நல்லூரில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட பாரதியாரின் பிறந்ததின நினைவு தினம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின 134வது பிறந்ததின நினைவுதினம் கடந்த 11 ஆம் திகதி நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாலை 4.00 மணியளவில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, பாரதியாரினால் எழுதப்பட்ட தமிழ் மொழி வாழ்த்துப் பாடலை பாடசாலை மாணவர்கள் பாடியுள்ளனர்.
மேலும், பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு இந்தியத் துணைத்தூதுவர் , பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராஜா, உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூரில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட பாரதியாரின் பிறந்ததின நினைவு தினம்
Reviewed by NEWMANNAR
on
December 13, 2016
Rating:

No comments:
Post a Comment