முல்லைத்தீவில் பொதுநூலகக் கட்டடத் தொகுதி முதலமைச்சரால் திறந்து வைப்பு...
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மரக்கறி வாணிப தொகுதி மற்றும் பொதுநூலக கட்டடத்தொகுதி இன்று(09) வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டடத்தொகுதி உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதியுதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் அமைக்கப்பட்டுள்ளது.
5.94 மில்லியன் ரூபா செலவில் புதுக்குடியிருப்பு பிரதேச பொதுநூலகமும், 9.19 மில்லியன் ரூபா செலவில் புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை வளாகத்தில் மரக்கறி வாணிபத்தொகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிகழ்விற்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண அமைச்சின் செயலாளர் ,உள்ளுராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் பொதுநூலகக் கட்டடத் தொகுதி முதலமைச்சரால் திறந்து வைப்பு...
 Reviewed by Author
        on 
        
June 09, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 09, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
June 09, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 09, 2017
 
        Rating: 

 
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment