காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள்....மது போதையில் தந்தை...
அமெரிக்காவில் மதுபோதையில் இருந்த தந்தை ஒருவர் தமது இரட்டைக் குழந்தைகளை காருக்குள் விட்டு சென்றதால் மூச்சுத்திணறி இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்ஜியா பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று தமது குழந்தைகள் இருவருடன் காரில் புறப்பட்ட அவர்களது தந்தை 24 வயதான Asa North அதிக மது போதையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் பிறந்து வெறும் 16 மாதங்களேயான குழந்தைகள் இருவரையும் காருக்குள் விட்டு விட்டு அஸா வீட்டுக்குள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
வெகு நேரம் கடந்த பின்னர் அஸாவுடன் அதே குடியிருப்பில் வாழ்ந்து வரும் சிலர், காருக்குள் குழந்தைகள் சிக்கியிருப்பதை கண்டுள்ளனர்.
கொளுத்தும் வெயிலில் காருக்குள் சிக்கிய குழந்தைகள் இருவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளன.
இதனிடையே தகவலறிந்து வந்த பொலிசார், குழந்தைகள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தைகள் ஏற்கனவே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தைகளின் தந்தையை கொலை குற்றத்திற்கு பொலிசார் கைது செய்துள்ளனர். மட்டுமின்றி அக்கறையின்மை காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் எத்தனை மணி நேரம் குழந்தைகள் அந்த வாகனத்தினுள் இருந்தது என்பது தெரியவில்லை எனவும், குழந்தைகளின் தந்தையிடம் இருந்து மதுவின் அளவை கணக்கிடும் பொருட்டு இரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குழந்தைகளை ஏன் காருக்குள் அஸா விட்டுச் என்றார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் எனவும், இது ஒரு விபத்தாக மட்டுமே இருக்க வேண்டும் என நம்புவதாக அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த இரட்டைக் குழந்தைகள்....மது போதையில் தந்தை...
Reviewed by Author
on
August 07, 2016
Rating:

No comments:
Post a Comment