எரிவாயு GAS விலை அதிகரிப்பு...பாவனை குறைவு...மக்கள் கவலை....
தற்போதைய சூழலில் அன்றாடப்பொருட்களின் விலைவாசியானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது வழமையான விடையமாகி விட்டது நாட்டின் பொருளாதார அரசியல் காரணிகளாலும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றினால் ஏற்படும் மாற்றங்களால் விலைவாசி உயர்வதாக அதிகாரிகள் வியாபார முகவர்கள் கூறிக்கொண்டாலும் பாதிக்கபடுவது என்னவோ மகக்ள் தான் அதிலும் குறிப்பாக ஏழை மக்களும் அன்றாடக்கூலித்தொழிலாள்ர்களும் தான்.
- தேங்காய் விலை 75ரூபாய் முதல் 100 ரூபாய்க்கும் கிடைக்காமல் உள்ளது
- மீன் விலை (நல்ல தரமான மீன்கள் ஏற்றுமதி செய்துவிட்டு மிகுதியை.....
- அரிசி அத்தியவசியப்பொருட்களின் விலைகள் சொல்லவே தெவையில்லை
ஆம் அப்படியான விலையேற்றம் கண்டுள்ள ஒரு முக்கிய பொருள் தான் எரிவாயு GAS ஆகும் மன்னாரைப்பொறுத்தவரையில் அதிகமான மக்கள் எரிவாயுவினைத்தன் அதிகம் பாவிக்கின்றார்கள்.
இந்த எரிவாயுவானது GAS-சிலிண்டர் நீலம் மஞ்சள் வண்ணத்தில் பல நிறைகளில்
- 3KG-309 ரூபா
- 5KG -630ரூபா
- 12.5KG -1330ரூபா-தற்போது 1450ரூபா
- 13.5KG-1450ரூபா---தற்போது 1526 ரூபா விலைகளில் கிடைக்கின்றது. விலை அதிகரிப்பு ஏற்ற்க்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் அந்த விலைக்குரிய பொருளான எரிவாயு இருக்கவேண்டும் அல்லவா ஆனால் அவ்வாறில்லை இதற்கு என்ன காரணம்
- நிறை சரியாகவுள்ளதா....???
- சமையல் எரிவாயுவுக்கு பதிலாக வேற வாயு நிரப்பப்படுகின்றதா....???
- வெறும் காற்று நிறப்பபடுகின்றதா...???
- சிலிண்டர் எரிவாயு இல்லாமலே நிறையை காட்டுகின்றதா...??? சந்தேகங்கள் எழுகின்றன.......
மன்னாரில் உள்ள விற்பனை முகவர்களிடம் மக்கள் முறைப்பாடு செய்தபோதும் எந்தவிதமான் தீர்வும் கிடைக்கப்பெறவில்லை என மக்கள் கவலையடைந்துள்ளனர்.
விலை ஏற்றத்தால் அரசும் நிறுவனமும் பாதிக்கப்படுவதில்லை..... பாதிக்கபடுவது நுகர்வோராகிய மக்கள் நாம் தான் சம்மந்தப்பட்டவர்கள் மிகவிரைவாக இப்படியான விலையதிகரிப்புகுக்ம் ஏமாற்று வேலைக்கும் உரிய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது மக்களினது வேண்டுகோளும் எதிர்பார்ப்பும் ஆகும்.
தீர்வு கிடைக்குமா......
-மன்னார் விழி-
எரிவாயு GAS விலை அதிகரிப்பு...பாவனை குறைவு...மக்கள் கவலை....
Reviewed by Author
on
December 23, 2017
Rating:

No comments:
Post a Comment