மன்-புனித.பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவனான நி.கிளஸ்ரன்......
2016 ஆண்டிற்கான 32வாது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா இம்மாதம் 13ம் திகதி முதல் 17ம் திகதி வரை கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
இவ்விளையாட்டுப்போட்டியில் மன்னார் கல்வி வலயம் சிறந்த முறையில் தமது திறமையினை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளது.
சாதனை படைத்த பாடசாலை மாணவர்களில் மன்-புனித.பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவனான செல்வன் நியூட்டன் கிளஸ்ரன் அவர்களினால் 800மீட்டர் தூரத்தினை 2.03.4 செக்கனில் கடந்து ஓட்டப்பந்தயத்தில் தேசியரீதியில் 5இடத்தை பெற்றுக்கொண்டார்.
இவர் யாழ்ப்பாணததில் நடந்த போட்டியில் மாகாணமட்டத்தில் 800 மீட்டர் தூரத்தினை 2.07.6 செக்கனில் கடந்து 1ம் இடத்தினை பிடித்ததோடு வர்ணச்சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.
பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் பக்திநாதன் ரூபன் பர்னாந்து அவர்களுக்கும் பாடசாலை முதல்வர் அருட்சகோ.J.ஸ்ரனிஸ்லஸ் அவர்களுக்கும் கல்விச்சமூகத்திற்கும் சமூகத்திற்கும் பாராட்டினையும் வாழ்த்தினையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
மன்-புனித.பற்றிமா மத்திய மகாவித்தியாலயத்தின் மாணவனான நி.கிளஸ்ரன்......
Reviewed by Author
on
October 21, 2016
Rating:

No comments:
Post a Comment