பாலியல் துஷ்பிரயோகம் உரிய விசாரணை தேவை...
மூதூர், மல்லிகைத்தீவு பெரிய வெளி கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப் பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளு க்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மூதூர் பெரியவெளிக் கிராமத்தில் கடந்த 27ஆம் திகதி பாடசாலையில் அறநெறி பாடத்தைக் கற்பதற்குச் சென்ற ஏழு வயதுடைய இரண்டு சிறுமிகளும் எட்டு வயதுடைய மற்றொரு சிறுமியும் அங்கு கட்டட வேலைகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிலரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானதால் அந்தக் கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படு த்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிறுமிகள் வைத்தியப் பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கோரி நேற்று மூதூர் பகுதியில் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் இரா ஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனி டம் முறைப்பாடு தெரிவித்திருந்ததை அடுத்து திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்புகொண்ட அவர், இந் தச் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண் டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கு மாறு கோரியுள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் இனியும் தொட ர்வதற்கு அனுமதிக்க முடியாது. சிறுவர் மீதான துஷ்பிரயோகங்கள் வடக்கு, கிழக்குப் பகுதி களில் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிஸாரும் நீதித்துறையினரும் செயற்ப ட்டு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்பட் டால் தான் இத்தகைய குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும். சம்பவத்தை அடுத்து மாண வர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற் றும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
எனவே இந்த மக்களின் உணர்வுகளை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண் டும். இனிமேலும் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களைத் தடுக்க கடும் நடவடி க்கைகளை நாம் எடுக்க வேண்டும். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி விசா ரணையின் முன்னேற்றம் குறித்தும் தெரி யப்படுத்துமாறும் அதுகுறித்த அறிக்கையினை அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் சிரே ஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டு ள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகம் உரிய விசாரணை தேவை...
 Reviewed by Author
        on 
        
May 31, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 31, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
May 31, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 31, 2017
 
        Rating: 

 
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment