மன்னாரில் தண்ணீர் தண்ணீர்...காலையிலே வீதியில்....டெங்கு அதிகாரிகளால் நீர்தொட்டிகள் உடைத்ததால்
மன்னாரில் இரண்டுமே தட்டுப்பாடுதான் (மின்சாரம்-தண்ணீர்) தற்போதைய சூழலில் மழைபெய்து வீடு வளவுகள் தண்ணீர் வெள்ளம் நிற்கின்றது அதனால் மக்கள் படும் வேதனை சொல்லிவிட முடியாது.
அதற்குள் டெங்கு பரிசோதனை அதிகாரிகள் வீடு வீடாக வந்து பரிசோதிப்பதால் அவர்களின் தண்டப்பணம் அதிகரிப்பு போன்ற காரணத்தினால் வக்குகள் சம்தொட்டிகள் போன்றவற்றினை உடைத்துவிட்டபடியால் சிறு வாளிகள் குடங்களில் போத்தல்களில் பாவனைக்கான தண்ணீரை பெறுகின்றனர் அத்தோடு பைப்பை திறந்தால் தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கும் போது இப்ப்டி அதிகாலையில் 2மணித்தியாலங்கள் தண்ணீர் வராமையால் மக்கள் பட்ட பாடு ....
ஒரு சம் தொட்டிகள் கட்டுவதற்கு கிட்டத்தட்ட செலவுகள் 150000 ரூபா வரும் அப்படி செலவு செய்து கட்டியதை இலகுவா உடைத்துவிடலாம் ஆனால் அதற்கு பின்பு ஏற்படும் இவ்வாறான பிரச்சினைகளை கருத்தில் யாரும் கொள்வதில்லை.
மன்னார் இயல்பாகவே சதுப்புநிலம் நீர்தேங்கி நிக்கும் ஆக அதற்கான தீர்வுகளைத்தான் இனம் கானவேண்டும்
- சம்தொட்டிகள் உடைப்பு
- மருந்துப்பொட்டலங்கள் போடுதல்(சிலரக்கு அலர்ஜி பாதிப்பு உள்ளது)
- மீன்குஞ்சுகள் விடுதல் நல்லது பாதிப்பில்லை
நல்ல முறையான தீர்வு ஒன்றை கொண்டுவரவேண்டும் மக்களின் நலன் கருதி செயற்படும் போது அது மக்களை எந்த வகையிலும் பாதிப்பில்லாத வகையில் இருத்தல் அவசியம்.
- டெங்கு நுளம்பு அதிரிப்பு கட்டுப்படுத்த வேறவழிமுறைகளை கையாளவேண்டும்.
வக்குகள் சம் நீர்தொட்டிகளை உடைப்பதால் எந்தப்பலனும் இல்லை
பாதிக்கப்படும் மக்களின் நிலையினை அதிகாரிகளும் ஏனையவர்களும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
நீர் இன்றி-----
பைப்லைன் உடைபடுவதால் (உடைப்பதால்) ஒருவருக்கு மட்டும் அல்ல பிரச்சினை மக்களுக்கும் தான்...
மன்னாரில் தண்ணீர் தண்ணீர்...காலையிலே வீதியில்....டெங்கு அதிகாரிகளால் நீர்தொட்டிகள் உடைத்ததால்
Reviewed by Author
on
December 23, 2017
Rating:

No comments:
Post a Comment