அண்மைய செய்திகள்

recent
-

தமிழரை பற்றி பேசினால் பயங்கரவாதி என்கின்றார்கள் என்னை: விக்கினேஸ்வரன்...


தமிழரை பற்றி என்னதான் பேசினாலும் பயங்கரவாதியை போல் தன்னை கொழும்பில் சித்தரிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த 60வது வருடம் தமிழருக்கு மற்றவரை முன்னேற விடக் கூடாது என்ற எண்ணம் இன்னமும் மாற வில்லை என்றும் இதற்கு எடுத்து காட்டாக இரண்டாம் உலக யுத்ததின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்றையும் நினைவு படுத்தினார்.

இதேவேளை, அண்மையில் தான் ஒரு இடத்தில் உரையாற்றிய விடயம் ஒன்றுக்கு பதில் கிடைத்துள்ளதாகவும் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார்.

மேலும் தான் உரையாற்றிய விடயத்தில் , கோயில்களில் 6 காலம் பூஜை செய்யுங்கள் புதிய கோவில்கள் கட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என தெரிவித்ததற்கே குறித்த பதில் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது போன்று நாங்கள் சொல்லும் கருத்துக்கு பொது மக்களிடம் இருந்து நல்ல வரவேற்ப்பு கிடைக்கின்றமை மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் கூறினார்.

மேலும், அமைச்சர் மனேகணேசன் போன்றவர்கள் மலையகத்தின் அபிவிருத்தி மட்டும் இன்றி முழு நாட்டின் அபிவிருத்தியிலும் கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.


வாழும்போதே வாழ்த்துவோம் - பாராட்டு விழா

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் கவிஞர் வேலணை வேணியனின் பணி நலன் பாராட்ட விழா இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாராட்டு விழாவினை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஜனநாயக இளைஞர் இணையத்தின் ஏற்பாட்டில் வாழும்போதே வாழ்த்துவோம் என்ற தலைப்பின் கீழ் நடைபெற்றதுள்ளது.

இந்நிகழ்வானது அமைச்சர் மனோகணேசன் தலைமையில் இன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் விசேட அதிதியாக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரை பற்றி பேசினால் பயங்கரவாதி என்கின்றார்கள் என்னை: விக்கினேஸ்வரன்... Reviewed by Author on July 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.