அண்மைய செய்திகள்

recent
-

பிரபாகரனின் கைவிரல் அடையாளம் யாழ். கண்காட்சியில்...


இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொலிஸ் சாட்சியங்கள் இரண்டாவது கண்காட்சி, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் எதிர்வரும் 27ம் திகதி காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

கடந்த 6 தசாப்தங்களுக்கு முன்னால் இருந்து இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய அரிய புகைப்படங்கள், இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமான மத்திய வங்கி மீதான குண்டுதாக்குதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கைவிரல் அடையாளங்கள் என்பனவும் இதில் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.-
பிரபாகரனின் கைவிரல் அடையாளம் யாழ். கண்காட்சியில்... Reviewed by Author on March 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.