அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண அமைச்சர்களின் ஊழலை விசாரிக்க குழு! முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை....


வட மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் இருந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் வருவதனால் அது தொடர்பாக விசாரணை செய்ய குழு அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வட மாகாணசபையின் அனுமதியை வடக்கு முதல்வர் கோரியுள்ளார்.

எதிர்வரும் 58 ஆவது அமர்வில் இது தொடர்பாக அனுமதி கோரி பிரேரணையை வடக்கு முதல்வர் முன்வைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை வட மாகாண சபை உறுப்பினரான பசுபதிப்பிள்ளை வட மாகாண விவசாய அமைச்சர் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என ஏற்கனவே கோரியிருந்த நிலையில் முதலமைச்சரினால் இவ்வாறான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் எதிர்வரும் அமர்வின்போது இவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

வட மாகாண அமைச்சர்களின் ஊழலை விசாரிக்க குழு! முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை.... Reviewed by Author on August 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.