நான் 2028-ஆம் ஆண்டில் இருந்து வருகிறேன்: டைம் டிராவல் மிஷின் மூலம் 2017-க்கு வந்துள்ள அதிசய நபர் -
அமெரிக்காவைச் சேர்ந்த நோவல் என்பவர் நான் 2028-ஆம் ஆண்டில் இருந்து வருவதாகவும், அமெரிக்க அரசாங்கம் தற்போது உள்ள மக்களுக்கு டைம் மிஷின் என்கின்ற ஒன்று இருக்கிறது என்பதை விளக்கவே தற்போது வந்துள்ளதாக கூறியுள்ளார்.
தனக்கு 50 வயது என்று கூறிக்கொள்ளும் அவர், இது தொடர்பான வீடியோ ஒன்றை யூ டியூப்பில் வெளியிட்டுள்ளார்.
அதில், 2003-ஆம் ஆண்டே டைம் மிஷின் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது, உலகின் முக்கிய பணக்காரர்கள் பலர் இந்த செய்தியை மறைத்து வைத்துள்ளனர். இந்த செய்தி மக்களுக்கு 2025-ஆம் ஆண்டு தான் தெரியவரும் என்று கூறியுள்ளார்.
தற்போது உள்ள உலகத்திற்கும், 2028-ஆம் ஆண்டு உள்ள உலகத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும்,எதிர்காலத்தில் நிறைய தொழில்நுட்பங்கள் மாறியிருப்பதாகவும். கூகுள் வெளியிட்டு இருக்கும் பொருட்கள் பல எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.
டைம் டிராவல் காரணமாக அவருக்கு அடிக்கடி தலை வலிப்பதாகவும், உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதாகவும், அதன்படி அடுத்த முறையும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார்.
பொதுவாக பல நபர்கள் அமெரிக்காவில் தன்னை எதிர்காலத்தில் இருந்து வந்தவர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் 2028-ஆம் ஆண்டில் இருந்து வருகிறேன்: டைம் டிராவல் மிஷின் மூலம் 2017-க்கு வந்துள்ள அதிசய நபர் -
Reviewed by Author
on
November 27, 2017
Rating:

No comments:
Post a Comment