அண்மைய செய்திகள்

recent
-

நியூயார்க்கில் சுவிஸ் கலைஞன் செய்த வேலை!


சுவிட்சர்லாந்தில் தேசிய நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளையொட்டி உலகம் முழுவதும் ஒளிரும் சிற்பங்களையும் நினைவுச் சின்னங்களையும் அமைத்து வரும் சுவிசின் சிற்ப கலைஞர் Gerry Hofstetter சுவிஸ் சுதந்திர போராட்ட வீரர் William Tell அவருக்கு நியூயார்க்கில் சிலை வைத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள Rat தீவில் தான் இந்த சிலையை திறந்து வைத்துள்ளார். சுவிஸில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய 2 பேர் தான் இந்த தீவிற்கு உரிமையாளர்கள்.

இந்நிலையில் அங்கு சிறிய கற்களை கொண்ட பாதை உருவாக்கப்பட்டு பாறையில் சிலை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சிற்ப கலைஞர் Gerry Hofstetter கூறுகையில், நான் Lady Libertyக்கு ஆதரவு அளிக்கிறேன். இவர்கள் இருவரும் மனித குலத்தின் அடிப்படை உரிமைகளை வலுப்படுத்துவர்.

ஜனநாயகத்தை கண்டுபிடித்தது அமெரிக்கர்கள். ஆனால் அதை எடுத்து செம்மைப்படுத்தியது சுவிஸ் தான் என்று கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் William Tell அவர்களின் உண்மையான கற்சிலை சுவிட்சர்லாந்தின் Altdorf பகுதியில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க்கில் சுவிஸ் கலைஞன் செய்த வேலை! Reviewed by Author on August 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.