மன்னார் அம்மாச்சி உணவகத்தின் அவல நிலை-(படங்கள் )
வடமாகாண விவசாய அமைச்சினால் மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவகம் கிளிநொச்சி,வவுனியா,யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றமை யாவரும் அறிந்தது.
அதே வேளை மன்னார் மாவட்டத்திலும் யாருக்கும் தெரியாது இரகசியமான முறையில் இரகசியமான இடத்திலும் அமைக்கப்பட்டு வருவது எவருக்கும் தெரியாத விடயம்.
மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் உள்ள அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினுள் நீண்ட காலமாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது.
முன்னர் அது மாடு சினப்படுத்தும் நிலையம் என்று கூறப்பட்டது. தற்போது இது தான் மன்னார் மாவட்டத்துக்கான அம்மாச்சி உணவகம் என்று கூறப்படுகின்றது.
இதை அமைக்கும் திணைக்களம் இது பற்றி சிந்திக்கவில்லையா அல்லது ஊழல் மோசடியை மேற்கொள்ளவென இடம் தீர்மானிக்கப்பட்டதா? இவ்விடத்தை தெரிவு செய்தது யார்? இவ்விடத்துக்கு அனுமதி வழங்கியது யார்? இக்கட்டடம் அமைக்க நிதியை விடுவித்தது யார்? என்ற பல கேள்விகள் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறித்த அம்மாச்சி உணவகம் அமைப்பதற்கு சுமார் ஒரு கோடியே இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Reviewed by NEWMANNAR
on
November 01, 2017
Rating:

No comments:
Post a Comment