பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட 10 நாட்கள் அனுமதி!
பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 10ம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் 3 மணிவரை பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும் என பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய பரிபாலன சபை யினர் அறிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக ஆலய பரிபாலன சபை யினர், இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
அதற்கான அனுமதி இராணுவத்தினரிடமிருந்து தற்போது கிடைத்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் குறித்த 10 நாட்களும் குறித்த நேரகாலப் பகுதியில் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட முடியும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட 10 நாட்கள் அனுமதி!
Reviewed by NEWMANNAR
on
September 27, 2016
Rating:

No comments:
Post a Comment