அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தின் இருள்மண்டிக்கிடக்கும் பிரதானபாதையும் பாலமும் ஒளிருமா…..???


மன்னார் மாவட்டத்தின் அழகானவிடையத்தின் முதல் இடத்தினைபெறுகின்றது மன்னார் தீவுப்பகுதியினை இணைக்கின்ற மிகவும் முக்கியமான பிரதானபாலம் ஆகும்.
இந்தப்பாலம் பகலில் அழகுஎன்றால் இரவில் மிகஅழகய் இருந்தது மன்னார் பாலம் திறந்து சிலகாலப்பகுதியாகும் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது பாலத்தின் இருகரைப்பகுதியிலும் மணலாகவும் சிறுசிறுகுப்பைகளாகவும் துப்பரவின்றி இருக்கின்றது.

அத்தோடு அங்கு பொருத்தப்பட்டிருக்கின்ற சோலர் மின்குமிழ்கள் ஒன்றிரண்டு தான் எரிகின்றது அதவும் மங்களாய்  நீண்ட நாட்களாக இருள்மண்டிகிடக்கின்றது. பாதசாரிகள் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றார்கள்  சிலர் மாலையிலும் இரவிலும் நடைப்பயிற்சி செய்வதாலும் கடல் காற்றுவாங்குவதாலும்  இன்னும் சிலர்பொழுதுபோக்கிற்காக அவ்விடத்தில் தரித்து நிற்பதாலும் தூரத்தில் இருந்து வரும் வாகனங்கள் கனரகவாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

கடந்த 2015 ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் மன்னார் (பாலத்தின் தொடக்கம் தள்ளாடி வரையான பகுதி அடிக்கடி விபத்துக்கள் இடம் பெறுவதாலும் கட்டாக்காலிகளின் (மாடுகள் மற்றும் கழுதைகள்) நடமாட்டம் அதிகம் என்பதாலும் பொது மக்களின் அசௌகரியங்களை குறைப்பதற்காகவும் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் மன்னார் பிரதேச சபையினால்சோலர் தெருவிளக்குகள் பூட்டப்பட்டமை யாவரும் அறிந்தே.
அங்கு பூட்டப்பட்டுள்ள 16
சோலர் விளக்குகள் ஒவ்வொன்றும் தலா 100000.00 ரூபா பெறுமதியானது.

நீண்ட நாட்களாக  இருள்மண்டிக்கிடக்கும் பாலத்தின் பகுதியில் நடக்கும் சீர்கேடுகள் மற்றும் விபத்துக்களை தடுப்பதற்கு இலகுவாகசெய்யவேண்டிய ஒரே விடையம் பிரகாசமான மின்குமிழ்கள் பொருத்தவேண்டியது மட்டமே….

பயணிகள் விபத்துக்குள்ளாவதோடு பெருங்காயங்களுக்கும்  உள்ளாகி அவஸ்தைப்படுகின்றார்கள் இப்பகுதிக்கு பாலத்துடன் சேர்ந்து பிரதானபாதைக்கு பொறுப்பாக மன்னார் பிரதேசசபை உள்ளது ஆனால் பிரதேச சபைஅதிகாரிகள் இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை....

 மக்களினதும் பயணிகளினதும் நன்மையினையும் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு மிகவிரைவாக புதிய நல்ல பிரகாசமான மின்குமிழ்களைப்பொருத்தி இருள்மண்டிக்கிடக்கும் பாலத்தினையும்பிரதானபாதையும் ஒளியூட்டவேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாகும்.

மன்னார் பிரதேசசபை அதிகாரிகள் தமது கடமையினை சரிவர செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம் மக்களின் விருப்பம். 

-மன்னார்விழி-
மன்னார் மாவட்டத்தின் இருள்மண்டிக்கிடக்கும் பிரதானபாதையும் பாலமும் ஒளிருமா…..??? Reviewed by Author on June 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.