ஃபேஸ்புக்கில் கடவுள் மறுப்பு பதிவு போட்டதால் கொல்லப்பட்ட இஸ்லாமியர்?
பொதுவாக கடவுள் மறுப்பு கொள்கையில் ஈடுபாடு கொண்ட இஸ்லாமியர்கள் வெகு குறைவு. அப்படியே இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
காரணம் அந்த மதத்திலிருக்கும் அடிப்படைவாதிகளின் எதிர்வினைகள். குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, ஃபத்வா விதிப்பது என்று துளியும் கருத்து சுதந்திரமற்ற தன்மையுடனும் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள மறுக்கும் தன்மையுடனே அவர்கள் இருக்கிறார்கள்.
இதுபோன்ற சூழலில் கோவையைச் சேர்ந்த ஃபரூக் என்பவர் பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டு திராவிடர் விடுதலை கழகத்தில் இணைந்து இயங்கி வந்தார்.
அத்துடன் குறிப்பாக கடவுள் மறுப்பு கருத்துகளை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து எழுதி வந்தார். அதிலும் அவரது சொந்த மதமான இஸ்லாமியர்களின் அடிப்படைவாதம் குறித்து விமர்சித்து வந்தார்.
இந்நிலையில் அவர் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஃபரூக்கிற்கு மனைவியும் இரு சிறு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
அவரைப்பற்றி தெரிந்து கொள்ள ஃபேஸ்புக்கில் தேடிப்பார்த்தால், தன் குழந்தைகளுடன் போராட்டங்களில் கலந்து கொண்ட புகைப்படங்கள் கண்ணில் பட்டது.
அந்த குழந்தைகளின் முகம்.. தந்தையின் மரணத்தை அந்த பிஞ்சுகளின் உள்ளம் எப்படி தாங்கிக் கொள்ளும் என்று நினைக்கும்போதே மனம் வேதனை அடைகிறது.
மதத்தின் பெயரால் சக மனித உயிர்களை பலி கொடுத்து அப்படி என்னதான் சாதிக்கப்போகிறார்கள் இந்த மத அடிப்படைவாதிகள்.
பெரும்பாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் கடவுள் மறுப்பு, மற்ற மதத்தவர்களுக்கு தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களால் பிரச்னை வந்தால் முதலில் கண்டிப்பது என்று இருக்கிறார்கள். கடவுள் மறுப்பு பேசும் ஒரு இந்துவை அவர்களின் குடும்பத்தார் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
அப்படி சாதாரண ஒரு இந்துவிடமிருக்கும் கருத்து சுதந்திரத்தை மதிக்கும் தன்மையில் துளியும் அன்பைபோதிப்பதாக சொல்லும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் இல்லை. தற்போது ஃபரூக் கொலை தொடர்பாக கோவையைச் சேர்ந்த அஸ்ரத் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.
தன் மதத்தைச் சேர்ந்தவன் என்று கூட பாராமல் வெட்டிக்கொல்கிறவர்கள் மனிதர்களாகவே கருத முடியாது.
ஏற்கனவே சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள் இந்துத்துவ அடிப்படைவாதிகள். ஃபரூக் கொலையின் மூலம் பொதுதளத்தில் இஸ்லாமிய அடிபப்டைவாதிகளை காட்டி இந்துத்துவ அடிப்படைவாதிகள் மத அரசியல் செய்வார்கள்.
இதுபோன்ற அடிப்படைவாத செயல்களால் தமிழகத்தில் இந்துத்துவத்தை வளர்க்கும் பணியில் மறைமுகமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் துணைபுரிகிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது என்று வேதனைப்படுகிறார்கள் மனிதத்தை மட்டுமே நம்புபவர்கள்.
நன்றி
https://www.linesmedia.in/

Reviewed by NEWMANNAR
on
March 18, 2017
Rating:

No comments:
Post a Comment