அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள்! சிவமோகன் எம்.பி....


வடக்கு பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

பல்கலைக்கழகங்களில் பிரவேசிப்பதற்கான போட்டி காரணமாக மாணவர்கள் இன்று பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனினும் அனைத்து மாணவர்களும் சுதந்திரமாக கல்வி கற்கவும், இலவசக் கல்வியை பெற்றுக்கொள்ளவும் உரிமையுண்டு.

இதனை வரையறுக்கவோ மட்டுப்படுத்தவோ கூடாது.

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது.

வடக்கு மாகாண பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.

தன்னார்வ ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு சம்பளங்கள் வழங்கப்படுவதில்லை.

இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என டாக்டர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள்! சிவமோகன் எம்.பி.... Reviewed by Author on June 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.