அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் நிகழப்போகும் சாதக, பாதக நிலைகள் என்ன? சோதிடர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்....


இலங்கையில் மனித செயற்பாட்டுக்கு அப்பால் பல்வேறு பாதகமான விளைவுகள் ஏற்படவுள்ளதாக சிங்கள ஜோதிடர் ஒருவர் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் சோதிடர் பீ.ஏ.பெரேரா என்பவர் வெளியிட்டுள்ள பல தகவல்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த சோதிடரினால் 2004ம் ஆண்டு சுனாமி பேரனர்த்தம் நிகழும் என உறுதிபட தெரிவித்ததாகவும், அதேபோன்று பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

நடப்பாண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள சாதக, பாத விளைவுகளை அவர் கோடிட்டு காட்டியுள்ளார்.

சுனாமி போன்று பேரனர்த்தங்கள் நிகழ வாய்ப்பு இல்லாத போதும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விமான விபத்து, மோசமான உஷ்ணம் என்பன ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியாகவும் சில எதிர்வு கூறல்களை அவர் விடுத்துள்ளார். இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட வாய்ப்பில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும் அது உடனடியாக முறியடிக்கப்படும்.

2017ம் ஆண்டில் இலங்கையில் சிறந்த ஆட்சி நிர்வாகம் நடைபெறும். நாட்டின் தலைவர் நேர்மையானவராக இருப்பார். அவரை அண்டிய மோசடிகார்கள் பந்தாடப்படுவர். பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர்.

அடுத்த வரும் ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும். மக்கள் மகிழ்ச்சியான வாழ்கையை வாழ்வர்.

அடுத்த வரும் எட்டு மாதங்களில் பல கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறும். இதன்மூலம் கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்.

பலர் பொய் கூறுவார்கள். மக்கள் ஏமாற்றத்திற்குள் சிக்குவார்கள். மக்களை மதிக்காத நிலைமை ஒன்று ஏற்படும் எதிர்பார்க்காத அளவிலான இரகசியங்கள் எதிர்வரும் காலங்களில் வெளியாகும்.

பல பாதாள உலக குழுவினர் உயிரிழப்பர். அவற்றில் பொலிஸ் அதிகாரிகளும் சிக்குவார்கள். முகத்துக்கு முகம் போராட்டம் என்ற நிலைமை ஏற்படும். கடந்த காலங்களில் வெலிகடை சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் போன்று இடம்பெறும். சமூகத்தில் உள்ள அப்பாவிகள் ஒரு பக்கமாக ஒதுங்கிவிடுவார்கள். அவர்களுக்கு தொந்தரவுகள் ஏற்படாது. தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

சட்டம் மேலும் கடுமையாக்கப்படும். தற்போது ஆரம்பமாகியுள்ள நிலைமை ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் ஆபத்தான நிலைமை ஏற்படும். ஒகஸ்ட் மாதம் 12ஆம் திகதி குரு மாற்றத்தின் பின் சில கட்டுப்பாட்டு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்னள.

சுனாமி ஆபத்து இல்லாத போதும், நெருப்பு மற்றும் வெப்பம் என்பனவற்றினால் பாதிப்புகள் ஏற்படும். இதேவேளை, இயற்கையின் ஊடாக பலரின் மோசடிகள் மற்றும் இரகசியங்கள் அம்பலமாகும். அவ்வாறு ஏற்படும் போது அவர்கள் வெட்கமடைவார்கள். பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். பல பிரபுகளின் வங்கி கணக்குகளில் உள்ள கறுப்பு பணம் வெளியில் வரும். பலர் உயர் பதவிகளை இராஜினாமா செய்ய நேரிடும்.

இந்த வருடத்தில் நெருப்பு மற்றும் வெப்பமான நிலைமை மாற்றமடைந்த பின்னர் இயற்கை மாற்றமாக சுனாமி ஏற்படாது. எனினும் நில அதிர்வுகள் ஏற்படும். மே, ஜுன், ஜுலை போன்ற காலப்பகுதியில் நில அதிர்வுகள் ஏற்படலாம். 2017 ஜனவரி மாதம் 16ஆம் திகதி வரையில் திடீர் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

விமானம் ஒன்று தீப்பிடித்து விழுந்து பெரிய ஆபத்தென்று ஏற்படுவதற்கு அறிகுறிகள் காணப்படுகின்றது.

2017ஆம் ஆண்டும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் அவ்வாறான விபத்தொன்று ஏற்படலாம். இதுவரையில் கேள்விப்படாத பல நோய்களினால் பெண்கள் பாதிக்கப்படலாம். உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என சோதிடரை மேற்கோள் காட்டி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் நிகழப்போகும் சாதக, பாதக நிலைகள் என்ன? சோதிடர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்.... Reviewed by Author on April 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.