அண்மைய செய்திகள்

recent
-

கொக்குளாயில் விகாரை அமைக்க தனியார் காணியை தாரைவார்த்தவரை அரசாங்க அதிபராக நியமிக்க சதி!


முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பகுதி தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலம் சிங்களக் குடியேற்றங்களுக்கு அபகரிக்கப்பட்டு அங்கு வாழும் தமிழ் மக்கள் அச்சுறுத்தல் காரணமாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அண்மைக்காலமாக கொக்குளாய் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைத்து வருகின்றார். இதற்குரிய காணியை முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலராகக் கடமையாற்றியவரே தமக்கு இக்காணியை வழங்கியதாக வடக்கு ஆளுநர் கூறி வருகின்றார்.

இந்நிலையில், நேற்றையதினம் யாழ்ப்பாண ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் ஜெராவால் உருவாக்கப்பட்ட ‘இருளில் இதயபூமி’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விகாரை அமைப்பதற்கு தனியார் காணியை வழங்கிய கரைத்துறைப்பற்று பிரதேச செயலரை மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் சிலரும் பின்புலமாகச் செயற்படுவதாகவும் கூறியிருந்தார்.

குறித்த நபர் விகாரை அமைப்பதற்கு காணி வழங்கியமை உட்பட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டு எமது தலையீடுகளினால் அவர் (முன்னாள் கரைத்துறைப் பற்று பிரதேச செயலர் திரேஸ்குமார்) கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

தற்போது, குறித்த நபரை மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கும் பட்சத்தில் தமிழ் மக்களின் ஏனைய காணிகளும் பறிபோகும் நிலை உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொக்குளாயில் விகாரை அமைக்க தனியார் காணியை தாரைவார்த்தவரை அரசாங்க அதிபராக நியமிக்க சதி! Reviewed by NEWMANNAR on December 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.