மீன் குழம்பு
புளி – பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய்தூள் – 6 ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 3
பூண்டு – 2 முழு பூண்டு
தேங்காய் – 2 துண்டுகள்
கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் 10 எடுத்து துருவிய தேங்காயுடன் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். புளியை கரைத்து வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மீதமுள்ள வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இத்துடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து சுண்டியதும் மீனை இதனுடன் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைக்கவும்.
மீன் வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவவும். மீண்டும் நல்லெண்ணெயில் தாளித்து இறக்கவும்.
சுவையான மீன் குழம்பு தயார்.
மீன் குழம்பு
Reviewed by NEWMANNAR
on
July 30, 2017
Rating:

No comments:
Post a Comment