அதுமட்டுமா செத்தவீட்டிலும் செல்ப்பி.......
தாய் மொழி மறந்து அந்நியமொழி
தாய் நாடு மறந்து வெளிநாடு
தனது இனம் மறந்து……….
தான் தமிழன் என்பதை……மறந்தும்
பெருமைக்காய் வாழும் எருமைகளே…..எருமைகளே….
ஆபாசம் என்றால் சாந்தி
அகிம்சை என்றால் காந்தி
அரச சபையிலும் சும்மா குந்தி
அரட்டையடித்து ஆட்டையைப்போடும் மந்திகளே….
உன்னைப்பெற்ற தாயையும்
உனது தாய் நாட்டையும்
உதாசினம் செய்து கொண்டு மானம் விற்கும்
உங்களுக்கேண்டா உடலில் உயிர்……..
உணர்வுடன் போராடியவன் ஊனமாய் கட்டிலிலே…
உயிரை பணையம் வைத்து களமாடினான் காட்டிலே
உரிமை வென்றவர்கள் விசஊசியுடன் கம்பிக்கூட்டினிலே-நீங்களோ
உல்லாசம் காண்கிறீர்கள் சொகுசு வீட்டிலே-வெளிநாட்டிலே….
தமிழர் நலனுக்காய் தம்வாழ்வையே
தமிழீழம் வேண்டி 12நாள் பசிகிடந்து
தன்னுயிரையே தந்த அண்ணன் திலீபனும்
தணியாத தாயக கனவுடன் அன்னை பூபதியையும்
தமிழ்கனவோடு தங்களை ஆகுதியாக்கிய
ஆயிரம் ஆயிரம் அன்பு மறவர்களையும்
அவர்களின் தியாகம் ஈகம் மறந்து
ஆடிக்காரும் அழகிய வீடும் அத்தனை சலுகைகளும்
ஆடம்பரமாய் தேவைதானடா…. உங்களுக்கு….
கட்சி வளர்ப்பதிலும்
ஆட்சி அமைப்பதிலும்
பட்டம் பதவிக்காய் மாறும் பச்சோந்திகளே
பட்டினியால் படுக்க வீடின்றி வீதியிலும் சகதியிலும்
பஞ்சம் பிழைக்கும் பாமர்களை பார்த்ததுண்டாடா....
அது என்னங்கடா ஆர்ப்பாட்டம் பேரணிகள்
அன்னைத்தமிழனுக்காய் குரல் கொடுப்பதென்றால்
அவசரமாய் வைத்தியசாலையில் அனுமதி-இதுவே
ஆடம்பர நிகழ்வுகள் விழாக்கள் அந்நியநாட்டுப்பயணம் என்றால் என்னை
அழைக்கவில்லை என்று சண்டைகள் வேறு….
துக்கவீட்டிலும்
பக்கம் பக்கமாய் அரசியல் பேசும்
வெட்கம் கெட்டவர்களே
வெற்றுக்கோப்பைகளே........
அதுமட்டுமா செத்தவீட்டிலும் செல்ப்பி
தனது கடமையை செய்து விட்டு சொந்த சொத்தை கொடுத்தது போல அதையே விதம் விதமாய் படமெடுத்து பேஸ்புக் ருவிற்றர் வட்சப் பைவர் உடனுக்குடன்
அப்லோட்செய்து விர்றீங்களேடா பூச்சியங்களே…..
உங்களை நம்பியொரு கூட்டம்
தமிழ் இராஜ்ஜியம் அமையுமென்று தவம் கிடக்கின்றதே….
பாவப்பட்ட இனமாக பாரினிலே தமிழினம்
காரணம் தறிகெட்ட நாய்களுக்கு ஓட்டுப்போட்டதுதாண்டா……
தமிழண்டா தமிழண்டா என மேடைகளில் தொண்டை கிழிய கத்தும்
தரங்கெட்டவங்களே… பண்டைத்தமிழனை….. பாரம்பரியகொண்ட தமிழை பாடையில் ஏற்றும் காடைகளே பண்ணாடைகளே….
தரித்திரங்களே-சரித்திரம் கொண்ட இனமடா தமிழினம்
தங்களின் சுயநலத்திற்காய்
தங்கமான எங்கள் இளைஞர் யுவதிகளை
தரங்கெட்ட போதைக்கும் கவர்ச்சிக்கும் அடிமையாக்கி விட்டு
தமது வாழ்வை நிலைநாட்டும் பரதேசிகளே….
கையில் கத்தி
தலையில் இல்லை புத்தி
வீதிகளில் சுத்தி
போதைப்பொருள்களின் மத்தி
பொது மேடைகளில் பேசுகிறீர்கள் கத்தி-பைத்தியக்கூட்டங்களே.....
உங்கள் பிள்ளைகள் எல்லாம்
படிப்புக்கும் உழைப்புக்கும் வெளிநாடு
பண்டிக்கூட்டங்களே இன துடிப்புக்கும்
ஊமை நடிப்புக்கும் உங்களுக்கு தாய்நாடு…நீங்கள் தாண்டா தமிழர்களின் சாபக்கேடு….
குடியும் கும்மாளமும்
குலப்பெருமையும் நாசமடா
குவலயம் தமிழன் ஆண்ட
குட்டிப்புலிக் கூட்டமடா…..
கூட்டிக்கொடுத்தும் காட்டிக்கொடுத்தும்
வெட்டியாக சுத்தும் வேடதாரிகளே
வெட்டிப்போட இதயம் துடிக்கிறது-முடியாமல்
திட்டித்தீர்க்கிறேன் முடியும் ஒருநாள்
வட்டியும் முதலுமாய் பெட்டியில் போகுமுன்
குரங்குக்கூட்டம் என்றாலும்-தனது
குலத்துக்காய் ஒற்றுமையாய் சேருதடா
குனிந்து பணிந்து கோடிக்கும் லேடிக்கும்
குஞ்சம் பிடிக்கும் குறவர்களே… உங்கள்
குட்டைகள் நிரப்பி-
குறட்டை விட்டுத்தூங்குங்கள்
குத்துவிளக்காய் குவலயம் மொத்தம்
குதிப்பார்கள் கொதிப்பார்கள் மிதிப்பார்கள்-தமிழர்; மதிப்பார்கள்
-தனிவழி தமிழன்வழி-
அதுமட்டுமா செத்தவீட்டிலும் செல்ப்பி.......
Reviewed by Author
on
September 26, 2016
Rating:

No comments:
Post a Comment