உலகத்தை அழிக்க டிரம்ப் சதி திட்டம்? நாசா வெளியிட்ட பேரதிர்ச்சி தகவல்...
பூமியை நோக்கி வரும் சிறுகோளை திசை திருப்பும் நாசாவின் திட்டத்திற்கு நிதியுதவியை நிறுத்தினால் உலகம் அழிவது உண்மையாகலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 2022ம் ஆண்டு ஒரு இராட்சத சிறுகோள் பூமியின் மீது மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறுகோள் டைனோசர்கள் இனத்தை அழித்த சிறுகோள் போன்று பயங்கர சக்தியுடையதாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
இது பூமியின் மீது மோதினால் உலகில் உயிரினங்கள் அழிவது உண்மையாகிவிடும் எனவும் நாசா எச்சரித்துள்ளது.
எனினும், அந்த சிறுகோளை திசை திருப்பி பூமியை பாதுகாக்க நாசா ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளது.
தற்போது, அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் தலைமையிலான அரசு, செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்திற்காக நிதி திரட்டி வருகிறது.
அதற்காக, சிறுகோளை திசை திருப்பும் திட்டத்திற்கான நிதியுதவியை நிறுத்தி கிடப்பில் போட்டுள்ளது என நாசா குற்றம் சாட்டியுள்ளது.
சரியான நேரத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் உலகம் அழிவது உண்மையாகலாம் எனவும் நாசா மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகத்தை அழிக்க டிரம்ப் சதி திட்டம்? நாசா வெளியிட்ட பேரதிர்ச்சி தகவல்...
Reviewed by Author
on
March 30, 2017
Rating:
Reviewed by Author
on
March 30, 2017
Rating:



No comments:
Post a Comment