வவுனியா பொருளாதார வலயத்திற்கு 2010ம் ஆண்டே ஓமந்தையில் காணி ஒதுக்கீடு!
வவுனியா மாவட்டத்தில் பொருளாதார மையம் அமைப்பதற்காக 2010ம் ஆண்டே ஓமந்தையில் 18 ஏக்கர் காணி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
15.06.2010ம் ஆண்டு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் வட மாகாண ஆளுனர் சந்திரசிறி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வவுனியா மாவட்ட அபிவிருத்தி குறித்து பேசப்பட்ட போது மாவட்ட பொருளாதார வலயமாக ஓமந்தை, பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் 18 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த 18 ஏக்கர் காணிக்கும் அனுமதி வழங்கப்பட்டு வனஇலாகாவிடம் இருந்து அவை விடுவிக்கப்பட்டு அதற்கான வரைபடங்கள் கூட 2011ம் ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த 18 ஏக்கர் காணியும் கைவிடப்பட்ட வெற்றுக் காணியாகவே அமைந்துள்ளது. அதற்கு அண்மித்ததாக கைத்தொழில் வலயத்திற்காக 30 ஏக்கர் காணியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், நூர்தின் மசூர், நுனைஸ் பாறுக், நகரசபை உறுப்பினர்களாக எஸ்.என்.ஜி.நாதன், ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என 84 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, இவ்வாறு காணி 2010ம் ஆண்டே காணி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதும் தற்போது வவுனியாவிற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைக்க இடத்தெரிவு தொடர்பில் இழுபறி நிலை காணப்படுகின்றமை வேடிக்கையாகவுள்ளது என பலரும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொருளாதார வலயத்திற்கு 2010ம் ஆண்டே ஓமந்தையில் காணி ஒதுக்கீடு!
 
        Reviewed by Author
        on 
        
July 03, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
July 03, 2016
 
        Rating: 


No comments:
Post a Comment