நல்லாட்சியிலும் பாதிக்கப்படும் தமிழ்பரிட்சாத்திகள்---நமக்கென்ன என்று இருக்கும் தமிழ்தலைமைகள்....
நாங்கள் (தமிழ் பரீட்சார்த்திகள்) மிகுந்த துன்பங்களை கடந்து வந்ததால் அவற்றை எமது அனுபவங்களாக பெற்று விழித்துக்கொண்டோம். பல காரணங்களால் பரீட்சை எழுதும் சந்தர்ப்பங்களை இழந்தோம். இதனால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பல ஆசான்களை தேடியே நம் அறிவைப் பெற்றுக்கொண்டோம். நாம் எலலோரும் ஒரே தடவையில் பரீட்சை எழுதியதால் நம் பெறுபேறுகளும் அண்ணளவாக ஒரே தரத்தில் அமைந்திருக்கலாம்.
எமது குடும்ப கடமைகள் பலவற்றை புறந்தள்ளி இரவு பகலாக கஸ்ரப்பட்டு முயற்சி செய்தோம். நல்லாட்சி அரசின் இம் முடிவை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை.
நாம் மிகுந்த உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக உணர்கின்றோம்.
தமிழ் பரீட்சார்த்திகள் யாருக்கும் எந்த வினாத்தாளும் முன்னரே கிடைத்திருக்க சந்தர்ப்பமே இல்லை.
நல்லாட்சி அரசு எம்மில் கரிசணை கொண்டு பெறுபேற்றை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் முழு முயற்சி செய்த நம் முஸ்லிம் சிங்கள உறவுகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
பல சந்தர்ப்பங்களில் 5/10 ஆக தெரிவு செய்யப்பட வேண்டியவர்கள் ஒன்றாக தோற்றி விட்டார்கள். இதை விட வேறெந்த தவறும் இங்கு இடம்பெற சந்தர்ப்பமேயில்லை.
இதற்கான உண்மையான காரணத்தினை பரீட்சை திணைக்களம் வெளியிட வேண்டும். சகோதர மொழி பரீட்சார்த்திகள் சமூக வலைத்தளங்களில் தமிழ் பரீட்சார்த்திகள் மீது குறிப்பாக யாழ்ப்பாண பரீட்சை மண்டபத்திலே தான் மோசடிகள் இடம்பெற்றதாக தமது விமர்சனங்களை உண்மைக்கு புறம்பாக பதிவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் எமது கல்வியாளர்கள் ஒன்றினைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் தமிழ் பரீட்சார்த்திகளில் முறைகேடான முறையில் தான் கடந்த கால பரீட்சையில் சித்தியடைந்ததாக சித்தரிக்கப்படுவார்கள். எதிர் காலத்திலும் அவ்வாறே சித்தரிக்கப்படுவார்கள்...
- இலங்கை_கணக்காளர்_சேவை_III க்கான போட்டிப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டமை தமிழ் மக்களுக்கு நல்லாட்சி அரசு மீண்டும் ஓர் ஏமாற்று வேலையை காட்டியுள்ளது.
நேற்றைய தினம் (24.11.2017) இலங்கை கல்வி நிர்வாக சேவையினருக்கான நியமன கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய கல்வி அமைச்சர் கடந்த முறை நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் ஒரு பாடத்தையும் (IQ) மற்றும் இலங்கை கணக்காளர் சேவைப் பரீட்சை முழுவதனையும் இரத்துச் செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கான உண்மையான காரணம் என்ன ??
இதற்காக நீதியான விசாரணை நடாத்தப்பட்டதா??
அல்லது நடாத்தப்படுமா??
- SLAS : குறித்த பரீட்சையில் IQ வினாப்பத்திரத்தில் உள்ள சுமார் 40 வினாக்கள் திரு.உமாசங்கர் அவரால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் உள்ள வினாக்கள் ஆகும். இது அனைத்தும் கடந்தகால பரீட்சை வினாத்தாள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சிங்கள நாளிதழில் ஓர் கட்டுரையும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது)
- SLAcS : இப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணங்கள் தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் வினாத்தாள் திருத்தும் போது ஏற்பட்ட மோசடி,
- பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் 70% தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்கள்,
- பரீட்சை வினாத்தாள் முன்னரே வெளியாகியிருந்தமை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
இதில் உண்மையிலே தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகள் சித்தியடைந்தமையே இதற்கான காரணமாகும். ஏனெனில் பரீட்சை வினாத்தாள்கள் கடந்த கால பரீட்சை வினாக்களையும், அவ் வினாக்களை ஒத்த தன்மையுடைய வினாக்களையுமே கொண்டிருந்தமையாகும். இவ் வினாப்பத்திரங்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படலாம். எனவே பரீட்சை வினாத்தாளில் மோசடி ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை.
கூடுதலான தமிழ் மாணவர்கள் சித்தியடைந்தமையினால் வினாத்தாள் திருத்தத்தின் போது மோசடி என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கலாம். கடந்த காலங்களில் நடைபெற்ற பரீட்சையில் சிங்கள மாணவர்களின் சித்தி வீதம் மிக கூடுதலாக இருந்த போது இது தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை.
அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் பரீட்சையொன்றில் சித்தி வீதமானது கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ காணப்படலாம். (இலங்கை திட்டமிடல் சேவைப் பரீட்சயொன்றிலே ஒரு தமிழ் மொழி மூல பரீட்சார்த்தியேனும் சித்தியடைந்திருக்கவில்லை)
கடந்த காலங்களில் ஓருவர் பட்டத்தினை பெறுவதற்கு 6,7,8 வருடங்கள் எடுத்திருந்தன. போட்டிப் பரீட்சைக்கான வயதெல்லையும் 28 ஆக காணப்பட்டிருந்தது. பரீட்சை வழிகாட்டல் வகுப்புக்கள் இடம் பெற்றிருக்கவில்லை. அத்துடன் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற ஆர்வமும் கூடுதலாக காணப்படவில்லை. ஆனால் இன்று குறிப்பிட்ட நிலைமை மாறியுள்ளது. இதனால் தமிழ் மொழி மூல பரீட்சார்த்திகளின் சித்தி வீதமும் அதகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.
இவ்வாறான பரீட்சையில் சித்தியடைந்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் பலரது கனவுகள் இவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்படலாகாது. தமது நேரத்தினையும், பணத்தினையும் செலவழித்து தமது பிள்ளைகளை, குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய பணிகளை விட்டு விட்டு இப்போட்டிப் பரீட்சைக்காக தங்களை தயார்படுத்தியவர்களை ஏமாற்றுவது நல்லாட்சியா???
உயர்தரப் பரீட்சையில் நடைபெற்ற மோசடிகளை மூடி மறைத்த நல்லாட்சியினர் மோசடிகள் இடம்பெறாத இப் பரீட்சையை இரத்துச் செய்வது தமிழ் என்பதாலா?? உரிய காரணங்கள் இன்றி இரத்துச் செய்வது அனைத்துப் பரீட்சார்த்திகளினதும் (தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல) எதிர்பார்ப்பை, முயற்சியை வீணடிப்பதாகும்.
இவ் விடயம் பற்றி எம் பழுத்த அரசியல்வாதிகள் வாய் திறப்பார்களா??
அல்லது இவ்விடயம் பற்றி பேசினால் அரசியல் உரிமைகளை கேட்க முடியாமல் போய்விடும் என்று மெளனம் காப்பார்களா??
இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள தயாராகுங்கள்...
குறிப்பு : இத் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் போனால் முன்னர் இப் பரீட்சைக்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சியினை விட கூடுதலான முயற்சியை எடுக்கவும்.
விடா முயற்சி விஸ்வரூப_வெற்றி
-நன்றி-
(VIDEO LINK)https://m.facebook.com/story.php...
நல்லாட்சியிலும் பாதிக்கப்படும் தமிழ்பரிட்சாத்திகள்---நமக்கென்ன என்று இருக்கும் தமிழ்தலைமைகள்....
Reviewed by Author
on
December 05, 2017
Rating:

No comments:
Post a Comment