அவுஸ்திரேலியா சென்று வந்தவருடன் திருமணம் நிச்சயம்! மாணவி சடலமாக மீட்பு
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொம்மாதுறை பகுதியில் க.பொ.த.உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கொம்மாதுறை - சுடரொளி வீதியை அண்மித்துள்ள வீட்டில் வசிக்கும், செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு முதலாம் ஆண்டில் கல்வி பயிலும், இராசன் விதுஷிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடைசியாக இவர் கடந்த திங்கட்கிழமை (30.10.2017) பாடசாலைக்கும் அதன்
பின்னர் மாலையில் பிரத்தியேக வகுப்புக்கும் சென்று வந்துள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையிலேயே இந்த மாணவி வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த மாணவிக்கு தன்னிலும் பார்க்க சுமார் 13வயது கூடிய, அவுஸ்திரேலியா சென்று திரும்பியிருந்த ஆடவர் ஒருவரை பெற்றோர் திருமணத்துக்காக நிச்சயித்திருந்ததாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா சென்று வந்தவருடன் திருமணம் நிச்சயம்! மாணவி சடலமாக மீட்பு
Reviewed by Author
on
November 02, 2017
Rating:

No comments:
Post a Comment