதிகார சபையின் சகல உறுப்பினர்களுக்கும் அல்லது எவரேனும் உறுப்;பினர் ஒருவருக்குää நிதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கக்கூடிய ஊதியம்ää கொடுப்பனவு மற்றும் வேறு செலவினங்கள் மாகாண அதிகார சபையின் நிதியத்திலிருந்து கொடுப்பனவு செய்யலாம்.
அதிகார சபையின் கூட்டங்களுக்கு தலைமை தாங்குதல்
(13) (அ) அதிகார சபையின் தலைவர் வருகை தரும் அதிகார சபையின் சகல கூட்டங்களுக்கும் அவர் தலைமை தாங்க வேண்டும். அதிகார சபையின் ஏதேனுமொரு கூட்டத்திற்கு வருகை தராதவிடத்து அப்போது வருகை தந்துள்ள பதவிவழி உறுப்பினரிடையே இருந்து குறித்த கூட்டத்திற்கான் ஒருவரை தலைவரை நியமித்தல் வேண்டும்.
(ஆ) கூட்டம் கூடல் வேண்டுமென அதிகார சபை கருதும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அதிகார சபையின் கூட்டம் கூடுதல் வேண்டும்.
(இ) அதிகார சபை கூட்டத்தின் போது வாக்கெடுக்கும் சந்தர்ப்பத்தில் வாக்குகள் சமனாக இருக்குமிடத்து தலைமை தாங்குபவர் அவருக்குரிய வாக்குக்கு மேலதிகமாக அறுதியிடும் வாக்கொன்றை உபயோகிக்கலாம்.
(ஈ) அதிகார சபையின் எந்தக் கூட்டத்திற்கும் வருகை தருகின்ற சபைக்கு வேண்டிய முழு அங்கத்தவர்களில் குறைந்தது அரைப்பகுதியினரை விட ஒருவர் அதிகமாக இருப்பதனை நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
(உ) இந்நியதிச்சட்ட ஏற்பாடுகளுக்கமைய அதிகார சபையின் கூட்டங்கள் தொடர்பிலும் அக்கூட்டங்களின் பணிகளை மேற்கொள்ளும் விதம் தொடர்பிலும் பணிகளின் கட்டளைக்கேற்ப அதிகார சபையினால் விதிகளை ஆக்கலாம்.
அதிகாரசபையில் வெற்றிடங்கள் செயற்ப்பாட்டிற்க்கு குந்தகம் ஏற்படாது
(ஊ). அதிகார சபையின் உறுப்பினர் வெற்றிடம் நிலவும் காரணத்தினாலோ அல்லது உறுப்பினர்களை நியமிக்கும் போதோ அல்லது பெயர் குறிப்பிடப்பட்ட போதோ ஏதேனும் தவறு நிகழுமிடத்து அதிகார சபையின் ஏதேனும் செயற்பாடுகள் அல்லது பணிகள் அதிகாரமற்றதாகக் கருதப்படமாட்டாது.
அதிகார சபையின் இலச்சினை
(14)அ).அதிகாரசபையின் இலச்சினை எப்போதும் தலைவரின் பாதுகாப்பிலிருத்தல் வேண்டும்
ஆ)அதிகாரசபை தீர்மானிக்கும் வகையில் அதிகாரசபையின் இலச்சினை மாற்றியமைக்கலாம்.
இ).தலைவரும் யாரேனும் சபை அங்கத்தவர் ஒருவரும் பிரசன்னமாகி இருந்து அவர்களின் வருகையை உறுதிசெய்யும் வகையில் உரிய ஒப்பந்தத்தில் அல்லது ஆவணத்தில் கை எழுத்திட்டாலன்றி அதிகாரசபையின் பொது இலச்சினையை ஆவணத்தில் பொறித்தலாகாது
பகுதி ஐஐ
அதிகாரங்கள், செயற்பாடுகள் மற்றும் அதிகாரசபையின் ஊழியர் குழாம்
அதிகாரங்களும் செயற்பாடுகளும்
(15) அதிகார சபையானது கீழ்க்காட்டப்படும் அதிகாரத் தத்துவங்களில் ஏதாவது ஒன்றையோ அல்லது எல்லாவற்றையையுமோ செயற்படுத்தலாம்:
கண்காணித்தலின் தரம்
(அ) மாகாணத்தினுள் போக்குவரத்து தேவைகளைப் ப10ரணப்படுத்துவதற்கு போதுமான ஏற்றுக்கொள்ளத்தக்க திருப்திகரமான வீதிப்பயண பொருட்கள்இ போக்குவரத்துச் சேவைகள் நடாத்தப்படுகின்றமையை சோதனையிடல்இ ஆய்வுகளை நடாத்துதல் மற்றும் குறித்த சேவைகளின் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அவசிய பணிப்புரைகளை வழங்குதல்.
நேர அட்டவணை
(ஆ) வீதிப்பயண போக்குவரத்து சேவைகளுக்கு முறைப்படியான தீர்மானங்களைக் கொண்ட கால அட்டவணையைத் திட்டமிடுதல், தயாரித்தல் குறித்த கால அட்டவணைக்கேற்ப வீதிப்பயண போக்குவரத்து சேவையை நடாத்த வேண்டுமென சகல போக்குவரத்து சேவைகளைச் சார்ந்தவர்களுக்கும் கட்டளையிடுதல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஒழுங்கு விதிகளை வகுத்தல்.
பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம்
(இ) 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் 08 ஆம் பிரிவின் (ஓ) உப பிரிவுக்கமைய மாகாணங்களுக்கிடையிலான வீதிப்பயண போக்குவரத்து சேவை தொடர்பில் அனுமதிப்பத்திர விநியோகித்தலுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடல்.
மாகாணங்களுக்கிடையிலான சேவைகள்
(ஈ) வடக்கு மாகாண சபை மற்றும் ஏனைய மாகாண சபைகளுக்கிடையே உரிய தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் போக்குவரத்துத் தேவைப்பாடுகளை ப10ரணப்படுத்தும் பொருட்டு இணைந்த சேவைகளைக் கொண்டதான சேவைகள் அல்லது மாகாணங்களுக்கிடையேயான சேவைகளை திட்டமிடல்இ நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒழுங்குவிதிகளை வகுத்தல்.
அனுமதிப் பத்திரங்கள் விநியோகித்தலும் ஏனைய செயற்பாடுகளும்
(உ) வீதிப் பயண போக்குவரத்துக்கான பஸ்வண்டிகளை உபயோகப்படுத்துவதற்கு அல்லது அனுமதிக்கப்பட்ட வேறு மோட்டார் வாகனங்களை ஈடுபடுத்துவதற்கு அதிகாரமளிக்கும் வீதிப் பயண சேவைகளுக்கு அனுமதிப் பத்திரங்கள் விநியோகித்தல்இ பதிவு செய்தல் அல்லது வேறு அதிகாரத்தை வழங்குதல்
நிபந்தனைகள்
(ஊ) மேற்குறித்த (ஆ) பிரிவில் காட்டப்பட்டுள்ளதன் படி அனுமதிப் பத்திரம் அல்லது பதிவு செய்வதற்கான நிபந்தனைகளைப் பணித்தல் சகல தரப்பினரும் குறித்த நிபந்தனைகளுக்கு இணங்கிச் செயற்படுகின்றமையை மேற்பார்வை செய்தல்
அறிக்கைகளையும், தகவல்களையும் சமரப்பித்தல்
(எ) அதிகார சபையின் இந்த நியதிச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய மற்றும் நிறைவேற்ற வேண்டிய அதிகாரங்களுக்குஇ செயற்பாடுகளுக்கு மற்றும் பணிகளுக்கு தேவையான அறிக்கைகளைஇ தகவல்களை வழங்குமாறு வீதிப்பயண சேவைகள் அனுமதிப்பத்திர உரிமையாளருக்கு பணிப்புரை வழங்கல் மற்றும் அதற்கான ஒழுங்குவிதிகளை வகுத்தல்.
கட்டணங்கள்
(ஏ) பயணிகள் அனுமதி பத்திரங்களை வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் மாற்றங்களை மேற்கொள்ளல் மற்றும் சேவைகளில் காலத்திற்கு காலம் மாற்றங்களை மேற்கொள்ளல், தீர்மானங்களை எடுத்தல் என்பன மேற்கொள்ளப்படும்
கட்டளைகளை ஆக்குதலும் அவற்றை நடைமுறைப்படுத்தலும்
(ஐ) கட்டளைகளை ஆக்குதலும் அவற்றை நடைமுறைப்படுத்தலும்
(i) வீதிப்பயண மற்றும் ஏனைய போக்குவரத்துச் சேவைகளுக்கான முதலீட்டாளர்களுக்கு விளக்கமளித்தல் வழிகாட்டல்களை வழங்குதல்இ வசதிகளையும் சௌகரியங்;களையும் செய்து கொடுத்தல் மற்றும் சகல போக்குவரத்து தொழில் சார்ந்தோர்களுக்குப் பயிற்சி அளித்தல், சான்றிதழ் விநியோகித்தல் மற்றும் குறித்த சேவைகளின் உபயோகத்திற்காக இணைத்துக் கொள்ளும் ஆளணியினருக்கு அறிவூட்டுதல் மற்றும் கம்பனி அல்லது ஆள்சார் சபையாக ஒழுங்குபடுத்தல்.
(ii) திருப்திகரமான சேவைகளுக்கான தேவைப்பாடுகளை பூரணப்படுத்தும் பொருட்டு அதிகார சபையால் அல்லது அதிகார சபை தொடர்புபட்ட கம்பனியால் அல்லது வேறு நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி நிலையம் ஒன்றைத் தாபித்தலும் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளலும்
(ஒ) ஏனைய வேறு சட்டத்திற்கும்இ பணிப்புகளுக்கும் ஏற்புடையதான இந்நியதிச்சட்டத்தின் கீழ் அதிகார சபையின் செயற்பாடுகளுக்காக தேவையெனக் கருதும் சகல ஒப்பந்தங்களுக்கும் உடன்படிக்கைகளுக்கும் நேரடியாக அல்லது இலங்கையில் எவரேனும் ஆளொருவருடன் கூட்டு வியாபாரம் போன்றதான நடவடிக்கைகளில் ஈடுபடல் மற்றும் அவற்றை நிறைவு செய்தல் அல்லது பூரணப்படுத்தல்.
(ஓ) அதிகாரசபைக்கு ஊழியர்களை நியமித்தல்இ வேலையிலிருந்து நீக்குதல் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்.
(ஒள) ஏதேனும் அசையும் அல்லது அசையாத சொத்துக்களை கைப்பற்றுதல், ஏற்றுக்கொள்ளல் அல்லது உரிமையாக்கிக் கொள்ளல் அல்லது வாடகைக்குவிடல், ஈடு வைத்தல், மெருகுபடுத்துதல், விற்பனை செய்தல் அல்லது வேறு விதத்தில் அகற்றுதல்.
(க) அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற ஏதேனும் சேவைகளுக்கு கட்டணம் அறவிடுதல்.
(கா) பணமாக அல்லது வேறு விதத்தினால் ஆன அன்பளிப்புக்கள், கொடைகள், நன்கொடைகள் மற்றும் உதவித் தொகைகள் ஏற்றுக்கொள்ளல் மற்றும் இந்நியதிச்சட்டத்தின் வேறு பணிப்புரைக்கு அமைய அதிகார சபையின் ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக அவற்றைப் பயன்படுத்தல்.
கட்டளை பிறப்பிப்பதற்கு அமைச்சருக்குள்ள அதிகாரம்.
கண்காணித்தல்
(16). (1) அதிகார சபை அதன் அதிகாரத் தத்துவங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக அமைச்சர் அதிகார சபைக்கு காலத்திற்குக் காலம் பொதுவான அல்லது விசேட கட்டளைகளை பிறப்பிக்கலாம் என்பதுடன் அதிகாரசபையானது அக்கட்டளைகளை நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
.
(2) அதிகார சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் தன்னால் பணிப்புரை வழங்கப்படுகின்ற மாதிரிப்படிவத்தின் மூலம் தனக்கு தவணை அறிக்கைகளை, கணக்குகளை மற்றும் ஏனைய தகவல்களை வழங்குதலும், அமைச்சரினால் காலத்திற்குக் காலம் அதிகாரசபைக்கு எழுத்துமூல பணிப்புரைகளை வழங்கலாம் என்பதுடன் அதிகார சபை அந்த எல்லாப் பணிப்புரைகளையும் நிறைவு செய்தல் வேண்டும்.
(3) மேற்குறிப்பிட்ட (1) ஆம் (2) ஆம் உப பிரிவின்படி அமைச்சருக்கூடாக முன்வைக்கப்படுகின்ற ஏற்பாடுகள் மாகாண சபையில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அரச நிபந்தனைகளுக்கு இணங்குதல் வேண்டும்
அதிகார சபைக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை கையளித்தல்
(17) அதிகார சபையினால் இந்நியதிச்சட்டத்தின்கீழ் அதற்குரிய ஏதேனும் அதிகாரம் ஒன்றை அதிகார சபையின் தலைவருக்கு அல்லது அதன் ஏதேனும் ஒரு அலுவலருக்கு எழுத்துமூலம் கையளிக்கலாம்.
பகுதி ஐஐஐ
நிரந்தர சேவைகளுக்கும் விசேட சேவைகளுக்குமான வீதிப்பயண போக்குவரத்து அனுமதிப்பத்திரம்.
போக்குவரத்து அனுமதிப்பத்திர ஏற்பாடுகளும் அது தொடர்பானவையும்
போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தின் கால எல்லை
சட்டரீதியற்ற பயணிகள் போக்குவரத்து
சட்டரீதியிலான நடவடிக்கைகள்
கட்டணங்கள்
விசேடமான அனுமதிப்பத்திரம்
வீதி பயணப் போக்குவரத்து பயணிகள் சேவை வாகனத்தின் வரைவிலக்கணம்
(18)(1) இதிலே (2) ஆவது உபபிரிவின் ஏற்பாடுகளின்கீழ் எவரேனும் ஆளொருவர் அல்லது ஏதேனும் நிறுவனத்தினால் இந்த நியதிச்சட்டம் வலுவுக்கு வரும் தினத்தன்று அல்லது அதன் பின்னர் அதிகார சபையினால் இந்த நியதிச்சட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட வீதிப்பயண போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தின் கீழன்றி கட்டணத்துக்காக அல்லது பிரதிபலனுக்காக வீதிப்பயண போக்குவரத்தின் பொருட்டு மாகாணத்தினுள்ளே பயணத்தை ஆரம்பிக்கும் நிரந்தர சேவை அல்லது விசேட சேவைக்காக பஸ்வண்டியை சேவையில் ஈடுபடுத்தலாகாது
(2) இந்த நியதிச்சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள், அதன் நடைமுறைப்படுத்தல் ஆரம்பிக்கும் தினத்தன்றோ, முன்னதான தினத்தன்றோ செல்லுபடியான வீதிப்பயண போக்குவரத்துக்கான நிரந்தர வீதிப்பயண போக்குவரத்து உத்தரவுப் பத்திரமோ அல்லது குறித்த நியதிச்சட்டத்தின்கீழ் நிரந்தர வீதிப்பயண போக்குவரத்து அனுமதிப்பத்திரமென கருதக்கூடிய வேறு ஆவணங்களோ இந்த நியதிச்சட்டத்தின்கீழ் முன்னரே செல்லுபடியற்றதாக்கினாலன்றி குறித்த உத்தரவுப்பத்திரத்தின் செல்லுபடிக்காலம் இந்த நியதிச்சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட வீதிப்பயண போக்குவரத்துச் சேவை அனுமதிப்பத்திரத்தின் காலமாகக் கருதலாம்.
(3) இந்த நியதிச் சட்டத்தின் 20 பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய வீதி பயணப்போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்ட பஸ்வண்டி அல்லது வேறு ஏதும் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத்தவிர ஏனைய வாகனங்களை ஈடுப்படுத்தலாகாது.
(4) இந்த நியதிச்சட்ட ஏற்பாடுகளை அல்லது அதன் கீழுள்ள ஒழுங்கு விதிகளை மீறும் எந்தவொரு வாகனத்தையும் அதிகாரசபையால் குறித்த பணிக்காக அதிகாரம் அளிக்கப்பட்ட எவரேனும் ஆளொருவரால் அல்லது எவரேனும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் தடைக்குட்படுத்தலாம் என்பதுடன் அவ்வாறு தடைக்குட்படுத்தப்படுத்திய வாகனத்தை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட குறித்த நீதவான் நீதிமன்றத்திற்கு தேவையற்ற காலதாமதமின்றி குறித்த வாகனத்தை முன்னளித்தல் வேண்டும் அல்லது முன்னளிக்கப்படல் வேண்டும்.
(5)(அ) ஏதேனுமொரு வாகனம் 4ஆவது உபபிரிவின் ஏற்பாடுகளின் கீழ் நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னளிக்கும் சந்தர்ப்பத்தில் நீதவான் அவர்களினால் வழக்கு விசாரணை முடிவடையும் வரை குறித்த வாகனத்தை தடுத்து வைக்கும் கட்டளை ஒன்றை அல்லது வழக்கு விசாரணைக்கேற்றவாறு நீதவான் அவர்களினால் பணிக்கின்ற நிபந்தனைகளின் கீழ் குறித்த வாகனத்தை விடுவிக்கும் கட்டளை ஒன்றை பிறப்பிக்கலாம். அல்லது
(ஆ) நீதவான் அவர்கள் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுக்கப்படுகின்ற சுருக்க முறை வழக்கு விசாரணையின் போது;
(i) முதல் தடவையாக குற்றவாளியாகக் காணப்பட்டால் அவர் ஐயாயிரம் ரூபாவிற்கு மேற்படாதவாறு தண்டப்பணத்தை செலுத்துவதற்கு அல்லது ஆறு மாதத்திற்கு மேற்படாத சாதாரண சிறைத்தண்டனைக்கு உட்படுத்துவதற்கு அல்லது தண்டப்பணமும் சிறைத் தண்டனையுமான இரண்டு வகைகளாலும் தண்டனைக்கு ஆளாகலாம்.
(ii) இரண்டாவது தடவையாக குற்றவாளியாகக் காணப்பட்டால் அவர் ஏழாயிரத்து ஐநூறு ரூபாவிற்கு மேற்படாதவாறு தண்டப்பணத்தை செலுத்துவதற்கு அல்லது ஒரு வருடத்திற்கு மேற்படாத சாதாரண சிறைத்தண்டனைக்கு உட்படுத்துவதற்கு அல்லது தண்டப்பணமும் சிறைத் தண்டனையுமான இரண்டு வகைகளாலும் தண்டனைக்கு ஆளாகலாம்.
(iii) மூன்றாவது தடவையாக குற்றவாளியாகக் காணப்பட்டால் அவர் பத்தாயிரம் ரூபாவிற்கு மேற்படாதவாறு தண்டப்பணத்தை செலுத்துவதற்கு அல்லது இரண்டு வருடத்திற்கு மேற்படாத சாதாரண சிறைத்தண்டனைக்கு உட்படுத்துவதற்கு அல்லது தண்டப்பணமும் சிறைத் தண்டனையுமான இரண்டு வகைகளாலும் தண்டனைக்கு ஆளாகலாம்.
(6) 4ஆவது உப பிரிவின் கீழ் தடைக்குட்படுத்திய வாகனத்தின் சாரதி, நடத்துநர், உரிமையாளர் அல்லது அதற்கு பொறுப்பாக இருந்த வேறு ஆளொருவர் போன்ற எவரேனுமொருவர் குறித்த தடைக்குட்படுத்திய விடயம் தொடர்பில் வாகன தடைக்கு உட்படுத்திய ஆளினால் வழங்கிய பணிப்புரைக்கு ஏற்றவாறு செயற்படாதவிடத்து அல்லது அதை அவ்வாறே செய்வதற்கு மறுக்குமிடத்து அவர் இந்த நியதிச்சட்டத்தின் கீழ் தவறொன்றை புரிந்த குற்றத்திற்கு ஆளாதல் வேண்டும் என்பதுடன் குற்றத்தீர்ப்பு அளிக்கப்பட்டதன்மேல் அத்தகைய குற்றமொன்றிற்கு ஐயாயிரம் ரூபாவிற்கு மேற்படாதவாறு தண்டப்பணத்தை செலுத்துவதற்கு அல்லது ஆறு மாதத்திற்கு மேற்படாத சாதாரண சிறைத்தண்டனைக்கு உட்படுத்துவதற்கு அல்லது தண்டப்பணமும் சிறைத் தண்டனையுமான இரண்டு வகைகளாலும் தண்டனைக்கு ஆளாதல்;.
(7) நிரந்தர வீதிப்பயண சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள ஏதேனும் பஸ்வண்டி அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வாகனம் ஒன்று குறித்த சேவையிலிருந்து விலகி வேறு விசேட சேவைக்காக ஈடுபடுத்தப்படுமிடத்து அதற்கான விசேடமான அனுமதிப்பத்திரம் ஒன்றை அதிகார சபையிடம் பெற்றுக்கொள்ளல் வேண்டும். அவ்வாறான விசேட அனுமதிப்பத்திரம் இல்லாமல் எந்தவொரு பஸ்வண்டியும் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வாகனமும் வடக்கு மாகாணத்தினுள் விசேட போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படலாகாது.
(8)முச்சக்கரவண்டி அல்லது பாடசாலை வேன் வண்டி அல்லது வீதிப்பயண போக்குவரத்து தொடர்பிலான அனுமதிக்கப்பட்ட வாகனமாக அதிகார சபையினால் பணிக்கப்படுகின்ற தினத்தன்று அதிகார சபையின் அனுமதிப் பத்திரமோ அல்லது பதிவு செய்யப்படாமல் வௌ;வேறான கட்டணமோ அறவிட்டு அல்லது வாடகை அடிப்படையில் கட்டணத்தை அறவிட்டு வீதிப் பயண போக்குவரத்து சேவையில் ஈடுபடுதலாகாது.
பஸ்வண்டி அல்லாத வேறு வாகனங்கள் வீதி பயணப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுதலாகாது. பஸ்வண்டி அல்லாத வேறு பயணிகள் போக்குவரத்து வாகனத்தை பதிவு செய்தல்ää ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் அது தொடர்பான ஏனைய விடயங்கள் பற்றி அதிகார சபையினால் ஒழுங்கு விதியொன்றை ஆக்கலாம்.
தகுதிச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளல்.
(19)(அ) பொருட்கள் மற்றும் வீதிப்பயண போக்குவரத்திற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற வண்டிகள் காலத்திற்குக் காலம் சோதனையிடப்பட்டு பயணத்திற்கு தகுதி வாய்ந்ததா? என உறுதிப்படுத்திக் கொள்ளும் தகுதிச் சான்றிதழ் வழங்குவதற்காக நிறுவனங்களை தெரிவு செய்து அதிகார சபையினால் பதிவு செய்தல் வேண்டும்.
(ஆ) அதிகார சபையினால் காலத்திற்குக் காலம் பதிவு செய்யப்படுகின்ற குறித்த நிறுவனம் ஏதேனுமொரு சட்டத்திற்கு உட்பட்டதாக அமைதல் வேண்டும்.
(இ) அதிகார சபையின் அதிகாரத்துடன் பதிவு செய்யப்படுகின்ற குறித்த நிறுவனம் மனிதவளங்கள், தொழில்சார் திறமைகள், தொழிநுட்பம் மற்றும் தேவையான உபகரணங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(ஈ) வீதிப் பயணப்போக்குவரத்திற்கு தகுதி வாய்ந்த வாகனங்களை குறித்த நிறுவனத்திடம் தகுதிச் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் ஒழுங்குகளும் அதிகாரங்களும் அதிகாரசபையினால் காலத்திற்குக்காலம் வகுக்கப்படும்.
வீதிப்பயண போக்குவரத்துச் சேவை அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்கான நடைமுறைகள்.
(20)இந்த நியதிச்சட்டத்தின் கீழ் வீதிப்பயண போக்குவரத்துச் சேவைகளுக்காக அனுமதிப்பத்திரம் (இதன் பின்னர் அனுமதிப்பத்திரம் என குறிப்பிடப்படும்) பஸ் வண்டியை பதிவு செய்த உரிமையாளரிடம்.
(அ) அவர் செல்லுபடியாகும் பஸ் வண்டி வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டிருப்பின் மற்றும்
(ஆ) குறித்த பஸ் வண்டி தனது பெயரில் 3 ம் தரப்பின் பாதுகாப்பிற்காக செல்லுபடியாகும் வரையறையற்ற காப்புறுதியை பெற்றுள்ளார் என உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சமர்ப்பித்தால் மாத்திரமே விநியோகித்தல் வேண்டும் அல்லாதவிடத்தில் விநியோகிக்கப்படல் ஆகாது.
(21)(1) அனுமதிப்பத்திரத்திற்கு அமைய, அது தொடர்பில் நடைமுறையிலுள்ள நிபந்தனைகளுக்கேற்ப, குறித்த அனுமதிப் பத்திரத்தின் மூலம் பணிக்கப்படுகின்ற பாதையால் அல்லது பாதைகளினால் வீதிப்பயணப் போக்குவரத்திற்காக நிரந்தர சேவையை நடாத்துவதற்கு பஸ் வண்டியின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் உரித்துடையவராகின்றார்.
(2) பஸ் வண்டியின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் அல்லாத எவரேனும் ஒருவருக்கு ஏதேனும் பஸ் வண்டிக்காக அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படல் ஆகாது. பஸ் வண்டி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது தகுதி வாய்ந்த குறிப்பி;ட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் சிறந்த சேவையினை ஏற்படுத்துவதற்காக அதிகார சபையினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற கம்பனி, முகாமைத்துவக் கம்பனி அல்லது அரச கம்பனிக்கான அனுமதிக்கப்பட்ட பாதையில் வாகனத்தை செலுத்துவதற்கான கூட்டு உத்தரவுப்பத்திரம் ஒன்றை வழங்கலாம.; அதற்காக அதிகாரசபை தேவையான கட்டளைகளை பிறப்பித்தல் வேண்டு;ம்.
(3) இந்நியதிச் சட்டத்தின் கீழ் ஒரே பஸ் வண்டிக்கு நிரந்தர சேவைக்காக ஒன்றுக்கு மேற்படாதவாறு எந்தவொரு ஆளுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படலாகாது.
(4) முன்னர் பெற்றுக்கொண்ட அனுமதிப்பத்திரம் இந்நியதிச் சட்டத்தின் கீழ் செல்லுபடியற்றதாகும் சந்தர்ப்பத்தில் 3 ஆவது உப பிரிவின் ஏற்பாடுகள் ஏற்புடையதாகாது.
(5) 3 ஆவது உப பிரிவின் ஏற்பாடுகள் மீறுகின்ற எவரேனும் ஆளொருவர் இந்நியதிச்சட்டத்தின் கீழ் தவறொன்றை புரிந்த தவறாளி ஆவார்.
பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணபம்
(22) (1) வீதிப்பயண சேவை அனுமதிப் பத்திரத்திற்கான சகல விண்ணப்பப் பத்திரங்களும் ஏதேனும் பஸ் வண்டி தொடர்பிலாயின் குறித்த பஸ் வண்டியின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரினால் அதிகார சபையினால் வழங்கப்படும் மாதிரிப்படிவத்தின் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
(2) அனுமதிப்பத்திரத்திற்காக விண்ணப்பிக்கின்ற சகலரும்
(1)வது உப பிரிவின் கீழ் உள்ள விண்ணப்பப்படிவத்துடன் கீழ் காட்டப்படும் விபரங்களையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
(i) விண்ணப்பப்படிவத்திற்குரிய பஸ் வண்டியின் பதிவிலக்கம், ஆசன எண்ணிக்கை மற்றும் உள்ளக உயரம்
(ii) 19 ஆவது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய பெற்றுக் கொள்ளப்பட்ட தகுதிச் சான்றிதழ்
(iii) வெவ்வேறு கட்டணத்திற்காக வீதிப்பயண போக்குவரத்தில் ஈடுபடக்கருதுகின்ற விண்ணப்பப் படிவத்திற்குரிய பஸ் வண்டியின் பயணம் ஆரம்பிக்கும் இடம், முக்கிய இடைத்தங்கல்கள், பயணம் முடிவடையும் இடம். வீதி இலக்கம், பயணத்தின் தூரம் (அண்ணளவாக) மற்றும்,
(iv) 15 ஆவது பிரிவின் கீழ் தனது தற்துணிவில் உபயோகப்படுத்துவதற்கு அதிகார சபைக்கு தேவையெனக் கருதும் வேறு விபரங்கள்
அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பப் படிவம் தொடர்பில்
(23)(1) (22) 2ஆவது உப பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் ஏற்புடையனவாறு அதிகார சபையினால் அனுமதிப்பத்திரம் விநியோகித்தல், புதுப்பித்தல் அல்லது ஒரு பாதையிலிருந்து இன்னொரு பாதைக்கு மாற்றம் செய்தல் அல்லது விநியோகித்தலை, புதுப்பித்தலை அல்லது ஒரு பாதையிலிருந்து இன்னொரு பாதைக்கு மாற்றுவதை மறுதலித்தல்.
(2) 1ஆவது உப பிரிவின் கீழ் அனுமதிப்பத்திர விநியோகம்,
புதுப்பித்தல் அல்லது ஒரு பாதையிலிருந்து இன்னொரு பாதைக்கு மாற்றுவதனை மறுதலித்தல் இந்நியதிச்சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் அல்லது அனுமதிப்பத்திர விநியோகம் செய்கின்ற ஏதேனும் ஒரு பாதை அல்லது பாதைகள் ஒதுக்குதல் தொடர்பில் அல்லது மாற்றுதல் தொடர்பில் தனக்குரிய தற்துணிவை அதிகார சபை நடைமுறைப்படுத்தும் போது வௌ;வேறான கட்டணத்திற்கு வீதிப்பயண போக்குவரத்து சேவைகள் நடாத்தும் போது குறித்த வசதிகள், தேவைப்படுகின்ற ஆட்கள் அத்தோடு வசதிகளை வழங்கும்ஆட்கள் உள்ளடக்கிய பொது மக்களினது பொதுவான நன்மை தொடர்பான அடிப்படை விடயங்களே கவனத்தில் கொள்ளப்படும் என்பதுடன் குறித்த தற்துணிபு நடைமுறைப்படுத்தும் போது கீழ்க் காணப்படும் விடயங்கள் பற்றி விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
(i)பொது நன்மைக்காக உத்தேச வீதிப்பயண போக்குவரத்து சேவை எந்தளவு தேவையானது அல்லது தகுதியானது எனுமிடத்து,
(ii) உத்தேச வீதியின் அல்லது வீதிகளின் தன்மைகள் பற்றிää
(iii) உத்தேச வீதியில் அல்லது வீதிகளில் அல்லது அவ்வாறான வீதிச் சேவையின் போக்குவரத்து தேவைப்பாடுகளில் தற்பொழுது போதுமான அளவு நிறைவு செய்யப்பட்டுள்ள ஏதேனும் சந்தர்ப்பங்கள் இருப்பின் அது எந்தளவு என்பன பற்றி
(iv) பொதுவான போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்ப பிரதேசத்தின் தேவைப்பாடு மற்றும் புகையிரத போக்குவரத்து உட்பட சகல வீதிப்பயண போக்குவரத்து சேவைகளையும் ஒருங்கிணைத்தல்.
(v) ஏதேனும் பிரதேசத்தில் அல்லது ஏதேனும் வீதியில் உள்ள (புகையிரத பிரயாணிகளுக்கு அளிக்கப்படுகிற வசதிகள் உட்பட) போக்குவரத்து வசதிகளை அதிகார சபையின் கருத்திற்கேற்ப குறித்த பிரதேசத்தில் அல்லது குறித்த வீதியின் ஊடாக பொதுமக்களுக்காக நடாத்தப்படுகின்ற போக்குவரத்து தேவைப்பாடுகள் நியாயமான அளவு நிறைவு செய்யப்படுமளவுக்கு திருப்திகரமானதாயின் மற்றும் வினைத்திறனானதாயின் பிரதானமாக குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து வசதிகளுடன் போட்டித்தன்மை வாய்ந்த வீதிப்பயண போக்குவரத்துக்கான அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பது உகந்ததாகாது,
(vi) குறித்த வீதிக்கு அல்லது வீதிகளுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள உரிமையாளர் ஒருவரினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப்படிவமொன்றின் அடிப்படையில் இன்னுமொரு அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதன் மூலம் திருப்திகரமற்ற விளைவுகளுக்கு ஆளாகலாம் என அதிகார சபை நியாயமான முறையில் கருதுமிடத்து. (போதுமான தரமான மற்றும் வினைத்திறனுடான சேவைகள் வழங்குவது உட்பட)
அனுமதிப் பத்திரத்தின் கால வரையறை
(24) (1) அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதற்கான தகைமை வாய்ந்த ஆட்களை தெரிவு செய்வதற்கு கேள்வி மனுக்கள் மூலம் அல்லது வேறு நியாயமான வழிமுறைகளை கையாள முடியும் என்பதுடன் அதற்காக அதிகார சபையினால் பணிக்கப்படுகின்ற அல்லது ஏற்றுக் கொள்ளத்தக்க கட்டணங்களைச் செலுத்தாமல் எந்தவொரு நபருக்கும் அனுதிப்பத்திரத்தை விநியோகித்தல் ஆகாது. இருப்பினும் ஏதேனும் பொது நிறுவனம் அல்லது வேறு அரச போக்குவரத்து நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு அமைய இப்பந்தி அவ்வாறே வலுவில் உள்ளது என கவனத்தில் கொள்ளல் ஆகாது. அதற்காக அதிகார சபை ஒழுங்கு விதிகளை ஆக்குதல் வேண்டும்.
(2) எல்லா வீதிப்பயண சேவைகளுக்கான அனுமதிப்பத்திரங்களும்;
(i) குறித்த மாதிரிப்படிவத்திற்கு அமைவாக இருத்தல் வேண்டும்;; அத்தோடு,
(ii) அதை முன்னரே செல்லுபடியற்றதாக்கினாலன்றி விநியோகிக்கப்பட்ட தினம்; தொடக்கம் 12 மாத காலத்திற்கு செல்லுபடியாகும்
(3) அனுமதிக்கான விண்ணப்பதாரி இலங்கைப் போக்குவரத்;துச் சபை அல்லது நிறுவனமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் பஸ் வண்டி ஒன்று ஒரு வீதியால் பல தடவைகள் ஈடுபடுத்தப்படுவதற்கான அனுமதி வழங்குவதோ அல்லது வழங்காமல் விடுவதோ என்பது அதிகார சபையின் தற்துணிவாகும்.
பயணிகளின் நன்மைக்காகவும் வேறு விடயங்களுக்காகவும் உத்தரவுப்பத்திரத்தில் உள்ளடக்க வேண்டிய நிபந்தனைகளும் சலுகைகளும்
(25) (1) இந்த நியதிச்சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் அதன் கீழ் ஆக்குகின்ற ஏதேனும் கட்டளைக்கு அமைய விநியோகிக்கப்படும் சகல வீதிப்பயண சேவைக்கான அனுமதிப்பத்திரங்களும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியங்களின் பொருட்டு பணிக்கப்படும் சகல நிபந்தனைகள்; உட்பட அதிகார சபையினால் தீர்மானிக்கப்படக் கூடிய கீழ்க்காட்டப்பட்டுள்ள நிபந்தனைகளும் உள்ளடக்கப்படுதல் வேண்டும்.
(2) அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் போது கீழ் காட்டப்படும் விடயங்கள் தொடர்பில் கவனத்தைச் செலுத்துதல் வேண்டும்;
(i) அறவிடப்படுகின்ற பிரயாணக் கட்டணம் அரசின் பொதுவான கொள்கைக்கு ஏற்புடையனவாறு அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பதுடன் அறவிட உத்தேசித்துள்ள கட்டணம் வீதிப்பயண சேவைகள் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்படுதல்.
(ii) அனுமதிப்பத்திர அதிகாரத்தின் அடிப்படையில் சேவையிலீடுபடுத்தப்படுகின்ற பஸ் வண்டியின் அனுமதிப்பத்திரத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள வீதியால் அல்லது வீதிகளினால் சேவையில் ஈடுபடுதல்.
(iii) அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டணப் பட்டியலின் பிரதிகள் அனுமதிப்பத்திரத்தின் அதிகாரத்தின் கீழ் சேவையிலீடுபடுத்தப்படுகின்ற பஸ்வண்டியுடன் எடுத்துச் செல்லல் வேண்டும் என்பதுடன் பஸ் வண்டியினுள் காட்சிக்கு வைத்தலும்.
(iv) அனுமதிப்பத்திர அதிகாரத்தின் கீழ் சேவையிலீடுபடுகின்ற பஸ் வண்டி எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இயந்திரவியல் தகுதியும் போக்குவரத்து மற்றும் வீதியால் சேவையிலீடுபடுவதற்கான சிறந்த நிலையிலும் இருத்தல்.
(v) பஸ் வண்டிகளின் சாரதிகள் அல்லது நடத்துனர்கள் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடக்கூடிய காலங்கள் மற்றும் அவர்கள் வேலை செய்யக்கூடிய மணித்தியால நேரக் கணக்கு மற்றும் ஓய்வு நேரங்கள் சம்பந்தமாகவும் அவர்களது ஊதியம் சம்பந்தமாகவும் ஏதேனும் எழுத்திலான சட்டத்திலுள்ள பணிப்புரைக்கமைய அனுமதிப்பத்திரத்தின் அதிகாரத்தின் கீழ் சேவையிலீடுபடுத்தப்படுகின்ற பஸ்வண்டியின் சாரதி மற்றும் நடத்துனர் தொடர்பில் அதற்கேற்றவாறு அமைதல் வேண்டும். குறித்த சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு முறையான தொழில்சார் மற்றும் உடல்ரீதியான தகுதிகளும் இருத்தல்.
(vi)அனுமதிப்பத்திர உரிமையாளரினால் பஸ் வண்டியில் சேவையில் ஈடுபடுத்துகின்ற நடத்துனர் மூலமாகவோ அல்லது நடத்துநரின் பணிப்பின் பேரில் பணியில் ஈடுபடுகின்றவர் மூலமாகவோ அறவிட்ட கட்டணம் பிரயாணியின் பயண ஆரம்பம் மற்றும் பயண முடிவு (பெயரின் அல்லது கட்டண இலக்கத்தில்) குறித்த பஸ்வண்டியின் பதிவு இலக்கம் அல்லது கம்பனியின் அல்லது நிறுவனத்தின் பெயர், தொடரிலக்கம் உட்பட்ட பிரயாணச் சீட்டை சகல பிரயாணிகளுக்கும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும். இணைப்பிரதிகள் சகிதம் பிரயாணச் சீட்டுப் புத்தகங்கள் கட்டண அச்சுப் பதிவு, பிரயாணச்சீட்டு அல்லது இயந்திரத்தினூடாக விநியோகிக்கும் பிரயாணச்சீட்டு இதற்காகப் பாவிக்கலாம். பிரயாணச்சீட்டு விநியோகிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் விநியோகிக்கப்பட்ட பிரயாணச்சீட்டுக்களின் செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தலுக்காக பிரயாணத் தடவைகளின் தொடரிலக்கத்தைக் குறித்துக் கொள்ளும் நிகழ்வுப்பதிவேட்டை (LOG-SHEET) சகல நடத்துனர்களாலும் நிரப்பப்படல் வேண்டும்
(vii) அனுமதிப்பத்திர அதிகாரத்தின் அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற பஸ்வண்டியில் எச்சந்தர்ப்பத்திலாவது அனுமதிப்பத்திரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கைக்கு அதிகமான எண்ணிக்கை கொண்ட பயணிகளை ஏற்றிச் செல்லல் ஆகாது.
(viii) பஸ்வண்டியின் எவரேனுமொரு உரிமையாளர் சாரதி அல்லது நடத்துனரால்.
(அ) பஸ்வண்டியை சேவையில் ஈடுபடுத்துவது ஏதேனும் நிரந்தர போக்குவரத்து அனுமதிப்பத்திர அதிகாரத்தின் கீழாயின் அச்சேவை ஏதேனும் நிபந்தனையின் அடிப்படையில் ஏதேனும் பயணத்திற்கு அல்லது வீதியில்; பயணிப்பதற்காக அறவிட வேண்டிய கட்டணத்திற்கு மேலதிகமான கட்டணத்தைப் பெற்றுக்கொள்ள குறித்த பயணத்திற்கு அல்லது வீதியில்; பயணிப்பதற்காக எந்தவொரு பிரயாணியிடம் வேண்டுகோள் விடுவிக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ கூடாது.
(ஆ) மேற்படி (2) (ஐ) ஆம் பிரிவில் காட்டப்பட்டுள்ள அதிகாரமளிக்கப்பட்டுள்ள கட்டணத்துக்கு மேலதிகமாக எந்தவொரு கட்டணமும் பஸ்வண்டியில் ஏதேனும் பயணம் செய்வதற்காக செலுத்துவதற்கு தன்னை உள்ளடங்கிய ஏதேனுமொரு உடன்படிக்கைக்கு எந்தவொருவரும் கட்டுப்படமாட்டார்கள் என்பதுடன் எவரேனும் ஆளொருவர் குறித்த விடயத்திற்கேற்ப அங்கீகாரமளிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக செலுத்தியிருப்பின் அக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டவரிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள உரித்துடையவராவார்.
(இ) மேற்படி (ஆ) ஆம் பிரிவின் ஏற்பாடுகளை மீறுகிறவர்கள் சம்பந்தமாக எவரேனும் ஆளொருவர் நீதிமன்றத்தால் தவறாளியாக காணும் சந்தர்ப்பத்தில் குறித்த உப பிரிவை மீறியமை தொடர்பில் சட்ட ரீதியில் நிறைவேற்றப்படுகின்ற வேறு ஏதாயினும் தண்டனைக்கு மேலதிகமாக குறித்த ஆளுக்கு அங்கீகாரமளிக்கப்பட்ட உச்சக்கட்டணத்திற்கு அதிகமாகவோ அல்லது அங்கீகாரமளிக்கப்பட்ட கட்டணமோ அல்லது இணக்கப்பாட்டிற்கு வந்த கட்டணம் என ஏற்புடையதான அதற்கு அதிகமாக செலுத்தப்பட்ட தொகையை மீளச்செலுத்துவதற்கு பணிப்புரை வழங்கலாம்.
(ஈ) பஸ் வண்டியின் இடர் காரணமாக அல்லது ஏதேனும் பழுது காரணமாக அல்லது உரிமையாளரின் எவரேனும் ஒரு ஊழியரின் கவனயீனம் காரணமாகவோ பஸ் வண்டி குறித்த பயணத்தை முடிப்பதற்கு இயலாதவிடத்து ஏதேனும் பயணம் ஒன்றிற்கான கட்டணத்தை முறையாக செலுத்தியுள்ள பஸ் வண்டியில் பயணிக்கின்ற எவரேனும் பயணி ஒருவரின் மீதிப்பயணத்திற்காக கட்டணத்தை பெறுவதற்காக கோரிக்கை விடுத்து அதை மீளப்பெற்றுக்கொள்ள உரித்துடையவராக இருத்தல் வேண்டும்.
(உ) கட்டணத்தை மேற்படி (ஈ) உப பிரிவின் கீழ் மீள அறவிட்டுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுக்குமிடத்து கட்டணத்தை பெற்றுக்கொள்ள உரித்துடைய பயணியிடம் மீளச்செலுத்துதல் வேண்டும்.
(ஊ) மேற்படி (இ) உப பிரிவை மீறுவது தொடர்பில் எவரேனும் ஆளொருவர் நீதிமன்றத்தால் தவறாளியாகக் காணும் சந்தர்ப்பத்தில் குறித்த உப பிரிவை மீறியமை தொடர்பில் நீதிமன்றத்தால் சட்டரீதியாக நிறைவேற்றப்படுகின்ற வேறு ஏதாயினும் தண்டனைக்கு மேலதிகமாக கட்டணத்தை மீளச்செலுத்துவதற்கு பணிக்கலாம் என்பதுடன் அவ்வாறான கட்டணம் நீதிமன்றம் பொதுவான நீதிமன்ற அதிகாரத்தை பிரயோகிக்கும் போது நிறைவேற்றப்படக்கூடிய தண்டப்பணத்தை தாண்டக்கூடும் என்பதுடன் நீதிமன்றம் நிறைவேற்றிய தண்டனையின் பிரகாரமும் குறித்த தொகை அறவிடல் வேண்டும்.
(எ) இந்தப்பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் அறவிட்டுக் கொள்ளக்கூடிய ஏதேனும் கட்டணமொன்றை அல்லது கட்டணத்தின் பகுதியை அறவிட்டுக்கொள்வதற்காக ஏதேனும் குடியியல் சார்ந்த தவறுகள் தொடர்பில் இந்தப்பிரிவு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
(ix) அனுமதிப்பத்திர அதிகாரத்தின் கீழ் சேவையிலீடுபடுத்தப்படுகின்ற பஸ்வண்டியில் சேவையில் ஈடுபடுகின்ற சாரதி மற்றும் நடத்துநர் எல்லாச் சந்தர்ப்பத்திலும் அவதானத்துடன் இருத்தல் வேண்டும் என்பதுடன் அவர்கள் பஸ் வண்டியில் பயணிக்கின்ற பயணிகளின் நன்மைகள் மற்றும் வசதிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்கு அல்லது தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
(x) சலுகை அடிப்டையிலான பருவகால சீட்டுமுறை அல்லது இலவச பிரயாண சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பி;ல் ஏதேனுமொரு பணிப்பு இருப்பின் அதற்கமைவாக ஒழுகுதல் வேண்டும்.
(xi) தேவைப்படும் சந்தர்ப்பங்களில் உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு ஏற்ப பயணிகளுக்கு திருப்திகரமானதும் வினைத்திறன் வாய்ந்ததுமான சேவையினை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு அனுமதிப்பத்திர உரிமையாளர் அதிகாரசபையிடம் உடன்படிக்கையில் கைச்சாத்திடல் வேண்டும்.
(xii) அனுமதிப்பத்திர அதிகாரத்தின் அடிப்படையில் பஸ் வண்டிப்போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்துகின்ற சாரதி மற்றும் நடத்துநர் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வீதிப்பயணிகள் தொடர்பில் பணிவாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ளல் வேண்டும்.
அனுமதிப் பத்திரத்தின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள பஸ்வண்டியை குறித்துரைத்துக் காட்டுதல்
(26) அதிகார சபையினால் இந்த நியதிச்சட்டத்தின் கீழ் பயணிகள் சேவைக்கான அனுமதிப்பத்திரமொன்றை வழங்கும் சந்தர்ப்பத்தில் சேவையில் ஈடுபடும் பொருட்டு குறித்த அனுமதிப்பத்திரத்தினூடாக அதிகாரமளிக்கப்பட்ட பஸ்வண்டியை அடையாளம் காணும் இலக்கம் மற்றும் அவசியமென அதிகார சபை கருதும் வேறு ஏதேனும் விபரங்கள் குறித்த அனுமதிப்பத்திரத்தில் குறித்துரைத்துக் காட்டப்படல் வேண்டும்.
(27) வடக்கு மாகாண சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அல்லது வேறு ஏதேனுமொரு மாகாண சபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள ஏதேனுமொரு ஆளுக்கு அல்லது ஆள்சார் சபைக்கு அதிகார சபையினால் கட்டளை பிறப்பிக்கலாம் என்பதுடன் குறித்த கட்டளைக்கமைய செயற்படல் வேண்டும்.
மற்றவர்களுக்கு கட்டளை பிறப்பிப்பதற்கு அதிகார சபைக்குள்ள அதிகாரங்கள்
(28) இந்த அதிகார சபையின் இணக்கப்பாடு இல்லாமல் விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தினால் மாகாணத்தினுள் முறையான சேவைகளுக்கு தடை அல்லது பாதிப்புக்கள் ஏற்படுமிடத்து குறித்த அனுமதிப்பத்திரத்தின் கீழ் சேவையிலீடுபடுத்தப்படும் பஸ்வண்டியை நிரந்தரமாக அல்லது தற்காலிகமாகவோ நிறுத்துதல் அல்லது வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமை அல்லது வேறு வழிமுறைகளைக் கையாளுவதற்கு அதிகார சபைக்கு அதிகாரமுண்டு
(29) எவரேனும் ஆளொருவருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள பயணிகள் சேவைக்கான அனுமதிப்பத்திரம் அவரின் விருப்பத்தின் பேரில் வேறு ஆளொருவருக்கு பாரப்படுத்துதல் ஆகாது. அவ்வாறான பாரப்படுத்துதல் வெற்றும் வறிதானதுமாகும் என்பதுடன் அவ்வாறான சந்தர்ப்பம் தெரியவருமிடத்து குறித்த உத்தரவுப் பத்திரம் செல்லுபடியற்றதாக்கல் வேண்டும். எவ்வாறாயினும் அதிகாரசபையின் கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு தரமான பஸ்சேவையொன்றுக்காக அதிகாரசபை தேவையெனக் கருதும் சந்தர்ப்பங்களில் அனுமதிப்பத்திரத்தின் உரிமையில் திருத்தம் செய்யும் செயலில் ஈடுபடலாம். அதற்காக அதிகார சபை ஒழுங்கு விதிகளை ஆக்கலாம்.
பஸ்வண்டியின் புதிய உரிமையாளரினால் உரிமை மாற்றம் பற்றி அதிகார சபைக்கு அறிவித்தல் வேண்டும் என்பது பற்றி
(30)(1) மாகாகாணத்தினுள் பயணிகள் போக்குவரத்து சேவையொன்றில் ஈடுபட உத்தேசிக்கின்ற எவரேனும் ஆள் ஒருவர் அப்பொழுது அனுமதிப்பத்திரத்தை விநியோகித்துள்ள பஸ்வண்டியை கொள்வனவு செய்துள்ள சந்தர்ப்பத்தில் அவரினால் குறித்த பஸ்வண்டியின் உரிமை மாற்றம் பற்றி உடனடியாக அதிகார சபைக்கு அறிவித்தல் வேண்டும் என்பதுடன் குறித்த பஸ்வண்டி தொடர்பில் தனக்கு அதிகார சபையினால் அளிக்கப்பட்டுள்ள கட்டளைகள் ஏதுமிருப்பின் அதற்கமைய பின்பற்றுதலும் வேண்டும்.
(2) பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ள ஓட்டுநர் தன் வசமுள்ள பஸ்வண்டியை விற்பனை செய்யும் அல்லது கைமாற்றும் அச்சந்தர்ப்பத்தில் அவரினால் 60 நாட்களுக்குள் குறித்த பயணிகள் போக்குவரத்துச் சேவை அனுமதிப்பத்திரத்தை வேறு பஸ்வண்டிக்காக அதிகார சபையின் மூலம் திருத்தம் செய்து கொள்ளல் வேண்டும். அவ்வாறு திருத்தம் செய்யாதவிடத்து குறித்த அனுமதிப்பத்திரம் செல்லுபடியற்றதாகக் கருதுதல் வேண்டும்
விபரங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தல்
(31)(1) பயணிகள் சேவை அனுமதிப்பத்திரத்துக்கான விண்ணப்பப்படிவத்தில் அனுமதிப்பத்திர உரிமையாளரினால் குறித்துக் காட்டப்படும் விபரங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமிடத்து அது பற்றி குறித்த தினம் தொடங்கி 14 நாட்களுக்குள் குறித்த அனுமதிப்பத்திர உரிமையாளரினால் குறித்த மாற்றம் தொடர்பில் அதிகார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்து அதுபற்றிய தீர்மானத்தை எழுத்து மூலம் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
2) அனுமதிப்பத்திரத்தின் உரிமையில் திருத்தம் செய்யும் போதும் இருந்த அனுமதிப்பத்திரத்தின் சகல உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரசபை கட்டுப்பட்டிராது. அவ்வாறான திருத்தங்களின் போது உரிய வழித்தடத்திற்காக காத்திருக்கும்-பட்டியலில் உள்ள பஸ்வண்டி உரிமையாளர் குறித்த அனுமதிப்பத்திரத்தை கோருவதற்கு உரிமையில்லை.
அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல்
(32) இந்நியதிச்சட்டத்தின் கீழ் அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ள பயணிகள் சேவைகள் அனுமதிப்பத்திர உரிமையாளரினால் அதிகார சபைக்கு அதைப் புதுப்பித்ததற்காக விண்ணப்பப்பத்திரத்தை சமர்ப்பிக்கும் போது குறித்த அனுமதிப்பத்திர உரிமையாளர்;
(i) இந்நியதிச்சட்ட ஏற்பாடுகளுக்கமைய அல்லது அதன் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைக்கமைய செயற்பட்டிருக்குமிடத்து
(ii) இந்நியதிச்சட்டத்தின் கீழ் அதன் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகளுக்கமைய ஏதேனுமோர் தவறுக்கு தவறாளியாக காணப்படவில்லை எனுமிடத்துää
(iii) அதிகாரசபைக்கு செலுத்த வேண்டுமென பணிக்கப்பட்டுள்ள சகல கட்டணங்களையும் செலுத்தியிருப்பின் மற்றும் ஏனைய நிபந்தனைகளை நிறைவு செய்யப்பட்டுள்ளதென திருப்தியடையுமிடத்து குறித்த அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் காலாவதியாகும் தினம் தொடக்கம் ஒரு வருட காலத்திற்கு அல்லது அதற்குக் குறைவான காலத்திற்கு குறித்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கலாம்.
போக்குவரத்து நியதிச் சட்டம் சபையில் சமர்ப்பிப்பு...
அனுமதிப் பத்திரத்தை செல்லுபடியற்றதாக்குதல்
(33)அனுமதிப்பத்திர உரிமையாளரினால்
(i) நியதிச்சட்ட ஏற்பாடுகளுக்கமைய அல்லது நியதிச்சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டதோர் கட்டளையின் ஏதேனுமோர் ஏற்பாடுகளை மீறுமிடத்து,
(ii) 20 வது பிரிவின் கீழ் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள ஏதேனுமோர் கட்டளை செயற்படாதவிடத்து, அல்லது
(iii) இந்நியதிச்சட்டத்தின் கீழ் அவரினால் அனுப்பப்பட்ட விண்ணப்பத்திரத்தின் அல்லது தவணை அறிக்கையில் அல்லது ஏதேனும் எழுத்திலான தகவல்கள் அல்லது எழுத்திலான விடயங்களை விளக்குவதற்காக தான் அறிந்திருந்தும் போலியான அல்லது தவறான தகவல்கள் உள்ளடங்கிய ஏதேனும் அறிக்கையை வழங்கியுள்ளார் எனுமிடத்து, அல்லது
(iv) குறித்த அனுமதிப்பத்திரத்தின் கீழ் அவர் கட்டுப்பட்டிருக்கும் சேவையினை வழங்குவதற்கு தொடர்ச்சியாக 30 நாட்கள் தவறும் அல்லது கவனத்தில் கொள்ளாமல் நிறைவேற்றுவதற்கு தவறுமிடத்து,
அதிகாரசபை திருப்தியடையும் சந்தர்ப்பத்தில் அதிகார சபையினால் குறித்த அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ளவரிடம் விடயங்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியதன் பின் அவ்வாறான அனுமதிப்பத்திரம் தொடர்பில் அனுமதிப்பத்திரத்திற்கான செலுத்த வேண்டிய கட்டணத்திலும் பார்க்க 3 மடங்கை தாண்டாதவாறு மிகை விதிப்பொன்றை வகுத்து கட்டளையிடுவதற்கோ அல்லது அனுமதிப்பத்திரம் 3 மாதத்திற்கு அதிகரிக்காதவாறு இடைநிறுத்துவதற்கோ அல்லது அனுமதிப்பத்திரத்தை செல்லுபடியற்றதாக்கவோ அதிகார சபைக்கு முடியும்
போக்குவரத்து சேவை அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் அல்லது புதுப்பித்தல் அல்லது மறுதலிப்பு (34)(1) அதிகாரசபையால் பயணிகள் போக்குவரத்து சேவை அனுமதிப்பத்திரம் விநியோகித்தல் அல்லது புதுப்பித்தல் அல்லது மறுதலிப்பதற்கு 16 வது பிரிவின் கீழ் தீர்மானிக்கப்படுமிடத்து அல்லது 25 வது பிரிவின் கீழ் கட்டளையிடப்படுமிடத்து அதிகாரசபையினால் குறித்த தீர்மானத்தை அல்லது கட்டளையை அதற்கான காரணங்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு விண்ணப்பதாரிக்கு அல்லது அனுமதிப்பத்திர உரிமையாளருக்கு எழுத்தாவணங்களின் மூலம் அறிவித்தல் வேண்டும்.
(2) 25வது பிரிவின் கீழ் அனுமதிப்பத்திரமொன்றை இடைநிறுத்தி அல்லது செல்லுபடியற்றதாக்கி அவ்வாறு இல்லாதவிடத்து அனுமதிப்பத்திரமொன்று வழங்குவதற்காக அல்லது புதுப்பிப்பதற்கான அதிகார சபையினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளை 27 வது பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் அவ்வாறான கட்டளையொன்றை பிறப்பிக்கப்பட்ட தினம் தொடக்கம் 30 நாட்கள் கடந்ததன் பின்னர் வரும் அடுத்த தினம் தொடக்கம் இப்பிரிவின் பணிக்காக நடைமுறைக்கு வருவதுடன் (அத்தினம் உட்பட) இந்த உபபிரிவின் கட்டளையையோ அல்லது தீர்மானத்தையோ பதிவுத்தபாலில் அனுப்பிய திகதியை கட்டளை ஆக்கிய அல்லது தீர்மானிக்கப்பட்ட திகதியாக கவனத்தில் எடுத்தல் வேண்டும்
(35)(1) 25வது பிரிவின் கீழ் அதிகாரசபையின் தீர்மானங்கள் அல்லது கட்டளைகளினால்-
(i) அனுமதிப்பத்திரமொன்று வழங்குவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு மறுதலித்ததன் மூலம் அல்லது
(ii) மிகை விதிப்பு விதிப்பதன் மூலம் அல்லது அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதன் மூலம் அல்லது செல்லுபடியற்றதாக்கியதன் மூலம் பாதிக்கப்பட்ட அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பதாரி அல்லது அனுமதிப்பத்திர உரிமையாளர் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு குறித்த தீர்மானம் அல்லது கட்டளையிட்ட திகதி தொடக்கம் 14 நாட்களுக்குள் குறித்த தீர்மானத்திற்கு அல்லது கட்டளைகளுக்கு எதிராக எழுத்திலான மேன் முறையீடு ஒன்றை அமைச்சருக்கு சமர்ப்பிக்கலாம்.
(2) அதிகார சபையினால் 25ஆவது பந்தியின் கீழ் மிகை விதிப்பு விதித்து அல்லது அனுமதிப்பத்திரத்தை செல்லுபடியற்றதாக்கி கட்டளை ஆக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கட்டளைக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் கால எல்லை முடிவடையும் வரை அல்லது அக்காலத்தினுள் மேன் முறையீடு செய்யப்பட்டிருக்குமிடத்து மேன்முறையீடு தொடர்பிலான தீர்மானங்கள் அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ளவருக்கு சார்பாகாதவிடத்துக்கன்றி அதுவரையும் அக்கட்டளையை நடைமுறைப்படுத்தல் ஆகாது
(3) இந்தப்பிரிவின் கீழ் மேன்முறையீடு செய்யுமிடத்து அமைச்சரால்,
(அ) மேன்முறையீட்டுக்கு இடமளித்து அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு அல்லது புதுப்பிக்குமாறு சந்தர்ப்பத்திற்கேற்ப அதிகார சபைக்கு கட்டளை இடலாம். அல்லது
(ஆ) மேன்முறையீட்டுக்கு இடமளித்து சந்தர்ப்பத்திற்கேற்ப மிகை விதிப்பு விதித்தல் அல்லது அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தல் அல்லது செல்லுபடியற்றதாக்கற் கட்டளையை நீக்கிவிடலாம் அல்லது
(இ) மேன்முறையீட்டை மறுதலிக்கலாம்
(4) இப்பிரிவின் கீழ் மேன்முறையீட்டின் அடிப்படையில் அமைச்சரால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் இறுதியானதும் முடிவானதும் ஆகும்.
(5) அவ்வாறான மேன்முறையீடு சம்பந்தமாக அமைச்சரால் தீர்மானம் காலதாமதம் இன்றி அதிகாரசபைக்கு அறிவித்தல் வேண்டும்
(6) 3வது உபபிரிவின் கீழ் அமைச்சரால் எடுக்கின்ற ஏதேனும் தீர்மானத்தின் அடிப்படையில் அதிகாரசபை நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்
அனுமதிப்பத்திரத்தை வின்ஸ்கிரீனில் காட்சிப்படுத்த வேண்டும் என்பது பற்றி
(36) அனுமதிப்பத்திரம் வழங்கிய உரிய பஸ் வண்டியின் முன்னுள்ள கண்ணாடியின் (வின்ஸ்கிரீனில்) தெளிவாகத் தெரிகின்றவாறு அனுமதிப்பத்திரத்தை காட்சிக்கு வைத்தல் வேண்டும்
அறிக்கைகள் போன்றவை
(37) இந்த நியதிச்சட்டத்தின் கீழ் தனது அதிகாரத்தை செயற்படுத்துதல் மற்றும் தனது பணிகளை நிறைவு செய்வதற்காக அதிகார சபைக்கு தேவைப்படின் ஏதேனும் தவணை அறிக்கைகள் தகவல்கள் அல்லது விடயங்களை தெளிவுபடுத்திக்கொள்ளல் அறிவித்தலில் காட்டப்பட்டுள்ள குறித்த காலப்பகுதிக்குள் வழங்குமாறு இந்நியதிச்சட்டத்திற்கமைய விநியோகிக்கப்பட்ட பயணிகள் சேவைக்கான அனுமதிப்பத்திரத்தை கொண்டுள்ளவருக்கு அதிகார சபையினால் எழுத்தினால் அறிவிக்க வேண்டும் என்பதுடன் குறித்த அறிவித்தலின் பணிப்புரைக்கமைய செயற்படல் குறித்த அனுமதிப்பத்திரதாரரின் கடமையாகும்
ஏதேனும் விடயம் தொடர்பில் அதிகார சபையினால் கட்டளை பிறப்பிக்கப்படலாம் என்பது பற்றி
(38) (1) பயனாளிகளின் நன்மைக்காக மாகாணசபை நியாயாதிக்க எல்லைக்குள் பஸ் வண்டியை சாலையிடும் இடம் மற்றும் பஸ் தரிப்பிடம் போன்ற அமைவிடத்தை எவ்வாறு மாற்றுதல், மேம்படுத்தல், அடைத்தல், அகற்றுதல், பராமரித்தல் போன்ற கட்டளைகளை பிறப்பிப்பதற்கும் உரிய உள்ளுராட்சி நிறுவனங்கள் மூலம் அதற்கான பணிகளை ஏற்பாடு செய்வதற்கும் அல்லது தகுதியெனக் கருதும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அதிகாரசபைக்கு அதிகாரம் உண்டு.
(2)(i)அந்தந்த வழித்தடத்திற்;கான பயணிகளின் தேவைப்பாடுகளுக்கமைய பொதுவான கால அட்டவணையை தயாரித்தல், குறித்த கால அட்டவணைக்கேற்ப சேவையில் ஈடுபடுபவர்களுக்கிடையே நியாயமானவாறு ஒதுக்கீடுகளைச் செய்தல், பஸ் தரிப்பிடங்கள் அல்லது பஸ் வண்டிகள் சாலையிடும் இடங்கள் அல்லது இடையிலுள்ள இடங்களில் குறித்த சேவைகளை நடைமுறைப்படுத்தல், கால அட்டவணைக்கேற்ப சேவைகள் நடாத்தப்படுகின்றனவா என சோதனையிடல். பஸ் சேவைகளை முகாமைத்துவபடுத்துவதற்கான ஆளணியை ஈடுபடுத்தல், மற்றும் மேற்பார்வை செய்தலென்பன அதிகாரசபையால் நிறைவேற்றப்படல் வேண்டும். அதற்காக அதிகாரசபைக்கு கட்டளைகளையும் ஒழுங்கு விதிகளையும் ஆக்கலாம்.
(ii) அத்துமீறி பஸ் தரிப்பிடங்களில் பயணிகளை ஏற்றுதல் அல்லது இறக்குதல் அதற்கு உதவியாக பயணிகளை ஒன்றுசேர்க்கும் நோக்கத்தோடு சத்தமிட்டு குரல் கொடுத்தல் அதிகாரசபையின் உத்தியோகத்தரது கடமைகளுக்கு தடையாகவோ அல்லது இடைஞ்சலாகவோ செயற்படுதல் தண்டனை விதிக்கப்படவேண்டிய குற்றமாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொலிஸ் உத்தியோகத்தருக்கோ அல்லது அதிகாரசபையின் உத்தியோகத்தருக்கோ அவ்வாறான நபர்களுக்கு எதிராக உரிய நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யலாம் என்பதுடன் வழக்கு விசாரனையின் போது குற்றவாளியாக காணப்படுமிடத்து 5,000 ரூபாவிற்கு மேற்படாத தண்டப்பணத்திற்கோ அல்லது 3 மாதத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனைக்கோ ஆளாகவேண்டும்
(3) பஸ்வண்டியை ஓட்டுவதற்காக உரிய கால அட்டவணைக்கமைய முகாமைத்துவ பணிகளில் ஈடுபடுகின்ற ஆளணி தொடர்பிலான நியமனங்கள், சேவையிலிருந்து நீக்குதல் உட்பட ஒழுக்கக்கட்டுப்பாடுகளையும் அதிகாரசபை செய்ய உரிமையுண்டு.
அமைச்சரின் பரிந்துரை
(39) அரசின் பொதுவான கொள்கைகளுக்கு இணங்கி பயணிகள் போக்குவரத்து சேவையின் நன்மை கருதி பஸ் வண்டிகளை வரிச்சலுகையுடன் பெறுவதற்காக பொருத்தமானவர்களுக்கு அமைச்சர் பரிந்துரைக்கலாம்.
எந்தவொரு ஒமினிபஸ் வண்டிக்குள்ளும் உட்பிரவேசத்திற்கான அதிகாரமும் வேறு விடயங்களும்
(40) அதிகார சபைக்காக எழுத்திலான அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் ஆளொருவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்;
(அ) குறித்த பஸ் வண்டியை சேவையிலீடுபடுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தின் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதா அல்லது குறித்த அனுமதிப்பத்திரத்திற்குரிய நிபந்தனைகள் அல்லது 20வது பிரிவின் கீழ் விநியோகிக்கப்பட்ட கட்டளைகளை பின்பற்;றுகின்றனரா அல்லது இந் நியதிச்சட்;ட ஏற்பாடுகளுக்கமைய அவை பின்பற்றப்படுகின்றனவா என ஆராய்ந்து பார்ப்பதற்கு எந்தவொரு பஸ்வண்டிக்குள்ளும் உட்பிரவேசிக்கலாம்.
(ஆ) குறித்த பஸ்வண்டிக்கு விநியோகிக்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை அல்லது நிகழ்வுப்பதிவேட்டை அல்லது பஸ்வண்டிக்குரிய பிற ஏதேனும் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு பஸ்வண்டியின் சாரதிக்கு பணிப்புரை வழங்கலாம்;.
(இ) குறித்த நிகழ்வுப்பதிவேட்டை அல்லது ஏதேனும் ஆவணங்களை தனது பொறுப்பில் எடுப்பதற்கு அல்லது அதன் பிரதிகளை பெற்றுக்கொள்வதற்கு அதிகாரமுண்டு.
பகுதி ஐஏ
அதிகார சபையின் ஆளணி
அதிகார சபையின் பணிப்பாளர்
(41) (1) அதிகாரசபையினால் அமைச்சரின் எழுத்தாவணத்தைக் கொண்ட அதிகாரத்துடன் அதிகார சபைக்கான பணிப்பாளர் ஒருவரை நியமிக்கலாம்.
(2) அதிகார சபையின் பணிப்பாளர் பொதுவான கட்டளைகளுக்கும் மற்றும் நிருவாகத்துக்குமான நிருவாக அதிகாரியாவார்.
3) அதிகார சபை தனது வினைத்திறன் வாய்ந்த நிருவாகத்திற்கும் மேற்படி 2வது உப பிரிவின் பணிக்காக தேவையெனத் தீர்மானிக்கும் இந் நியதிச்சட்டத்திற்கமைவான ஏதேனுமொரு அதிகாரம் அவ்வப்போது பணிப்பாளரினால் பணிக்கப்படும் குறித்த அதிகாரங்கள்; அதிகார சபையின் கட்டளைகளுக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைவானதாக இருத்தல் வேண்டும்.
4) அதிகார சபையின் வினைத்திறன் வாய்ந்த நிருவாகத்திற்கு தேவையென அவரினால் கருதும் 3வது உப பிரிவில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பணிப்பாளர்; அதிகார சபையின் எழுத்திலான அங்கீகாரத்துடன் அவ்வப்போது எழுத்தில் அதிகார சபையின் கீழ் வேலையில் ஈடுபட்டுள்ள வேறு எவரேனும் ஒருவரிடத்தில் கையளிக்கப்படலாம். அவ்வாறு அதிகாரத்தைக் கையளித்து வேலையில் ஈடுபடும் எவரேனும் ஒருவர் குறித்த அதிகாரங்களை பணிப்பாளர் பொதுவான மற்றும் விசேட பணிப்புரையின்கீழ் உபயோகப்படுத்தல் வேண்டும்.
5) அமைச்சரின் முன் அங்கீகாரமின்றி பணிப்பாளரை பதவியிலிருந்து நீக்கலாகாது.
அதிகாரசபையின் ஏனைய ஊழியர்கள்
(42) 1) போக்குவரத்து அதிகார சபையினால்
(அ) அதிகார சபை பணிகளில் ஈடுபடுவதற்குத் தேவையான ஏனைய வேலைக்கமர்த்தப்படுவோர்களை நியமித்தல் வேண்டும்.
(ஆ) குறித்த வேலைக்கமர்த்தப்படுவோர்களின் வேதனம் அல்லது சம்பளம் அல்லது வேறு ஊதியங்களை தீர்மானித்தல்.
(இ) குறித்த வேலைக்கமர்த்தப்படுவோரின் நன்மைக்காக ஊழியர் சேமலாபநிதியத்திட்டம் ஒன்றைத் தாபித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தல் மற்றும் அவ்வாறான நிதியத்திற்கு பங்களிப்புத் தொகையைச் செலுத்துதல் வேண்டும்.
(ஈ)குறித்த வேலைக்கமர்த்தப்படுவோர் சம்மந்தமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேணுதல்.
அதிகாரசபையின் ஆளணிக்கு அரச அலுவலர்களை நியமித்தல் (43) 1) அதிகார சபையின் வேண்டுகோளுக்கமைய மத்திய , மாகாண அரச சேவையின் எவரேனும் உத்தியோகத்தர் குறித்த தாபனவிதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கமைய குறித்துரைக்கப்படுகின்ற காலத்திற்கு அதிகார சபையின் ஆளணிக்கு தற்காலிகமாக, நிரந்தரமாக நியமிக்கலாம்.
2) அரசாங்க ஊழியரொருவர் தற்காலிகமாக அதிகார சபையின் ஆளணிக்கு நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில்,
(அ) அதிகார சபையின் ஆளணிக்கு தற்காலிகமாக நியமனம் பெறுகின்ற சந்தர்ப்பத்தில் மத்திய, மாகாண அரச சேவையின் பிரதான பதவி ஓய்வூதியப் பிரமாணத்தின் கீழ் ஓய்வூதியத்திற்கு உரிய பதவியென வெளிப்படுத்தப்பட்டிருக்குமிடத்து
(i) அவர் அதிகார சபையின் கீழ் கடமையிலீடுபட்டிருக்கும் போது அவர் பொதுவான கொள்கையின் கீழ் சம்பளமற்றதாக வழங்கப்பட்ட விடுமுறையின் அடிப்படையில் மத்திய, மாகாண அரச சேவையின் சேவைக்கு சமூகமளிக்காத ஒருவரென கவனத்தில் கொள்ளப்படும் என்பதுடன் அவர் குறித்த பிரமாணத்தின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிதல் வேண்டும்.
(ii) அதிகார சபையினால் அவருக்காக அதிகார சபையின் நிதியத்திலிருந்து அவர் அதிகாரசபையில் சேவையிலீடுபடுகின்ற சகல பூரணமான மாதத்திற்கும் அவருக்கு மத்திய, மாகாண அரச சேவையின் பிரதான பதவிக்காக செலுத்தப்பட வேண்டிய மாகாண அமைச்சரவையின் நிதி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் தீர்மானத்திற்கேற்ப சம்பளத்தில் நூற்றுக்கு இருபத்தைந்து வீதத்தால் அதிகரிக்காத தொகையை மாகாண சபை நிதியத்திற்கு அதிகாரசபையினால் செலுத்தலாம் மேலும்
(ஆ) அதிகார சபையின் ஆளணிக்கு சேவைக்காக அவர் தற்காலிகமாக நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அரச சேவை ஊழியர் சேமலாப நிதிய கட்டளைச் சட்டத்தின் பணிக்காக அதிகார சபைக்கு வழங்குகின்ற அவரது சேவைகள் அரசுக்கு செய்கின்ற சேவையாக கவனத்தில் கொள்ளப்படும் என்பதுடன் அதற்கமைய அவர் அதிகார சபையால் சேவையில் ஈடுபட்டிருக்கும் போது கட்டளைச்சட்டத்தின் கீழ் அவர் செலுத்துவதற்கு கீழ்ப்படியும் பங்களிப்புத் தொகையின் அளவு அவர் தொடர்ச்சியாக அரச சேவை ஊழியர் சேமலாப நிதியத்தில் உரிய கணக்கில் வரவு வைப்பதற்கு அரசினால் அரச சேவை சேமலாப நிதியத்திற்கு அவர் சார்பாகச் செலுத்திய பங்களிப்புத் தொகைக்குச் சமமான தொகையை திறைசேரியின் பிரதிச்செயலாளரிடம் அவருக்காகச் செலுத்துதல் வேண்டும்.
(3) எவரேனும் அரச ஊழியரொருவர் அதிகார சபையின் ஆளணிக்கு நிரந்தரமாக நியமிக்கப்படுமிடத்து-
(அ) அவர் அரச சேவையிலிருந்து விலகியதாகக் கருதலாம்.
(ஆ) அதிகார சபையின் ஆளணிக்கு அவர் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் அரச சேவையில் அவரது பதவி நிரந்தரமானதும் ஓய்வூதியப் பிரமாணத்தின் கீழ் ஓய்வூதியம் உரித்துடையதுமான பதவியாக வெளிப்படுத்தப்பட்டிருக்குமிடத்து-
(i) அவர் அதிகார சபையின் ஆளணிக்கு நிரந்தர ஊழியரொருவராக நியமிக்கப்பட்ட தினத்தன்று அரச சேவையி;லிருந்து ஓய்வு பெற்றவராகக் கருதி குறித்த பிரமாணத்திற்கமைய ஓய்வூதியத்தை வழங்குவதற்கு அவர் தகுதிபெறல் வேண்டும்
(ii) வயது காரணமாக அல்லது சுகயீனம் காரணமாக அவர் குறித்த ஆளணியில் வகித்த பதவி இல்லாதொழிக்குமிடத்து அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் அதிகார சபையின் ஆளணியில் அவரது வேலைவாய்ப்பு ஓய்வு பெறச் செய்ததால் முடிவுறுத்தப்பட்டால் அன்றி குறித்த பிரமாணக்குறிப்பின் கீழ் அளிக்கப்பட்ட அவ்வாறான ஏதேனுமொரு பணத்தொகை அவருக்கு வழங்கப்படலாகாது.
(iii) அதிகார சபையால் வேலைக்கமர்த்தப்பட்டிருக்கும் போது அவரது மரணம் நிகழுமிடத்து அவர் சம்பந்தமாக வழங்கப்பட வேண்டிய ஏதேனும் கொடைகள் இருப்பின்ää அவை வழங்கப்படலாம்.
மற்றும்
(இ)அதிகார சபையின் ஆளணிக்கு அவர் நிரந்தரமாக நியமிக்கப்படுமிடத்து அவர் அரச சேவை ஊழியர் சேமலாப நிதிய கட்டளைச்சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட அரச சேவை சேமலாப நிதியத்துக்கு பங்களிப்புச் செய்திருப்பின் அவர் சேவையிலிருந்து விலக்கப்பட்டால் அன்றி மாகாண சபையின் விருப்பத்துடன் உடன்படிக்கை முடிவுற்றதும் அரச சேவையிலிருந்து விலகியதாக குறித்த கட்டளைச்சட்டத்தின் நடவடிக்கை தொடர்பில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
(4)(i) ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்கு அரசாங்கத்தில் அல்லது மாகாண சபையில் சேவை செய்வதற்கு இணங்கி அரசாங்கத்துடனோ அல்லது குறித்;த மாகாண சபையுடனோ உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடப்பட்டிருக்கும் ஆள் ஒருவர் அதிகார சபையினால் வேலைக்கமர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் அவர் அதிகார சபையின் சேவையில் ஈடுபட்ட அச் சேவைக்காலம், குறித்த உடன்படிக்கையின் பிரகாரம் கட்டுப்பட்டு நிறைவு செய்யப்பட்டிருக்குமிடத்து அரசாங்கத்திற்கோ அல்லது மாகாண சபைக்கோ புரியப்பட்ட சேவையாகக் கருதலாம்.
(ii) மேற்படி உப பிரிவு (2) லிருந்து (4) வரையுள்ள பிரிவுகள் அரச பணியாளர்கள், மாகாண பணியாளர்கள் வேறு சேவைக்காக விடுவிக்க மற்றும் மீள் சேவைக்கு வருகை தரும் போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகள், சேவை நிபந்தனைகள் மற்றும் சுற்றுநிருப ஆலோசனைகளுக்கு ஏற்றதாக இருத்தல்
அதிகார சபையில் வேலைக்கமர்த்தப்பட்டோர் அரச ஊழியர்களாக கருதுதல் வேண்டும் (5)அதிகார சபையின் எல்லா அலுவலர்களும்; ஊழியர்களும் தண்டனைச் சட்டக்கோவையில் பொருள்கோடல்; செய்யப்பட்ட மற்றும் அக் கருமங்கள் தொடர்பில் அரச ஊழியராகக் கருதுதல் வேண்டும்
(6) அதிகார சபையானது சட்டத்தில் பொருள் கோடல் செய்யப்;பட்டுள்ளவாறு அட்டவணைப்படுத்தப்பட்ட நிறுவனமாக கவனத்தில் எடுத்தல் வேண்டும் என்பதுடன் குறித்த சட்டத்தின் ஏற்பாடுகள் அவ்வாறே பொருள் கோடல் வேண்டும்

பகுதி ஏ
நிதி
மாகாண பயணிகள் சேவைக்கணக்கு (44)(1) இந்நியதிச்சட்டப் பணிக்காக மாகாண பயணிகள் சேவைக்கணக்கு (இதனகத்துப் பின்னர் கணக்கு எனக் குறிப்பிடப்படும்) எனக் குறிப்பிடப்படும் மாகாணத்திற்கான மாகாண நிதியத்தில் பிறிதொரு கணக்கொன்றாகப் பேணி நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
(2) கீழ்க் காட்டப்பட்டுள்ள பெறுகைகளை இக் கணக்கில் வரவு வைத்தல் வேண்டும்.
(அ) இந்நியதிச் சட்டத்தின் கீழ் தனது அதிகாரத்தத்துவங்களை நடைமுறைப்படுத்தும் போது அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கும் போது, புதுப்பிக்கும் போதும் கிடைக்கின்ற நிதி மற்றும் அதிகார சபைக்கு கிடைக்கின்ற ஏனைய நிதி,
(ஆ) இந்நியதிச் சட்டப் பணிக்காக மாகாண சபையினால் அளிக்கப்படுகின்ற கொடைகள் மற்றும் முற்பணம்.
(இ) இந்நியதிச் சட்டப் பணிக்காக ஒவ்வொரு தனியார் அன்பளிப்பாளர்களின் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் கிடைக்கின்ற நிதி மற்றும்,
(ஈ) அதிகார சபைக்குரிய அசையும் அல்லது அசையா சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம், வாடகைக்கு விடுவதன் மூலம், ஈடு வைப்பதன் மூலம் அல்லது கட்டடக் குத்தகையாகக் கிடைக்கும் நிதி மற்றும் வேறு விதத்தில் கிடைக்கின்ற எல்லா நிதிகளையும்,
(3) கணக்குகளை நன்கு பராமரித்து பேணுதல் தொடர்பில் பணிப்பாளர் பொறுப்புடையவராவார்.
(4) கணக்கை பராமரித்தல் மற்றும் பேணுகை இந் நியதிச் சட்;ட ஏற்பாடுகளுக்கு மற்றும் மாகாண நிதியம் தொடர்பிலான 1987ம் ஆண்டு 42ம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் iii ஆம் அத்தியாயத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாதல் வேண்டும்.
(5) இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் அங்கீகரிக்;கப்பட்ட வங்கியில் அதிகார சபையின் நிதி நடவடிக்கைகளுக்காக கணக்கொண்றைப் பேணுதல் வேண்டும்.
(45) கீழ்க்காட்டப்படும் பணிகளுக்காக ஏதேனும் நிதி தேவையென பணிப்பாளர் கருதுமிடத்து அதாவது –
(அ) இந்நியதிச்சட்டத்தின் கீழ் அதிகாரசபையின் அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தும் போது ஏற்படுகின்ற செலவினங்களுக்காகää
(ஆ) இந்நியதிச்சட்டத்தின் கீழ் அதிகாரசபை உறுப்பினர்களுக்கும் வேலைக்கு அமர்த்தப்பட்டோருக்கான ஊதியக்கொடுப்பனவுகளுக்காக,
(இ) இந்நியதிச்சட்ட ஏற்பாடுகளின் கீழ் நிறைவு செய்வதற்கு தேவையான அல்லது இந்நியதிச்சட்டத்தின் ஏதேனும் பணிக்காக அமைச்சரினால் அதிகாரமளிக்கப்பட்ட வேறு ஏதேனுமொரு செலவினத்திற்காக குறித்;த நிதியை அமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் குறித்துரைத்த பணிக்காக கணக்கிலிருந்து; கொடுப்பனவு செய்யலாம்.
அதிகார சபைக்கு கடன் பெறும் அதிகாரம்
(46) இந்நியதிச்சட்டத்தின் கீழ் அதிகாரசபைக்கு தனது பொறுப்புக்களை நிறைவு செய்வதற்காக தேவைப்படுகின்ற நிதியை அமைச்சரின் விருப்பத்திற்கேற்ப அல்லது அவரினால் வழங்கப்பட்ட பொதுவான அங்கீகார பரிந்துரைக்கு அமைய அதிகார சபையினால் குறுங்கால, நீண்டகால கடனைப் பெற்றுக் கொள்ளலாம்.
எவ்வாறாயினும் அதிகார சபையினால் இப்பிரிவின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட தற்காலிக கடன் தொகைக்குப்பதிலாக செலுத்துவதற்கு மீதமாகவுள்ள நிதி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் கணிக்கப்படுகின்ற நிதித்தொகைக்கு மேற்படலாகாது.
நிதியாண்டு

(47) நிதியாண்டானது ஒரு கலண்டர் வருடமாக இருத்தல் வேண்டும்
கணக்காய்வு

(48) (1) ஒவ்வொரு நிதியாண்டிற்கும் கணக்கின் வரவு செலவு குறித்த நிதியாண்டு முடிவடைந்து மூன்று மாதங்களுக்குள் கணக்காய்வுக்காக கணக்காய்வு அதிபதியிடம் சமர்ப்பித்தல் வேண்டும். கணக்காய்வின் போது அவருக்கு உதவியாக எவரேனும் கணக்காய்வாளர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் அவர்கள் அவருடைய ஆலோசனையின் கீழும் கட்டுப்பாடுகளின் கீழும் செயற்படுதல் வேண்டும்.
(2) கணக்காய்வு பணிக்காக அவரினால் செய்யப்படும் செலவினங்களின் மீள் கொடுப்பனவுக்காக பணிப்பாளரால் தீர்மானிக்கப்படுகின்ற ஏதேனும் பணிக்கொடுப்பனவை கணக்காய்வாளர் அதிபதியிடம் அதிகாரசபையின் நிதியத்திலிருந்து செலுத்துதல் வேண்டும். அதிகார சபையிடமிருந்து கணக்காய்வாளர் அதிபதிக்கு கிடைக்கின்ற ஏதேனும் பணிக்கொடுப்பனவுகள் கடமையில் ஈடுபடுத்திய எவரேனும் தகுதியுடைய கணக்காய்வாளருக்கு வழங்கிய கொடுப்பனவுகள் கணக்கிலிருந்து கழித்த பின்பு மீதி இலங்கையின் திரட்டிய நிதியத்தில் வரவு வைத்தல் வேண்டும்.
(3) கணக்காய்வாளர் அதிபதிக்கு மற்றும் கணக்குகளை கணக்காய்வு செய்யும் போது அவருக்கு உதவியளித்த எவரேனும் ஆளொருவருக்கு கணக்காய்வாளர் அதிபதி கணக்காய்வு பணிக்கு தேவையெனக்கருதும் எல்லாப் புத்தகங்களும் உறுதிகளும் உடன்படிக்கைகளும் கணக்குகளும் கொடுப்பனவு பற்றுச்சீட்டுக்களும்; மற்றும் கணக்குகள் சம்பந்தமான பிற ஆவணங்களையும் பரிசீலனை செய்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்பதுடன் குறித்த நடவடிக்கைகளுக்கு தேவையானது என தனது அறிவுக்கெட்டியபடி அளிக்கக்கூடிய தகவல்களை அதிகாரசபை அல்லது அதன் அலுவலர்கள் அவர்களுக்கு வழங்குதல் வேண்டும்
(4) இந்தப் பிரிவின் நடவடிக்கைகளுக்காக தகுதியான கணக்காய்வாளர் என்பது-
(அ) இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் அல்லது சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏதேனும் நிறுவனத்தின் உறுப்பினரென குறித்த நிறுவனத்தின் நிர்வாகியால் கணக்காளராக பணிகளில் ஈடுபடுவதற்கு வழங்கப்பட்டுள்ள சான்றிதழைக் கொண்டுள்ளவர்கள்.
(ஆ) நன்மை பெற்றுத்தரக்கூடியவாறான ஒவ்வொரு கணக்காய்வாளர்களினதும் பணிகளானது குறித்த நிறுவனத்தின் சபையினால் வழங்கப்பட்டுள்ள சான்றிதழுடன் பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் அல்லது சட்டத்தினால் ஆக்கப்பட்ட வேறு நிறுவனத்தின் உறுப்பினர்கள் அடங்கிய பங்குதாரர்களைக் கொண்ட கணக்காளர் கம்பனி என கருதப்படுகின்றது.
கணக்காய்வாளரின் அறிக்கை
(49)(1) கணக்காய்வாளர் அதிபதி அதிகாரசபையின் கணக்;குகளை பரிசீலனை செய்து –
(அ) அவருக்குத் தேவையான சகல தகவல்களையும் கிடைக்கப்பெற்ற விளக்கங்களையும் கிடைக்க பெறாதவற்றையும் குறிப்பிட்டு;ää
(ஆ) அதிகார சபையின் நடவடிக்கைகள் உண்மையானதும் நியாயமானதுமாக காட்டுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்கு அறிக்கைகள் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதா என குறிப்பிட்டுää
(இ) அவரது கருத்தின்படி மாகாணசபையினால் அதிகாரசபையின் கணக்குகளும் பணிகளும் ஏதேனும் பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு ஊக்கமளித்தல் வேண்டும் என கருதப்படும் கணக்குகள் சம்பந்தமான ஏதேனும் விடயம் இருக்குமிடத்து அதுபற்றி கவனத்தைச் செலுத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்கலாம்.
(2) கணக்காய்வாளர் அதிபதி தனது அறிக்கையில் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குடன் பணிப்பாளருக்கு முன்னளித்தல் வேண்டும்.
கணக்காய்வாளர் அதிபதியின் அறிக்கை, அதிகார சபையின் கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த அறிக்கை கணக்கறிக்கை என்பன போக்குவரத்து அமைச்சருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
(50) ஒவ்வொரு வருடத்திற்குமான கணக்கில் வரவு செலவு சம்பந்தமாக கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளும் கணக்காய்வு அதிபதியின் அறிக்கைகளும் தனக்கு கிடைத்ததன் பின் தலைவரினால் குறித்த அறிக்கையுடன் வரவு செலவு சம்பந்தமாக கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகளையும் அதிகாரசபையின் வருடாந்த பணிகள் தொடர்பான கூற்றுக்களுடன் போக்குவரத்து விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் பாரப்படுத்தல் வேண்டும் என்பதுடன் அவரினால் அவற்றின் பிரதிகள் ஆறு வாரத்தினுள் மாகாணசபைக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
பகுதி -ஏஐ
பொது ஏற்பாடுகள்
மூத்த பிரசைகளுக்கான பயணச்சலுகை
(51)(1) இந்நியதிச்சட்டத்திற்கு அமைய கட்டளை பிறப்பிப்பதற்கு குறித்த ஏதேனும் விடயங்கள் தொடர்பில் கட்டளைகளை ஆக்குவதற்கு இ;ந்நியதிச்சட்டத்திற்கு அமைய அதிகாரமளிக்கப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக அமைச்சரினால் கட்டளைகள் ஆக்கப்படலாம்.
2) விசேடமாக முதலாவது உபபிரிவில் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பொதுவானதும் பாதிப்புக்கள் ஏற்படாததுமாக அமைச்சருக்கு கீழ்க் காட்டப்படும் சகல விடயங்களும் அல்லது எந்தவொரு விடயம் சம்பந்தமாகவும் கட்டளைகளையும் விதிகளையும் ஆக்கலாம்.
(i) அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போதும் புதுப்பிக்கும் போதும் மாற்றம் செய்யும் போதும் அல்லது திருத்தம் செய்யும் போதும் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிமுறைகளில் உபயோகப்படுத்த வேண்டிய மாதிரிப் படிவங்கள் மற்றும் செலுத்த வேண்டிய கட்டணங்கள்
(ii) அனுமதிப்பத்திரத்தின் அதிகாரத்தின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற பஸ்வண்டிகளுள் எடுத்துச்செல்ல வேண்டிய பெயர்ப் பலகைகளும்ää குறியீடுகளும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள்.
(iii) அனுமதிப்பத்திரம் ஒன்றின் அதிகாரத்தின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற பஸ்வண்டிகளில் அல்லது அங்கீகாரம் பெற்ற பயணிகளை போக்குவரத்து வாகனங்களின் சாரதிகளினாலும் ஓட்டுநர்களினாலும் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்களும் அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டிய விபரங்களும்.
(iv) அனுமதிப்பத்திர அதிகாரத்தின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற பஸ்வண்டியில் அல்லது அங்கீகாரம் பெற்ற பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் எவரேனும் ஆளொருவரினால் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய ஏற்றுக்கொள்ளத்தக்க நிலைப்பாடுகளும் மற்றும் குறித்த நிலைப்பாட்டை மீறும் செயலில் ஈடுபடுவதிலிருந்து தவிர்த்தலும்.
(v) அனுமதிப்பத்திர அதிகாரத்தின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற பஸ்வண்டி சேவையில் ஈடுபடுத்தப்படும் பயணத்தடவைகள் சம்பந்தமாக வைத்திருக்க வேண்டிய அறிக்கை.
(vi) அனுமதிப்பத்திர அதிகாரத்தின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற அனுமதிப்பத்திரதாரியினால் சாரதியாகவும் நடத்துநராகவும் சேவைக்கமர்த்தப்படும் ஆட்கள் சம்பந்தமானதும் அவ்வாட்கள் சேவையை ஆரம்பிக்கின்ற மற்றும் முடிவுறுத்துகின்ற நேரங்களையும் அவர்கள் பெற்றுக்கொள்ளும் ஓய்வு நேரம் சம்பந்தமாகவும் அனுமதிப்பத்திரதாரியினால் வைத்திருக்க வேண்டிய அறிக்கை.
(vii) இந்நியதிச்சட்டத்தின் கீழ் வைத்திருக்க வேண்டிய அறிக்கைகளை பாதுகாப்புடன் வைத்திருத்தல் அதிகார சபையினால் நியமிக்கப்படுகின்ற எவரேனும் அலுவலர் ஒருவரினால் குறித்த அறிக்கையை பரிசீலனை செய்தலும் குறித்த அலுவலரினால் கோரப்படுகின்றவிடத்து குறித்த பரிசீலனைக்காக குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தலும்.
(viii) பயணிகள் போக்குவரத்து சேவைகள் சம்பந்தமாக ஊக்கமுள்ள அனுமதிப்பத்திரதாரிகளின் அல்லது பயணிகளின் ஏதேனும் சங்கத்தின் அமைப்பின் அல்லது ஆள்சார் சபையின் பணிகளைப் பின்பற்றுவதற்காக ஒழுங்கு விதிகள் மற்றும் பணிகளை நிறைவு செய்வதற்கு அவர்களுக்கான ஒழுங்கு விதிகள்
(ix) குறித்த சங்கங்கள் அமைப்புக்கள் அல்லது பயணிகள் அனுமதிப்பத்திரதாரிகளுடன் கருத்துப்பரிமாற்றங்களை செய்தல்.
(x) விசேடமாக அதன் ஒருங்கிணைப்பு மற்றும் பஸ்வண்டியை சேவையிலீடுபடுத்துவதற்கான கால அட்டவணையைத் தயாரித்தல்ää கால அட்டவணையை நடைமுறைப்படுத்தல்ää ஒழுங்குபடுத்தல் மற்றும் நியாயமாக வசதிகளை உபயோகப்படுத்தலுக்கு பஸ் வண்டிகளை சாலையிடும் இடம் மற்றும் பஸ் தரிப்பிடங்கள் போன்றவற்றின் ஒருங்கமைப்பு மற்றும் முகாமைத்துவம்.
(xi) அனுமதிப்பத்திரத்தின் அதிகாரத்தின் கீழ் சேவையிலீடுபடும் பஸ் வண்டிகளில் கடமைகளில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் தகைமைகளைத் தீர்மானித்தல் மற்றும் உடல் ரீதியான தகுதிகளையும் காலத்துக்குக் காலம் பரிசீலனையிடல் மற்றும் ஊழியர்களின் நலன்புரி மற்றும் முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள்.
(xii) ஏதேனும் பிரதேச அல்லது மாகாண வீதியில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் பாரிய பின்னடைவுகள் உடன் ஏற்படலாம் என தோன்றும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தொடர்பில் மற்றும் இறுதி நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
(xiii) ஆலோசனைச் சபை அல்லது குழுக்களை நியமித்தல், அல்லது அவற்றுக்கு உறுப்பினர்களை நியமித்தல், மற்றும் மாகாணத்தினுள் பயணிகள் போக்குவரத்து சேவைகளின் வினைத்திறனை அதிகரித்தல், மற்றும் அவற்றின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக புதிதான சேவைகளை ஆரம்பித்தல், பஸ் கட்டணம் பயணிகளிடமும் அனுமதிப்பத்திரதாரிகளிடம் அறவிடுகின்ற பயணக்கட்டணம், சேவைக்கட்டணம் மற்றும் அறவீடுகளை தீர்மானித்தல், ஒவ்வொரு வீதிகளிலும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற பஸ் வண்டிகளின் எண்ணிக்கைகளை தீர்மானித்தல், அனுமதிப்பத்திரதாரர்கள் சேவைகளை நடாத்திக்கொண்டிருக்குமிடத்து நியாயமான மற்றும் பொருளாதார ரீதியில் அவற்றை நடாத்தக்கூடிய நிலைக்கு ஒழுங்குபடுத்தல், மற்றும் ஏனைய விடயங்கள் சம்பந்தமான பணிகளுக்கு அவர்களுக்கு அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் அளித்தல்.
(xiv) தேவையான சந்தர்ப்பங்களில் மாகாணங்களுக்கிடையிலான அனுமதிப்பத்திரங்கள் விநியோகித்தல் சம்பந்தமான நடைமுறைவிதிகளைத் தயாரித்தல்.
(xv) மேற்காட்டப்பட்டுள்ள சகல விடயங்கள் தொடர்பாகவும் வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவும் வீதியை உபயோகப்படுத்துகின்ற எல்லோரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு வீதி ஒழுக்கங்கள் மேம்படுத்துகை அதற்கான நிலையான தன்மை வாய்ந்த விடயங்கள் சம்பந்தமாக கட்டளைகளைப் பிறப்பித்தல் மற்றும் செயற்படுத்தல்.
(xvi) வடமாகாணத்தில் நிரந்தரமாக வசிக்கும் மூத்த பிரசைகளுக்கு (70 வயதிக்கு மேற்பட்ட) அதிகாரசபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் சலுகை அடிப்படையில் பயண வசதிகளை ஏற்படுத்துதல்.
போக்குவரத்துக் சேவைக்கம்பணிகள், சங்கங்கள், மற்றும் சம்மேளனங்களை உருவாக்குதல், மீளமைத்தல், மற்றும் பதிவுசெய்தல்
(52) வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்தினை மேம்படுத்தும் பொருட்டு பின்வரும் விடயங்கள் தொடர்பிலும் அமைச்சரினால் காலத்திற்கு காலம் ஒழுங்கு விதிகளையும் கட்டளைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கலாம்;
(i)வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் காணப்படுகின்ற தனியார் பேரூந்துகள், முச்சக்கரவண்டிகள், சிற்றூர்திகள், பாரவூர்திகள் என்பவற்றின் ஊடாக சேவை வழங்குகின்ற உரிமையாளர்களை உள்ளடக்கியதான தனித்தனியான போக்குவரத்துச் சேவைக்கம்பனிகள், மற்றும் சங்கங்களை உருவாக்குதல், மீளமைத்தல், மற்றும் பதிவுசெய்தல்.
(ii)மேற்படி உபபிரிவு (i) இன் கீழ் ஆக்கப்படுகின்ற அமைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு தேவைக்கேற்ப உறுப்பினர்களை உள்வாங்கி வடமாகாணத்திற்கான தேவைக்கேற்ப தனித்தனியாக சம்மேளனத்தை உருவாக்குதலும் கண்காணித்தலும்.
(iii)மேற்கண்டவாறு உருவாக்கப்படுகின்ற அமைப்புக்கள் தமது நிர்வாகத்தினை கொண்டு நடாத்தும் பொருட்டு யாப்பு விதிகளை உருவாக்க உதவுதலும் மற்றும் கண்காணித்தலும்;.
(iv)ஏலவே இருக்கின்ற யாப்பு விதிகளை உள்வாங்குவதாயின் அவை வடமாகாணத்தின் போக்குவரத்து சேவைக்கு பங்கம் விளைவிக்காதவாறு இருத்தல் வேண்டும். அன்றேல் அத்தகைய யாப்பு விதிகளை நீக்குதல் அல்லது திருத்துதலுக்கு வழிவகுத்தல்.
வீதி ஒழுங்குகளை மேம்படுத்துத்தல்
(53) வடமாகாணத்தின் வீதி ஒழுங்குகளை மேம்படுத்தும் பொருட்டு வீதியில் பயணிக்கின்ற இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய வாகனங்கள்ää பார ஊர்திகள் மற்றும் ஏனைய வாகனங்கள் தொடர்பில் காலத்திற்கு காலம் அமைச்சரினால் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்படலாம்
தவறுகளும் தண்டனைகளும்
(54) எவரேனும் ஆளொருவர் இந்த நியதிச்சட்டத்தின் ஏதேனும் ஏற்பாடுகளை அதன் கீழ் ஆக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட ஒழுங்கு விதிகளை, கட்டளைகளை, பணிப்புகளை மீறுமிடத்து அல்லது அதற்கு ஏற்புடையதாக செயற்படுவதற்கு தவறுமிடத்து அல்லது அதில் உள்ளடக்கிய முக்கிய தகவல்களை தனது அறிவுக்கு எட்டியவாறு பொய்யானதும் தவறானதுமான ஏதேனும் அறிக்கைகள், தகவல்கள் அல்லது விளக்கமளித்தல் அதை எழுத்தினாலோ அல்லது வேறு விதத்திலோ சமர்ப்பிக்கப்பட்டிருக்குமிடத்து அவர் நீதவான் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுக்கப்படுகின்ற சுருக்க முறையிலான வழக்கு விசாரணையின் போது தவறாளியாகக் காணப்படுமிடத்து இந்த நியதிச்சட்டத்தில் வேறுவகையாக தண்டனை குறித்துரைக்கப்பட்டாலன்றி அவர் ரூபா 10,000 /- மேற்படாத தண்டப்பணத்திற்கும் அல்லது ஒரு வருடத்திற்கு மேற்படாத சாதாரண சிறைத்தண்டனைக்கு உட்படுத்துவதற்கு அல்லது தண்டப்பணமும் சிறைத் தண்டனையுமான இரண்டு வகைகளாலும் தண்டனைக்கு ஆளாகலாம்.
தவறுகளும் தண்டனைகளும்
(55) (1) பயணச்சீட்டு விநியோகிக்க தவறும் நடத்துநர் தவறொன்றை புரியும் தவறாளியாவார் என்பதுடன் நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர் தவறாளியாகக் காணப்படுமிடத்து ரூபா 1,500/- க்கு மேற்படாத தண்டனைக்கு ஆளாவார்.
(2) இந்நியதிச்சட்டத்தின் கீழ் பயணிகள் போக்குவரத்து சேவைகள் அனுமதிப்பத்திர அதிகாரத்தின் கீழ் சேவையில் ஈடுபடுகின்ற பஸ்வண்டியில் பயணிக்கின்ற பயணியொருவர்.
(அ) அவர் நடாத்துநரிடம் பயணத்திற்கான பயணச்சீட்டை பணம் கொடுத்து பெற்றுக்கொள்வதிலிருந்தும் தவிர்ந்துகொள்ளுமிடத்து அல்லது மறுதலிக்குமிடத்து அவர் தவறொன்றை புரிந்த தவறாளியாவார் என்பதுடன் நீதிவானினால் அவர் தவறாளியாக காணப்படுமிடத்து ரூபா 1,500/- க்கு மேற்படாத தண்டப்பணத்திற்கு ஆளாவார்.
(ஆ) அப்பயணத்திற்கான தனக்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டை குறித்த பயணம் முடியும் வரை தன்வசம் தொடர்ந்து வைத்துக்கொண்டிராத ஒருவர் தவறொன்றை புரிந்த தவறாளியாவார் என்பதுடன் நீதவான் அவர்களினால் அவர் தவறாளியாக காணப்படுமிடத்து ரூபா 100/- க்கு மேற்படாத தண்டப்பணத்திற்கு ஆளாவார்.
(இ) பஸ் வண்டியின் நடத்துநர் அல்லது அதற்காக அதிகாரசபையினால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஆளொருவர் பயணச்சீட்டை காட்டுமாறு அல்லது சமர்ப்பிக்குமாறு வேண்டுமிடத்து அவ்வாறு செய்வதற்கு தவறுமிடத்து அல்லது மறுதலிக்குமிடத்து தவறொன்றை புரிந்த தவறாளியாக காணப்படுவார் என்பதுடன் நீதவானினால் அவர் தவறாளியாக காணப்படுமிடத்து ரூபா 1,500/- க்கு மேற்படாத தண்டப்பணத்திற்கு ஆளாவார்.
3) இருப்பினும் 55 (2) (அ) பிரிவிற்கமைய எவரேனும் பிரயாணியொருவர் பணத்தை அதிகார சபையினால் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரசபையின் அலுவலர் ஒருவரிடம் ரூபா 100 க்கான மிகைவிதிப்பு தொகையொன்றையும் அப்பயணத்திற்காக அவரினால் செலுத்தவேண்டியிருந்த பயணக்கட்டணத்தின் இரண்டு மடங்கையும் செலுத்துவதற்கு இணங்குமிடத்து அவ்வாறான பயணி ஒருவருக்கு எதிராக 55 (2) (அ) பிரிவின் கீழான தவறொன்று தொடர்பான வழக்குத்தாக்கல் செய்வதற்கோ அல்லது வழக்குத் தொடர்வதையோ செய்யதலாகாது.
4) இருப்பினும் 55(2)(ஆ) பிரிவிற்கமைய எவரேனும் பிரயாணி ஒருவர் பணத்தை அதிகார சபையினால் அதிகாரமளிக்கப்பட்ட அதிகார சபையின் அலுவலர் ஒருவரிடம் ரூபா 25 ற்கான மிகைவிதிப்பு தொகையொன்றையும் அப்பயணத்திற்காக அவரினால் செலுத்தவேண்டியிருந்த பயணக்கட்டணத்தின் இரண்டு மடங்கையும் செலுத்துவதற்கு இணங்குமிடத்து அவ்வாறான பயணி ஒருவருக்கு எதிராக 55 (2) (ஆ) பிரிவின் கீழான தவறொன்று தொடர்பான வழக்குத்தாக்கல் செய்வதற்கோ அல்லது வழக்குத் தொடர்வதையோ செய்யதலாகாது.
ஆள்சார் சபையினால் புரியப்படுகின்ற தவறு சம்பந்தமாக சிலருக்குள்ள பொறுப்புக்கள்
செல்லுபடியற்ற தாக்குதல்
(56) இந் நியதிச்சட்டத்தின் கீழ் தவறு புரிந்தமை ஆள்சார் சபையாகுமிடத்து குறித்த ஆள்சார் சபை கூட்டுத்தாபனமாகுமிடத்து தவறைப் புரிகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த கூட்டுத் தாபனத்தின் பணிப்பாளர், பொது முகாமையாளர், செயலாளர் அல்லது அவ்வாறான பிற அதற்கு சமனான அலுவலர் ஒருவராக இருந்த சகலருக்கும், அல்லது குறித்த ஆள்சார் சபை வியாபார நிறுவனமாகுமிடத்து தவறைப் புரிகின்ற நேரத்தில் குறித்த வியாபார நிறுவனத்தின் பங்காளராக இருந்த சகலரும் தவறு புரியப்பட்டதாவது அவரின் அறிவின் படி மறை சூழ்ச்சி அற்றது எனவும் மற்றும் தனது பணிகளின் போதான சூழ் நிலை மற்றும் சகல சந்தர்ப்பங்கள் சார்ந்த விடயங்களையும் கவனத்தில் எடுத்து தவறு புரிவதை தடுப்பதற்காக அவரினால் நடைமுறைப்படுத்த வேண்டியதில் இருந்து முறையான எல்லா முயற்சிகளையும் அவர் நடைமுறைப்படுத்தினார் என அவரினால் நிரூபித்து காட்டினால் அன்றி அவர் இந்நியதிசட்டத்தின் கீழ் தவறொன்றை புரிந்ததாக கருதப்படுவார்.
(57) மாவட்ட செயலாளரின் கீழ் அல்லது வேறு எழுத்திலான சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள சகல பயணிகள் போக்குவரத்துச் சேவை அனுமதிப்பத்திரங்களும் அதன் செல்லுபடி காலத்தினுள் இந் நியத்திச்சட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதிபத்திரமாக கருதுதல் வேண்டும்.
வழக்கு தாக்கல் செய்யும் போது பாதுகாப்பு (58)1)(அ) அதிகார சபையினால் இந் நியதிச்சட்டத்தின் கீழ் நல் எண்ணத்துடன் புரியப்பட்ட அல்லது புரிவதற்கு கருதும் ஏதேனும் செயல் ஒன்று சம்பந்தமாக அதிகார சபைக்கு எதிராக அல்லது
(ஆ) அதிகார சபையின் எவரேனும் உறுப்பினர் ஒருவர்ää அலுவலர் ஒருவர் அல்லது ஊழியர் ஒருவரினால் இந் நியதிச்சட்டத்தின் கீழ் அல்லது அதிகார சபையின் கட்டளைக்கேற்ப நல் எண்ணத்துடன் புரியப்பட்ட அல்லது புரிவதற்கு கருதும் ஏதேனும் செயல் ஒன்று சம்பந்தமாக குறித்த உறுப்பினருக்குää அலுவலருக்கு அல்லது ஊழியருக்கு எதிராக எந்தவொரு குடியியல் அல்லது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்படல் ஆகாது.
(2) முதலாவது உபபிரிவின் கீழ் காட்டப்பட்டுள்ள எவரேனும் ஆளொருவரினால் இந்நியதிச்சட்டத்தில் கீழ் அல்லது அதிகாரசபையின் கட்டளைக்கேற்ப புரியப்படுகின்ற அல்லது புரிவதற்கு கருதுகின்ற ஏதேனும் செயலொன்று சம்பந்தமாக குறித்த ஆளிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஏதேனும் குடியியல் அல்லது குற்றவியல் வழக்கொன்றின் போது அவரினால் செலவு செய்யப்பட்ட ஏதேனும் செலவினங்கள் குறித்த செயல் நல்லெண்ணத்துடன் புரியப்பட்டது என அல்லது புரியக்கருதப்பட்டதென நீதிமன்றம் தீர்மானிக்குமிடத்து அதிகாரசபையின் நிதியத்திலிருந்து செலுத்துதல் வேண்டும்.
1991ம் ஆண்டு 37ம் இலக்க சட்டமூலத்தின் சட்டவிதிகள் இணங்காதபோது இந்நியதிச்சட்டம் மேலோங்கிநிற்கும் (59) இந்த சட்ட மூலம் தொடர்பில் ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டுமாயின் தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் 1991ம் ஆண்டு 37ம் இலக்க சட்டமூலத்தின் படி சட்டவிதிகள் இணங்காதபோது அவை இதன்பிரகாரம் செயற்படும்.
இசைவின்மை வேறுஏற்படுமிடத்து தமிழ் உரையே மேலோங்கி நிற்றல
பொருள் கோடல்
(60) இந்நியதிச்சட்டத்தின் சிங்களää தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் இசைவின்மை அல்லது மாறுபாடு ஏற்படுமிடத்து தமிழ் உரையே மேலோங்கி நிற்றல் வேண்டும்.
(61) நியதிச்சட்டத்தில் “உள்ளுராட்சி நிறுவனம்” எனப்படுவது ஏதேனும் மாநகரசபை, நகரசபை, பிரதேசசபை எனப்பொருள்படும்.
“அமைச்சர்” எனப்படுபவர் வடக்குமாகாணசபை அமைச்சரவையின் போக்குவரத்து தொடர்பிலான விடயத்திற்கு பொறுப்பான அமைச்சராவார்.
“ஓம்னிபஸ் வண்டி அல்லது பயணிகள் போக்குவரத்து அங்கீகாரமளிக்கப்பட்ட வாகனம்;” எனப்படுவது மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் ஓம்னிபஸ் வண்டியாக பதிவுசெய்யப்பட்ட மோட்டார் கோச் வண்டி கருதப்படுகின்றது என்பதுடன் அதற்கு இரு பயன்பாட்டிற்கான வாகனமும் உள்ளடக்கப்பட்டதாக கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
“பயணி” எனப்படுபவர் வாடகை வண்டியில் அல்லது பஸ்வண்டியில் அல்லது பயணிகள் போக்குவரத்துக்கு அங்கீகாரமளிக்கப்பட்ட வாகனமொன்றில் பயணிக்கின்ற ஆனாலும் சாரதி மற்றும் பஸ்வண்டியில் அல்லது பயணிகள் போக்குவரத்துக்கு அங்கீகாரமளிக்கப்பட்ட வாகனமாயின் நடத்துநர் உள்ளடக்கப்படாத ஆளாவார்.
“மாகாணம்” எனப்படுவது இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வடக்கு மாகாணம் எனப் பொருள்படும்.
“ஆளுநர்” எனப்படுபவர் வடக்கு மாகாண ஆளுநர் எனப் பொருள்படும்.
“மாகாணசபை” எனப்படுவது வடக்கு மாகாண சபை எனப் பொருள்படும்.
“மாகாண நிதியம்” எனப்படுவது 1987ஆம் ஆண்டின் 42ம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 19 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட வடக்கு மாகாண நிதியம் எனப் பொருள்படும்.
போக்குவரத்து நியதிச் சட்டம் சபையில் சமர்ப்பிப்பு...-Photos Reviewed by NEWMANNAR on March 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.