வடக்கில் முதலீட்டாளர் மாநாடு
வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முதலீட்டாளர் கூட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 20ஆம் திகதி இந்த கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக இன்று யாழ் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முடிவெடுத்துள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த முதலீட்டாளர் கூட்டத்திற்காக விசேட தொடர்பு அலுவலகம் ஒன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக அலுவலகத்திற்குள் அமைக்கப்படும் எனவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் முதலீட்டாளர் மாநாடு
Reviewed by Author
on
August 06, 2016
Rating:

No comments:
Post a Comment