இலங்கையில்.....இராணுவ வீரருடன் மொபைல் காதல்! 2 மாதம் பேசவில்லை, கடலில் குதித்த பாடசாலை மாணவி
பாடசாலை சீருடையுடன் மாணவி ஒருவர் கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று திக்வெல்ல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
எனினும் குறித்த மாணவி கடலுக்குள் பாய்வதை அவதானித்த பிரதேவசாசிகள், திக்வெல்ல பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸாரும், பிரதேசவாசிகளும் இணைந்து மாணவியை காப்பாற்றியுள்ளனர்.
குறித்த மாணவியிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய தனது நண்பி ஒருவரின் தொலைபேசி ஊடாக இராணுவ சிப்பாய் ஒருவருடன் காதல் ஏறபட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக குறித்த நபர் தன்னுடன் கதைக்காமையினால் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு தீர்மானித்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராம பாடசாலை ஒன்றில் குறித்த மாணவி கல்வி பயில்வதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில்.....இராணுவ வீரருடன் மொபைல் காதல்! 2 மாதம் பேசவில்லை, கடலில் குதித்த பாடசாலை மாணவி
Reviewed by Author
on
June 08, 2016
Rating:

No comments:
Post a Comment