வித்யா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு....
யாழ் புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம் ரியாலினால் சந்தேகநபர்களின் விளக்கமறியல் இன்று (29) மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சந்தேகநபர்கள் 12 பேரும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்கள் 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
மாணவி வித்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் மரபணு பரிசோதனை அறிக்கை ஏற்கனவே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த வருடம் மே மாதம் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வித்யா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு....
Reviewed by Author
on
June 29, 2016
Rating:

No comments:
Post a Comment