மன்னார் இருள்மண்டிக்கிடக்கும் பாலம் இன்னும் 08நாட்களில் ஒளிரும்- செயலாளர் பிரதேச சபை பேசாலை மன்னார்
மன்னார் பேசாலையில் இருக்கும் பிரதேச சபை அலுவலகத்தில் நேரில் சென்று 18-07- 2017மன்னார் பாலம் இருள்மண்டிக்கிடக்கின்றது.
மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட 16 மின்குமிழ்களில் 09 ஒளிராமல் பறவைகளின் கூடாக இருக்கின்றது. மிகவும் விரைவாக மின்குமிழ்களை பொருத்தி ஒளியூட்டுமாறு மக்களின் கோரிக்கையை முன்வைத்த போது செயலாளார் அவர்களால் இவ்விடையம் தொடர்பாக தனது பணியாளர்களிடம் கதைத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மீண்டும் தொலைபேசியூடாக நேற்று 24-07- 2017 கதைத்தபோது இன்னும் 08 நாட்களுக்குள் பாலத்தில் உள்ள எரியாமல் இருக்கின்ற09 மின்குமிழ்களையும் ஒளிரச்செய்வதாக உறுதியளித்துள்ளார்.
மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பாலத்தின் பகுதியில் உள்ள 03 மின்குமிழ்களும் பறவைகளின் கூடாக இருக்கின்றது என நகரசபைச்செயலாளரிடம் சொன்னபோதும் அவர்களும் விரைவாக நகரப்பகுதியில் புதிதாய் பொருத்தியுள்ள ஒளிகூடிய மின்குமிழ்களை பொருத்தி தருவதாக கூறியுள்ளார்.
கடந்த 2015 ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார் (பாலத்தின் தொடக்கம் தள்ளாடி வரையான பகுதி அடிக்கடி விபத்துக்கள் இடம் பெறுவதாலும் கட்டாக்காலிகளின் (மாடுகள் மற்றும் கழுதைகள்) நடமாட்டம் அதிகம் என்பதாலும் பொது மக்களின் அசௌகரியங்களை குறைப்பதற்காகவும் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் மன்னார் பிரதேச சபையினால் சோலர் தெருவிளக்குகள் பூட்டப்பட்டமை யாவரும் அறிந்தே.
அங்கு பூட்டப்பட்டுள்ள 16 சோலர் விளக்குகள் ஒவ்வொன்றும் தலா 100000.00 ரூபா பெறுமதியானது.
சங்குப்பிட்டி பாலத்தில் இரவுப்பொழுதில் நின்று பாருங்கள் பகல் போல் இருக்கும் அதைப்போல வேண்டாம் அதில் உள்ளது போன்று ஒரு இரு மின்குமிழ்களை பொருத்தினாலே போதும்....
பாரிய விபத்துக்கள் நடைபெறுவதற்கு முன் விரைவாக செயலாற்றுங்கள்
மன்னார் பிரதேசசபை மற்றும் நகரசபை அதிகாரிகள் தமது கடமையினை சரிவர செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
தொடர்பு பட்டசெய்தி
27-06- 2017 அன்று பாலம் இருள்மண்டிக்கிடக்கின்றது செய்தியாக.....
மன்னார் இருள்மண்டிக்கிடக்கும் பாலம் இன்னும் 08நாட்களில் ஒளிரும்- செயலாளர் பிரதேச சபை பேசாலை மன்னார்
Reviewed by Author
on
July 25, 2017
Rating:

No comments:
Post a Comment