அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உயிலங்குளத்தில் இடம் பெற்ற 'சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா'

 மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், 'சூழல் நேய   பன்முக  விவசாயம்  மற்றும் நெல் அறுவடை வயல் விழா'' இன்று வெள்ளிக்கிழமை (10) காலை 10 மணியளவில் மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.


முதலில் பாரம்பரிய விவசாய முறை களுடன் நவீன மற்றும் நீடித்த தொழில் நுட்பங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட  நெல் அறுவடையான வயல் விழா இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ச.சிவசிறி,வடமாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.செந்தில் குமார்,வடமாகாண மேலதிக மாகாண விவசாய பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டு  பாரம்பரிய முறைப்படி அறிவு வெட்டி நெல் அறுவடையை  ஆரம்பித்து வைத்தனர்.


அதனைத்தொடர்ந்து  விவசாய பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தோட்டச் செய்கையையும் பார்வையிட்டதோடு,வருகை தந்த பாடசாலை மாணவர்களுக்கு தோட்டச் செய்கை தொடர்பாக விவசாய போதனாசிரியர் களினால் விளக்கமளிக்கப்பட்டது.


குறித்த நிகழ்வில் மன்னார் விவசாய திணைக்கள அதிகாரிகள், மாவட்ட விவசாய பயிற்சி அதிகாரிகள்,பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள் விவசாயிகள்,தோட்டச் செய்கை யாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.











மன்னார் உயிலங்குளத்தில் இடம் பெற்ற 'சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா' Reviewed by Vijithan on April 11, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.