மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு திடீர் விஜயம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாக்கிருஷ்ணன்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு 17-06-2016 இன்று திடீர் விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர்...
கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாக்கிருஷ்ணன் அவர்களும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற பிரதிக் குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும், அவர்களோடு கல்வி அமைச்சின் தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிப்பாளர் எம்.முரளீதரன்ஆகியோர் இணைந்து இன்று விஜயம் மேற்கொண்டு கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் அவர்களை சந்தித்து கல்லூரியின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு திடீர் விஜயம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாக்கிருஷ்ணன்
Reviewed by Author
on
June 18, 2016
Rating:

No comments:
Post a Comment