கடந்த ஆண்டு காலமான மன்னர்: நாளை உடல் அடக்கம்
கடந்த ஆண்டு இறந்த தாய்லாந்து மன்னரின் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.
தாய்லாந்து மன்னர் பூமிபால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் திகதி உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
அவருடைய உடல் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக பாங்காக் நகரில் உள்ள அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது உடல் அடக்கம் செய்வதற்காக சனம் லுவாங் என்ற இடத்தில் சொர்க்கலோகம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள மைதானம் ஒன்று தயார் நிலையில் உள்ள நிலையில்,புத்த மத சம்பிரதாயத்தின் படி அவரது உடல் அடக்கத்திற்கான ஐந்து நாள் நிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளன.
மன்னரின் உயிரிழப்பு நாட்டு மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பொதுமக்கள் அரண்மனை வளாகத்தில் குவிந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
கடந்த ஆண்டு காலமான மன்னர்: நாளை உடல் அடக்கம்
Reviewed by Author
on
October 26, 2017
Rating:

No comments:
Post a Comment