கிளிநொச்சியில் மனித உரிமைகள் தின நிகழ்வு!-Photos
சர்வதேச மனிதஉரிமைகள் தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணிக்கு கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் பிரஜைகள் குழுவின் தலைவர் சி.சின்னராசா தலைமையில் நடைபெற்றது. முதலாவதாக பொதுச்சுடரினை யாழ்ப்பாண, கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஏற்றி வைத்துள்ளார்.
அடுத்து மனித உரிமை செயற்பாட்டாளர்களான மறைந்த வண.பிதா கிளி. பாதர் மற்றும் மறைந்த ஆசிரியர் ஆனந்தராசா ஆகியோருடைய திருவுருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டது. அடுத்து மறைந்த மனித உரிமை செயற்பாட்டாளரான ஆசிரியர் ஆனந்தராசா ஞானபகார்த்த நினைவுப்பேருரையை கமநல சேவை உத்தியோகஸ்தர் நடராசா சுந்தரமூர்த்தி நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வின் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக் குழு தலைவர் வண. பிதா எஸ்.வி.மங்களராஜா நல்லிணக்கத்திற்கான 'சவால்களும் தடைகளும்'என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வின் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்ட யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக் குழு தலைவர் வண. பிதா எஸ்.வி.மங்களராஜா நல்லிணக்கத்திற்கான 'சவால்களும் தடைகளும்'என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கிளிநொச்சியில் மனித உரிமைகள் தின நிகழ்வு!-Photos
Reviewed by NEWMANNAR
on
December 13, 2016
Rating:

No comments:
Post a Comment