உலக சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்....
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 10,000 ஓட்டங்கள் கடந்து உலக சாதனை படைத்தார்.
குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
இதில் அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல், 38 பந்துகளில் 5 பவுண்டரிகள் 7 சிக்சர்களை விளாசி 77 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார்.
இதுவரை 290 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கெய்ல் 10074(743 சிக்ஸர்கள், 18 சதங்கள்) ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 10,000 ஓட்டங்கள் முதல் வீரராக எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது, ரசிகர்கள் இன்னமும் கிறிஸ் கெய்லுக்காக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்,
இந்த உலகின் பாஸ் இன்னும் இங்குதான் இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். தொடர்ந்து ரசிகர்களுக்கு அதிரடி மூலம் விருந்து படைப்பேன் என்று கூறியுள்ளார்.
உலக சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்....
Reviewed by Author
on
April 19, 2017
Rating:

No comments:
Post a Comment