4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எழுத்து வடிவங்கள் கண்டுபிடிப்பு!
எகிப்திலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 4 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எழுத்துருக்களை கண்டுபிடித்துள்ளனர்.
இதுவே அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிக பழமை வாய்ந்த எழுத்துருக்கள் என சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் ஆச்சரியமானதாக இருக்க, அதில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் இன்னொரு விதத்தில் ஆச்சரியத்தை தருகிறது.
இதில் Pharaoh Khufu ஆட்சிக்காலத்தில் (2589 BC - 2566 BC), Pyramid இனை கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த வேலையாட்களின் அன்றாட தகவல்களை கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆவணங்கள் கடந்த 2013 அளவில், Wadi al-Jarf கோட்டையினருகேயுள்ள குகைத்தொடர்களில், Pierre Tallet மற்றும் Sayed Mahfouz எனும் எகிப்தியளாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இச் சுவடுகளை இதுவரை யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இதன் 30 பக்கங்கள் எகிப்து அருங்காட்சியகத்தில் பார்வைக்கென வைக்கப்படவுள்ளது.
இது ஆய்வாளர்களுக்கு மிகப்பெரிய தகவல் புதையலாகவே பார்க்கப்படுகிறது.
இதில் பொறிக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் எகிப்து அக்காலத்தில் எவ்வாறு ஆட்சி செய்யப்பட்டது எனவும், எவ்வாறு பிரமிட்ட கட்டப்பட்டது எனவும் சொல்லுகின்றன.
இவ் ஆவணங்கள் Khufu ஆட்சிக்காலத்தின் மிக திறமையான நிர்வாகத்தையே காட்டி நிற்கின்றது.
மேலும் எத்தனை வேலையாட்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலிகள் சம்பந்தப்பட்ட விடயங்களும் இதில் அடக்கப்பட்டுள்ளன.
இங்கு மூத்த தொழிலாளி Marr பற்றி ஒரு தனிச் சுவட்டில் அவரது தகவல்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதில் அவர் 3 மாதங்களாக வேலை பார்த்தது தொடர்பாகவும், அவரது கடமைகள் தொடர்பாகவும் பொறிக்கப்பட்டிருந்தது.
இதனை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட இருப்பதன் மூலம், பொதுமக்களும் இது பற்றி நேரில் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளது.
4500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எழுத்து வடிவங்கள் கண்டுபிடிப்பு!
Reviewed by Author
on
July 24, 2016
Rating:

No comments:
Post a Comment